என் மலர்
கார்
- மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடல் உற்பத்தி துவங்கி இரப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த காரின் வினியோகம் பற்றியும் புது தகவல் வெளியாகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் ஜூன் மாத வாக்கில் ஸ்கார்பியோ N மாடலை அறிமுகம் செய்தது. புது காரை அறிமுகம் செய்த கையோடு, அதன் உற்பத்தியும் துவங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், புதிய ஸ்கார்பியோ N உற்பத்தி நிறைவுற்று சில மாடல்கள் ப்ரோடக்ஷன் லைனில் இருந்து வெளியேறுவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ஜூன் மாத துவக்கத்தில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் வினியோகம் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8 பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இத்துடன் டேஸ்லிங் சில்வர், டீப் பாரஸ்ட், கிராண்ட் கேன்யன், எவரெஸ்ட் வைட், நபோலி பிளாக், ரெட் ரேஜ் மற்றும் ராயல் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எம் ஸ்டேலியன் என்ஜின், 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
இதன் பெட்ரோல் என்ஜின் 200 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய N லைன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய வென்யூ N லைன் மாடல் விலை விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி-இன் புது மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N லைன் மாடல் ஆகும். புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.

இந்த காரின் விலை விவரங்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வெளிப்புறம் ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் முன்புறம் டார்க் க்ரோம் கிரில், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்கள், ஃபோர், ஆஃப்ட் பம்ப்பர்கள், பக்கவாட்டு மற்றும் ரூஃப் ரெயில்களில் ரெட் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கார் 16 இன்ச் அலாய் வீல்கள், ஹப் கேப்களில் N லோகோ வழங்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
- இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார் மாடலாக மாருதி 800 விளங்குகிறது.
- இந்தியாவில் மாருதி நிறுவன விற்பனையில் கணிசமான பங்குகளை மாருதி 800 பெற்று இருக்கிறது.
மாருதி 800 காரை அறியாதவர்கள் இருக்க முடியாது எனலாம். இத்தகைய பிரபலமான ஹேச்பேக் மாடல் இந்தியாவில் முதல் முறையாக 1983 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் மாருதி 800 அமோக வரவேற்பை பெற்றதோடு, பலரும் கார் வாங்க காரணமாக அமைந்தது.
1983 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 சமீபத்தில் 39 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதை ஒட்டி முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் மாருதி 800 முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் மாருதி 800 கார் மாருதி உத்யேக் லிமிடெட் நிறுவனத்தின் ஹரியானா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த காரின் சாவி டெல்லியை சேர்ந்த ஹர்பல் சிங் என்பவருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கினார். இந்த காரின் பதிவு எண் DIA 6479 ஆகும். இந்த காரை 2010 ஆம் ஆண்டு தான் மரணிக்கும் வரை ஹர்பல் சிங் வைத்திருந்தார்.
இவரின் மறைவுக்கு பின், மாருதி 800 கார் அவரின் வீட்டு வாசலில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக துவங்கியது. இதே போன்று மாருதி சுசுகி நிறுவனமும் இந்த புகைப்படத்தை பார்த்து, காரை புதுப்பிக்கும் விருப்பத்தை தெரிவித்து இருந்தது. இதை அடுத்து காரின் ஒரிஜினல் உதிரிபாகங்கள் கொண்டு கார் புதுப்பிக்கப்பட்டது.
- ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
- இந்த முறை கார்களின் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஆடி இந்தியாவின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு செப்டம்பர் 20, 2022 முதல் அமலுக்கு வருகிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் தொடர் செலவீனங்கள் அதிகரிப்பு மற்றும் வினியோக சிக்கல் போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

தற்போது ஆடி இந்தியா நிறுவனம் ஆடி A4, A6, A8 L, Q5, Q7, Q8, S5 ஸ்போர்ட்பேக், RS 5 ஸ்போர்ட்பேக் மற்றும் RS Q8 போன்ற கார்களை பெட்ரோல் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இ-டிரான் பிராண்டின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் இ-டிரான் 50, இ-டிரான் 55, இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55, இ-டிரான் GT மற்றும் RS இ-டிரான் GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இது தவிர ஆடி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய Q5 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இத்துடன் இந்த மாடலின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் பற்றியும் ஆடி இந்தியா அறிவித்து விட்டது. இந்த காரின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்த வரிசையில் ஸ்விப்ட் CNG மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் ஹேச்பேக் மாடலின் CNG வெர்ஷனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் CNG மாடல் விலை ரூ. 7 லட்சத்து 77 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது இந்த மாடல் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது. விரைவில் இந்த மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது.

