என் மலர்

  கார்

  ஹூண்டாய் வென்யூ N லைன் இந்தியாவில் அறிமுகம்
  X

  ஹூண்டாய் வென்யூ N லைன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய N லைன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புதிய வென்யூ N லைன் மாடல் விலை விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.

  ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி-இன் புது மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N லைன் மாடல் ஆகும். புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.


  இந்த காரின் விலை விவரங்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வெளிப்புறம் ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் முன்புறம் டார்க் க்ரோம் கிரில், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்கள், ஃபோர், ஆஃப்ட் பம்ப்பர்கள், பக்கவாட்டு மற்றும் ரூஃப் ரெயில்களில் ரெட் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இந்த கார் 16 இன்ச் அலாய் வீல்கள், ஹப் கேப்களில் N லோகோ வழங்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

  Next Story
  ×