search icon
என் மலர்tooltip icon

    கார்

    அடுத்த வாரம் இந்தியா வரும் வால்வோ பேஸ்லிப்ட் கார்
    X

    அடுத்த வாரம் இந்தியா வரும் வால்வோ பேஸ்லிப்ட் கார்

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வால்வோ கார் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பேஸ்லிப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் வரை அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய XC40 மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட பிக்சல் ஹெட்லைட்கள், புதிய வீல் டிசைன் மற்றும் ரிவைஸ்டு பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பரில் பாக் லைட் சரவுண்ட்கள், ரியர் பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட ட்ரிம் எலிமண்ட் உள்ளது. இத்துடன் ஜோர்ட் புளூ, சேஜ் கிரீன், தண்டர் கிரே மற்றும் பிரைட் டஸ்க் என அதிக நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    காரின் டேஷ்போர்டு பகுதியில் மட்டும் புதிதாக மரத்தால் ஆன ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் போர்டிரெயிட் ஸ்டைல் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஒஎஸ், பானரோமிக் சன்ரூப், PM 2.5 கேபின் ஏர் பில்ட்ரேஷன் சிஸ்டம் மற்றும் 13 ஸ்பீக்கர்கள் கொண்ட டிராக் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    மேம்பட்ட வால்வோ XC40 மாடலிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இது 13 பிஎஸ் பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் 197 பிஎஸ் பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் லிட்டருக்கு 15 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.

    Next Story
    ×