புகைப்படங்களின் படி ஸ்விப்ட் CNG காரில் எந்த விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் ஸ்விப்ட் CNG மற்றும் பெட்ரோல் வெர்ஷன் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. காரின் பின்புற பெண்டரில் CNG டேன்க் விவரங்கள் மற்றும் CNG பில்லர் கேப் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரில் ரிவைஸ்டு MID, பூட் பகுதியில் CNG டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி ஸ்விப்ட் CNG மாடலில் 1.2L K சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் 30.90 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
- மஹிந்திரா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
- இந்த எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ஸ்கார்பியோ N மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்கார்பியோ கிளாசிக் பெயரில் அதன் பழைய மாடலை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்த எஸ்யுவி மாடல் இந்தியாவில் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஸ்கார்பியோ கிளாசிக் S11 வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் முற்றிலும் புதிய முகம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், புதிய முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்-கள், 17 இன்ச் ரிடிசைன் செய்யப்பட்ட வீல்கள், டூயல் டோன் தோற்றம் கொண்டிருக்கிறது. பின்புறம் டவர் எல்இடி டெயில் லேம்ப்கள், பக்கவாட்டில் கிளாசிக் பேட்ஜிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் புதிய ஜென் 2 எம்ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கார் பெட்ரோல், ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் 4x4 போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படவில்லை. பாதுகாப்புக்கு இந்த கார் ஏபிஎஸ், 2 ஏர்பேக் உள்ளிட்டவைகளை ஸ்டாண்டர்டு அம்சமாக பெற்று இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் ரெட் ரேஜ், நபோலி பிளாக், சாட் சில்வர், பியல் வைட் மற்றும் கேலக்ஸி கிரே என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ காரை தழுவி புது காம்பேக்ட் எஸ்யுவி மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
- இந்த கார் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் மாருதி பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் YTB எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த கார் பிரெஸ்ஸா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
புதிய மாருதி YTB மாடல் பியுச்சுரோ இ கான்செப்ட் மாடலை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யுவி கூப் எஸ்யுவி ஆகும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி YTB அறிமுகம் அல்லது காட்சிப்படுத்தப்படலாம்.

மாருதி சுசுகி ஆலை அமைந்து இருக்கும் குருகிராம் பகுதியில் தான் புது காரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த காரின் பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள், ஷார்க் பின் ஆண்டெனா, ரூப் ரெயில்கள், ரியர் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களில் பின்புற வைப்பரில் வாஷர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
காரின் முன்புறம் எப்படி இருக்கும் என தெளிவாக தெரியவில்லை. எனினும், இந்த மாடலில் எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப் மீது பம்ப்பரில் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஆல்டோ K10 மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த கார் அதிகளவு மாற்றங்களுடன் புது தோற்றம் பெற்று இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 2022 ஆல்டோ K10 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 துவக்க விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் நான்கு வேரியண்ட்கள், ஆறு மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான எண்ட்ரி லெவல் மாடலுக்கு முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.
ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஆல்டோ K10 மாடல் முழுக்க முழுக்க புது மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், ஸ்வெப்ட்பேக் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், சிங்கில் பீஸ் கிரில், பிளாக் ஸ்டீல் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப், ஃபெண்டரில் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன.

புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலின் உள்புறம் பிளாக் நிற இண்டீரியர் செய்யப்பட்டு சில்வர் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஏழு இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் சாலிட் வைட், சில்கி சில்வர், கிராணைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி புளூ மற்றும் எர்த் கோல்டு என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
2022 மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது AMT யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்து 500, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
- மாருதி சுசுகி நிறுவனம் எத்தனால் கொண்டு இயங்கும் வகையிலான என்ஜின்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஏற்கனவே மாருதி சுசுகி தனது கார்களை தொடர்ந்து CNG கிட் கொண்ட வேரியண்ட்களில் அறிமுகம் செய்து வருகிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் யுத்திக்கு மாறி வருவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பலரும் எதிர்பாராத வகையில் மாருதி சுசுகி மாற்று எரிபொருள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஏர்கனவே CNG மூலம் இயங்கும் கார்களை அறிமுகம் செய்து வரும் மாருதி சுசுகி தற்போது எத்தனால் மூலம் ஓடும் என்ஜின்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் E85 அதாவது 85 சதவீத எத்தனால் மூலம் இயங்கும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை துவங்கி விட்டது. இந்த என்ஜின்கள் ஏப்ரல் 2023 வாக்கில் பயணிகள் வாகனங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி சிவி ராமன் தெரிவித்து இருக்கிறார்.

