search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா ஹேரியர்
    X
    டாடா ஹேரியர்

    விரைவில் இந்தியா வரும் டாடா ஹேரியர் ஆல் பிளாக் எடிஷன்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஹேரியர் காரின் ஆல்-பிளாக் எடிஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு அடிக்கடி புதுப்புது அம்சங்களை பெற்று வருகிறது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் எஸ்.யு.வி. காரின் ஆல்-பிளாக் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    டாடா ஹேரியர் பிளாக் எடிஷன் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது ஹேரியர் காருக்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது அப்டேட் ஆகும். முன்னதாக காரின் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டது. டூயல்-டோன் ஃபினிஷ் வேரியண்ட் சமீபத்தில் 10,000 யூனிட்கள் விற்பனையை கடந்ததாக டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

    டாடா ஹேரியர் ஆல்-பிளாக் ஸ்பை படம்

    புதிய கருப்பு நிறத்தில் எஸ்.யு.வி. பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புறங்களில் பிளாக்டு-அவுட் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் உள்புறத்திலும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் பிரவுன் நிற இருக்கைகளும் புதிய காரில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் டேஷ்போர்டில் உள்ள ஃபாக்ஸ் மர பேனலும் சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய ஆல்-பிளாக் தவிர ஹேரியர் கார் அட்லஸ் பிளாக், கலிஸ்டோ காப்பர், தெர்மிஸ்டோ கோல்டு, ஆர்கஸ் வைட், டெலிஸ்டோ கிரே மற்றும் ஏரியல் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    டாடா ஹேரியர் கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஜீப் காம்பஸ் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: AutocarIndia
    Next Story
    ×