என் மலர்
கார்
- ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் எஸ்யுவி மாடல் விலை மீண்டும் முன்பதிவு செய்யப்படுகிறது.
- புதிய ஸ்கோடா கோடியக் மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் விலை ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ல்கோடா கோடியக் மாடல் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் L&K என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு துவங்கிய கையோடு கார் மாடல் விலையையும் ஸ்கோடா நிறுவனம் உயர்த்தி இருக்கிறது. ஸ்கோடா கோடியக் எஸ்யுவி மூன்று வேரியண்ட்களின் விலையும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த காருக்கான புதிய முன்பதிவுகள் 2023 முதல் காலாண்டுக்கானது ஆகும். 2023 ஆண்டுக்கான முன்பதிவு பல கட்டங்களாக பின்னர் துவங்கும். 2023 முதல் காலாண்டிற்கான வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
ஸ்கோடா கோடியக் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஸ்கோடா கோடியக் ஸ்டைல் ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம்
ஸ்கோடா கோடியக் ஸ்போர்ட்லைன் ரூ. 38 லட்சத்து 49 ஆயிரம்
ஸ்கோடா கோடியக் L&K ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் 2022 டக்சன் மாடல் இந்திய விலை விவரங்கள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டு விட்டது.
- 2022 டக்சன் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் புதிய இண்டீரியர் கொண்டுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டக்சன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் விலை ரூ. 27 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஜூலை 18 ஆம் தேதி துவங்கியது.
2022 ஹூண்டாய் டக்சன் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், புதிய இண்டீரியர் மற்றும் அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது. இந்த எஸ்யுவி மாடல் கூர்மையான தோற்றம், ஹூண்டாய் பாராமெட்ரிக் ஜூவல் டிசைன் கிரில், எல் வடிவ எல்இடி டிஆர்எல்-களை கொண்டிருக்கிறது. இதன் கேபின் ஸ்ப்லிட் ரக காக்பிட் தோற்றம் கொண்டுள்ளது. இதில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமெண்ட் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் லெவல் 2 ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் பிளைண்ட் ஸ்பாட், கிராஸ் டிராபிக் கொலிஷன் வார்னிங் மற்றும் அவாய்டன்ஸ் அம்சங்கள் உள்ளன. இவற்றுடன் 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டரிங், புளூ லின்க் கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம், போஸ் ஆடியோ சிஸ்டம், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற சீட்கள் உள்ளன.
2022 ஹூண்டாய் டக்சன் மாடல் 2.0 லிட்டர், நான்கு சிலண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 2 லிட்டர் என்ஜின் 154 ஹெச்பி பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 184 ஹெச்பி பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் காரின் வேரியண்ட்களில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
- டாடா டிகோர் புது வேரியண்ட் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
L மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் CNG சீரிசில் புது காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டிகோர் XM வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் வரை குறைவு ஆகும். இதன் விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா டிகோர் XZ மற்றும் XZ+ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 7 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய XM வேரியண்ட் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் ஹார்மன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர்கள், பவர் விண்டோக்கள், செண்ட்ரல் லாக்கிங் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்களை கொண்டுள்ளது.

இந்த கார் டேடோனா கிரே, ஒபல் வைட், அரிசோனா புளூ மற்றும் டீப் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. டாடா டிகோர் CNG மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. டாடா டிகோர் மாடல் லிட்டருக்கு 26.49 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
டாடா டிகோர் XZ மற்றும் XZ+ வேரியண்ட்களை வாங்குவோருக்கு தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டூயல் டோன் பிளாக் மற்றும் பெய்க் நிற தீம், ரியர் பார்க்கிங் கேமரா, முன்புறம் பாக் லேம்ப்கள், கூல்டு குளோவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.
- ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
- சலுகைகள் மூலம் பண்டிகை கால விற்பனை அதிகரிக்கும் என ரெனால்ட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாத சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் ரெனால்ட் க்விட், ரெனால்ட் டிரைபர் மற்றும் ரெனால்ட் கிகர் என மூன்று கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்களுமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இடம்பிடிக்க ரெனால்ட் நிறுவனம் தடுமாறி வந்த நிலையில் தான் ரெனால்ட் க்விட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எண்ட்ரி லெவல் பிரிவில் ரெனால்ட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியது.

மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் ரெனால்ட் க்விட் காரை வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
சப்-4 மீட்டர் எம்பிவி மாடலான ரெனால்ட் டிரைபர் வாங்குவோர் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இந்த சலுகை மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் குஜராத் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெறலாம். டிரைபர் லிமிடெட் எடிஷன் மாடலுக்கு மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்களை பெறலாம்.
கேரளா மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 35 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெறலாம். மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. ரெனால்ட் கிகர் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. மற்ற மாடல்களை போன்று இல்லாமல் கிகர் மாடலுக்கு நாடு முழுக்க ஒரே மாதிரியான பலன்களே கிடைக்கின்றன.
- ஹூண்டாய் நிறுவன கார் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.
- சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு மட்டும் பொருந்தும்.
இந்தியாவில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும்.

இதே காரின் 1.2 லிட்டர் வேரியண்ட் (ஆரா மட்டும்) ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா மற்றும் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் CNG வேரியண்ட் வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் i20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் வழங்கப்படும். ஹூண்டாய் கிரெட்டா, வென்யூ, வெர்னா, அல்கசார் மற்றும் i20 N லைன் போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிக பலன்கள் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மட்டும் வழங்கப்படுகிறது. டாடா ஹேரியர், சபாரி போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
அல்ட்ரோஸ் மற்றும் டியாகோ போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஓனம் பண்டிகைக்காக கார் முன்பதிவு செய்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 95 சதவீதம் வரை ஆன்-ரோடு பைனான்ஸ் வசதியை வழங்குகிறது.
இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் PSU-க்கள், தனியார் மற்றும் வட்டார நிதி வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான நிதி சலுகைகள் கிடைக்கிறது.

