search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா இ-கே.யு.வி.100
    X
    மஹிந்திரா இ-கே.யு.வி.100

    மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் மஹிந்திரா

    மஹ்ந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 2021-க்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் வரும் ஆண்டுகளில் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இ-கே.யு.வி.100, இ-எக்ஸ்.யு.வி.300 மற்றும் மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட ஃபோர்டு ஆஸ்பையர் பெயரில் அறிமுகமாகிறது.

    இ.கே.யு.வி.100 விற்பனை இந்த ஆண்டிற்குள் விற்பனைக்கு வரும் என்றும், எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி.300 2020 ஆம் ஆண்டிலும், மஹிந்திராவின் ஃபோர்டு ஆஸ்பையர் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களுடன் மஹிந்திரா இ-வெரிட்டோவும் கிடைக்கும். 

    மஹிந்திரா இ-கே.யு.வி.100

    சமீபத்தில் மஹிந்திரா எலெக்ட்ரிக் தனது இ2ஒ காரின் விற்பனையை நிறுத்தியது. பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தாது என்பதால், இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டது.

    மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய இ.வி. வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் ஏற்கனவே விற்பனையாகும் மாடல்களை போன்று இல்லாமல் புதிய பிளாட்ஃபார்ம் முற்றிலும் புதிதாக உருவாக்கப்படுகின்றன.

    புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் 2022 அல்லது 2023 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மஹிந்திரா இ-கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
    Next Story
    ×