இத்தனை ஆண்டு காலமாக மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் மிக முக்கிய அம்சமாக மைலேஜ் விளங்கி வருகிறது. அந்த வரிசையில் E20 எரிபொருள் பயன்படுத்துவது நல்ல பலன்களை கொடுக்கும். உலகின் E85 ரக என்ஜின்களை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும். உலகின் மற்ற நாடுகளில் E85 என்ஜின்கள் பிஎஸ் 4 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களில் 10 முதல் 15 சதவீதம் எத்தனால் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், 20 முதல் 25 சதவீத எத்தனால் மூலம் இயங்க வைக்க என்ஜின்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ECU ரிமேப்பிங், இன்ஜெக்ஷன் மற்றும் இக்னிஷன் சிஸ்டம் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது.
- மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலையும் ஓலா அறிவித்து இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகளை நேற்று (ஆகஸ்ட் 15) துவங்கி இருந்தது. மேலும் எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அறிவித்து இருக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் அதிவேகமான கார் மாடலாக இருக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை நான்கே நொடிகளில் எட்டிவிடும் என்றும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் உருவாக்கப்பட்டதிலேயே தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இது இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த கார் ஆல் கிளாஸ் ரூஃப் மற்றும் சிறப்பான டிராக் கோ-எபிஷியண்ட் வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கார் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த மூவ் ஓஎஸ் கொண்டிருக்கும். இத்துடன் உலகின் மற்ற கார்களிலும் இல்லாத வகையில் சிறப்பான டிரைவிங் திறன்களை இந்த கார் கொண்டிருக்கும். இதில் கீலெஸ் இயக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். "இது சிறப்பான செயல்திறன், அசத்தல் டிசைன், மிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும்" என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
ஓலா எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை தவிர புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன ஆலையாக ஓலா பியுச்சர் பேக்டரி உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்து இருந்தார். இந்த ஆலையில் ஆண்டுக்கு பத்து லட்சம் ஸ்கூட்டர்கள், அதாவது ஒவ்வொரு இரு நொடிகளுக்கும் ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்ய முடியும்.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்விப்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த கார் மாதாந்திர சந்தா முறையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் S-CNG மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 77 ஆயிரம், எக்ஸ்-ஷரூம் என துவங்குகிறது. இந்த காரை மாருதி சுசுகி சப்ஸ்கிரைப் முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ. 16 ஆயிரத்து 499 ஆகும்.
புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஸ்விப்ட் S-CNG சேர்க்கும் பட்சத்தில் மாருதி சுசுகி தற்போது ஒன்பது CNG கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுசுகி ஸ்விப்ட் S-CNG மாடலில் 1.2L K சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் கிலோவுக்கு 30.90 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.
இந்த காரில் டூயல் இண்டிபெண்டண்ட் எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்கள் மற்றும் இண்டெலிஜண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்காக இந்த காரில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இது CNG-ஐ சுற்றி எந்த சேதமும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டாடா பன்ச் மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- டாடா பன்ச் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டசார்ஸ் நிறுவனம் தனது பன்ச் மாடல் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் பத்து மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறது. டாடா பன்ச் ஒரு லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போது டாடா பன்ச் விலை ரூ. 5 லட்சத்து 93 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டாடா பன்ச் மாடல் பியூர், அட்வென்ச்சர், அகம்ப்லிஷ்டு, கிரியேடிவ் மற்றும் காசிரங்கா என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த கார் ஆர்கஸ் வைட், டேடோனா கிரே, டிராபிக்கல் மிஸ்ட், அடோமிக் ஆரஞ்சு, மீடியோர் பிரான்ஸ், டொர்னாடோ புளூ மற்றும் கலிப்சோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச அளவில் நடத்தப்படும் குளோபல் NCAP சோதனையில் டாடா பன்ச் மாடல் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது.
டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 85 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இந்த கார் முறையே லிட்டருக்கு 18.82 கிமீ மற்றும் 18.97 கிமீ மைலேஜ் வழங்குகிறது.






