என் மலர்
கார்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
- டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- புதிய லிமிடெட் எடிஷன் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான டொயோட்டா இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடலில் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடல் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.
புதிய இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் விலை ரூ. 17 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 02 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் மிட்-ஸ்பெக் GX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகளுடன் கிடைக்கிறது.
வழக்கமாக இந்த அம்சங்களை டீலரிடம் ஃபிட் செய்தால் ரூ. 55 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகும். எனினும், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடலை வாங்க தூண்டும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதிக வரவேற்பு காரணமாக இன்னோவா க்ரிஸ்டா டீசல் வெர்ஷன்களின் முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடலில் 2.7 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 164 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 10.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என ARAi சான்று பெற்று இருக்கிறது.






