என் மலர்

  கார்

  ரூ. 12 லட்சம் பட்ஜெட்டில் ஹூண்டாய் வென்யூ N லைன் இந்தியாவில் அறிமுகம்
  X

  ரூ. 12 லட்சம் பட்ஜெட்டில் ஹூண்டாய் வென்யூ N லைன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வென்யூ N லைன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த கார் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N லைன் மாடல் ஆகும்.

  ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ N லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வென்யூ N லைன் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹூண்டாய் வென்யூ N லைன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

  வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யுவி-இன் ஸ்போர்ட் வேரியண்ட் ஆக புதிய N லைன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் இந்திய சந்தையில் இது ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N லைன் மாடல் ஆகும். புதிய வென்யூ N லைன் மாடலின் வெளிப்புறம் டார்க் க்ரோம் கிரில், ரூப் ரெயில்கள், பம்ப்பர் பெண்டர், சைடு சில் உள்ளிட்டவைகளில் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் கிரில் மீது N லைன் சின்னம் இடம்பெற்று இருக்கிறது.


  இத்துடன் டெயில்கேட் பக்கவாட்டு பெண்டர்கள், ரூப் ஸ்பாயிலர், ட்வின் டிப் எக்சாஸ்ட் மற்றும் புதிய 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் பிளாக் நிற இண்டீரியர், ரெட் அக்செண்ட்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், புளூ லின்க் கனெக்டிவிட்டி, அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், லெதர் இருக்கைகள் மற்றும் N லைன் பிராண்டிங் வழங்கப்பட்டு உள்ளது.

  மேலும் பேடில் ஷிப்டர்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, OTA அப்டேட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ரிவைஸ்டு ஸ்டீரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.


  2022 ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

  இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் கியா சொனெட், டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300 மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

  விலை விவரங்கள்:

  வென்யூ N லைன் N6 DCT ரூ. 12 லட்சத்து 16 ஆயிரம்

  வென்யூ N லைன் N6 DCT டூயல் டோன் ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம்

  வென்யூ N லைன் N8 DCT ரூ. 13 லட்சத்து 15 ஆயிரம்

  வென்யூ N லைன் N8 DCT டூயல் டோன் ரூ. 13 லட்சத்து 30 ஆயிரம்

  அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×