என் மலர்tooltip icon

    கார்

    டாடா டியாகோ ev எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    டாடா டியாகோ ev எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது டியாகோ ev எலெக்ட்ரிக் கார் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் டாடா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டாடா டியாகோ ev மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. புதிய டாடா டியாகோ ev மாடல் டிகோர் ev மற்றும் நெக்சான் ev மாடல்களுடன் இணைய இருக்கிறது.

    இந்த காரின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் மர்மமாக உள்ள நிலையில், இதன் பவர்டிரெயின் மட்டும் டிகோர் ev மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் வழங்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. எலெக்ட்ரிக் காருடனஎ் 15ஏ மற்றும் 25 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முறையே 8.45 மணி நேரமும், 65 நிமிடங்களையும் எடுத்துக் கொள்கின்றன.

    அம்சங்களை பொருத்தவரை டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் டிரைவர் சீட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலை பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் வரிசையில் டியாகோ எலெக்ட்ரிக் மாடலும் விரைவில் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×