என் மலர்
கார்

அசத்தலாக புதுப்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மாருதி 800 - எதற்கு தெரியுமா?
- இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார் மாடலாக மாருதி 800 விளங்குகிறது.
- இந்தியாவில் மாருதி நிறுவன விற்பனையில் கணிசமான பங்குகளை மாருதி 800 பெற்று இருக்கிறது.
மாருதி 800 காரை அறியாதவர்கள் இருக்க முடியாது எனலாம். இத்தகைய பிரபலமான ஹேச்பேக் மாடல் இந்தியாவில் முதல் முறையாக 1983 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் மாருதி 800 அமோக வரவேற்பை பெற்றதோடு, பலரும் கார் வாங்க காரணமாக அமைந்தது.
1983 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 சமீபத்தில் 39 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதை ஒட்டி முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் மாருதி 800 முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.
முதல் மாருதி 800 கார் மாருதி உத்யேக் லிமிடெட் நிறுவனத்தின் ஹரியானா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த காரின் சாவி டெல்லியை சேர்ந்த ஹர்பல் சிங் என்பவருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கினார். இந்த காரின் பதிவு எண் DIA 6479 ஆகும். இந்த காரை 2010 ஆம் ஆண்டு தான் மரணிக்கும் வரை ஹர்பல் சிங் வைத்திருந்தார்.
இவரின் மறைவுக்கு பின், மாருதி 800 கார் அவரின் வீட்டு வாசலில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக துவங்கியது. இதே போன்று மாருதி சுசுகி நிறுவனமும் இந்த புகைப்படத்தை பார்த்து, காரை புதுப்பிக்கும் விருப்பத்தை தெரிவித்து இருந்தது. இதை அடுத்து காரின் ஒரிஜினல் உதிரிபாகங்கள் கொண்டு கார் புதுப்பிக்கப்பட்டது.