search icon
என் மலர்tooltip icon

    கார்

    விரைவில் ஹைரைடர் விலை விவரங்கள் வெளியீடு?
    X

    விரைவில் ஹைரைடர் விலை விவரங்கள் வெளியீடு?

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடலை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    டொயோட்டா நிறுவனம் ஹைரைடர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலையை அடுத்த வாரம் அறிவிக்க இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. ஹைரைடர் மாடலை வாங்குவோர் பெரும்பாலும் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷனையே தேர்வு செய்து வருகின்றனர்.

    புதிய ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு மற்றும் செல்ப் சார்ஜிங் ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்றே 105 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் 116 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும். இந்த கார் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.


    டிரான்ஸ்மிஷனுக்கு மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள், ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷனுக்கு e-CVT ஆப்ஷன் வழங்கப்படுகிறது. மைல்டு ஹைப்ரிட் மேனுவல் வேரியண்ட் உடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை துவங்கும் என எதிர்பார்க்கலாம். இதன் எண்ட்ரி லெவல் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். புதிய ஹைரைடர் மாடல் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷக் மற்றும் போக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×