"இந்த பகுதியில் வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள தலைசிறந்த வாய்ப்புகளை வழங்குவதால் கேரளா மிக முக்கிய சந்தை ஆகும். தொடர்ந்து வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை கொடுப்பதால், 72 சதவீத வாடிக்கையாளர்கள் வேறு பிராண்டிற்கு மாறாமல் உள்ளனர். இது நாட்டிலேயே மிகவும் அதிகம் ஆகும். நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுடன் ஓனம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக நாங்கள் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறோம்."
"ஓனம் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் எங்களின் முற்றிலும் புதிய கார் மாடல்களுடன் புதிய தொடக்கத்திற்கு ஆயத்தமாவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஹேச் மற்றும் எஸ்யுவிக்களுக்கு கேரளா மிக சிறந்த சந்தை ஆகும். எங்களின் டியாகோ, பன்ச் மற்றும் நெக்சான் போன்ற மாடல்கள் கேரளாவில் அதிக விற்பனையாகும் டாப் 10 மாடல்களில் இடம்பிடித்துள்ளன," என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவி துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.
- ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடலின் இந்திய வெளியீட்டை திடீரென நிறுத்தி விட்டது.
- இந்த காரின் புது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் வெளியீட்டை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மாற்றி இருக்கிறது. முன்னதாக இந்த கார் இன்று (ஆகஸ்ட் 04) அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இதன் டீசல் என்ஜினுடன் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.
முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன.
- மாருதி சுசுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா மாடலை நான்கு வேரியண்ட்கள், ஒன்பது விதமான நிறங்களில் அறிமுகம் செய்தது.
- இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்தது. புதிய பிரெஸ்ஸா மாடலை வாங்க இதுவரை சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது. புதிய மேம்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நான்கு வேரியண்ட்கள், ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கிறது.
2022 பிரெஸ்ஸா மாடலில் டூயல் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள், மெல்லிய ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் பின் ஆண்டெனா, 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்களை சுற்றி பிளாஸ்டிக் கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஒன்பது இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் பாயிண்ட்கள் உள்ளன.
புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் மேம்பட்ட மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் கியா சொனெட், டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யு, நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜூலை மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
- அதன் படி டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 57 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 2022 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன் படி டாடா வாகன விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்து இருக்கிறது. ஜூலை 2022 மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 47 ஆயிரத்து 505 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் டாடா நிறுவனம் 30 ஆயிரத்து 184 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் டாடா நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 57 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நெக்சான் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தொடர்ந்து நீடிக்கிறது.

ஒட்டுமொத்த சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களின் முதல் ஐந்து மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் தவிர பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களும் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன. ஜூலை 2022 மாத விற்பனையில் 64 சதவீதம் எஸ்யுவி-க்கள் மட்டும் அடங்கும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 105 சதவீதம் அதிகம் ஆகும்.
டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி மாடல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் ஆல்பா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். இந்த கார் மட்டும் 11 ஆயிரத்து 007 யூனிட்கள் விற்பனையானது.
- மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கிய ஒரே நிமிடத்தில் புதிய ஸ்கார்பியோ N காரை வாங்க 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுக்க 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து விட மஹிந்திரா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வினியோகத்தில் ஸ்கார்பியோ N Z8L வேரியண்டிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் வினியோகம் பற்றிய தகவல்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N வேரியண்ட்களின் விலை முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த நிறம் மற்றும் வேரியண்ட் போன்ற விவரங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்படும் வேரியண்ட் மற்றும் நிறம் இறுதியானது ஆகும். இந்த தேதிக்கு பின் வேரியண்ட் மற்றும் நிறங்களை மாற்றிக் கொள்ள முடியாது.
புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலை வாங்குவோர் 6.99 சதவீத வட்டியில் மாதாந்திர தவணையை பெறலாம். இத்துடன் காரின் ஆன் ரோடு கட்டணத்தில் 100 சதவீதம் வரை நிதி சலுகை வழங்கப்படுகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்கார்பியோ N மாடல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான முன்பதிவு இன்று தான் துவங்கி இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை விவரங்கள் முதலில் முன்பதிவு செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்குகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ N காரை முன்பதிவு செய்வோர் காரின் வேரியண்ட் மற்றும் நிற ஆப்ஷன்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்படும் வேரியண்ட் மற்றும் நிறம் இறுதியானது ஆகும்.
புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலை வாங்குவோர் 6.99 சதவீத வட்டியில் மாதாந்திர தவணையை பெறலாம். இத்துடன் காரின் ஆன் ரோடு கட்டணத்தில் 100 சதவீதம் வரை நிதி சலுகை வழங்கப்படுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
- முன்னதாக நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை 0.55 சதவீதம் வரை உயர்த்துவதாக இந்த மாத துவக்கத்தில் அறிவித்து இருந்தது. விலை உயர்வு ஜூலை 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அப்போது கார் மாடல்கள் விலை அதிகபட்சமாக ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
இந்த வரிசையில், தற்போது டாடா நெக்சான் விலை ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதே போன்று டாடா சபாரி மாடலின் விலை ரூ. 15 ஆயிரமும், அல்ட்ரோஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. டாடா பன்ச் மற்றும் டாடா ஹேரியர் மாடலின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.

டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலே தற்போது நெக்சான் EV பிரைம் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி சலுகைகள் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எளிய மாத தவணையில் கார் வாங்கிக் கொள்ள முடியும்.






