என் மலர்
கார்
- ஹூண்டாய் நிறுவனத்தின் அகிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல், CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.
காரின் வெளிப்புறம் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், புது முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்பார்க் கிரீன் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. உள்புறத்தில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரிகோக்னிஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஏராளமான புது கார்களை அறிமுகம் செய்தது.
- புதிய கார்களில் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்டும் இடம்பெற்று இருந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் ஹேச்பேக் காரின் அல்ட்ரோஸ் ரேசர் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 மாடலில் காட்சிக்கு வைத்தது. பொது மக்கள் மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களை அதிகம் கவர்ந்த அல்ட்ரோஸ் ரேசர் மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ஆகும்.
அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் ரேசர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் வித்தியாசமான ரியர் ஸ்பாயிலர், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப், டூயல் டோன் நிற ஆப்ஷன், பிளாக்டு-அவுட் ஹெட்லைட், முன்புற கிரில் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் ஏராளமான ரெட் அக்செண்ட்கள், ரேசர் லோகோ, ஆல் பிளாக் இருக்கை மேற்கவர் மற்றும் ரெட் நிற ஸ்டிட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புது காரில் அளவில் பெரிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
புதிய அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118.3 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்து்ம திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் குறைபாடு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
- குறைபாடு கண்டறியப்பட்ட யூனிட்களை வைத்திருப்போர் அதனை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 17 ஆயிரத்திற்கும் அதிக கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. கார்களின் ஏர்பேக் கண்ட்ரோலர் தவறுதலாக பொருத்தப்பட்டதால் ரிகால் செய்யப்பட உள்ளன.
ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டறியப்பட்டு இருக்கும் 17 ஆயிரத்து 362 யூனிட்களையும் ரிகால் செய்து, அதில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து இலவசமாக சரி செய்து கொடுப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

பிரச்சினை சரி செய்யப்படவில்லை எனில், கார் விபத்தில் சிக்கும் போது அதில் உள்ள ஏர்பேக் வேலை செய்யாத நிலை ஏற்படும் என மாருதி சுசுகி சந்தேகிக்கிறது. வொர்க்ஷாப்களில் இருந்து தொடர்பு கொள்ளும் வரை அல்லது பிரச்சினையை சரி செய்து முடிக்கும் வரை காரை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் தான் கிராண்ட் விட்டாரா, XL6, எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற மாடல்களில் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி ரிகால் செய்தது. இந்த பிரச்சினையில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. இது மட்டுமின்றி கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வேகன் ஆர், இக்னிஸ் மற்றும் செலரியோ மாடல்களின் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் ரிகால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV400 எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புதிய மஹிந்திரா XUV400 மாடலின் முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் கார் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய XUV400 மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இவை அறிமுக விலை என்றும் இது முதல் 5 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய மஹிந்திரா XUV400 மாடல் இரண்டு வேரியண்ட்கள், இருவித சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய மஹிந்திரா XUV400 மாடல் 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 கிலோமீட்டர் மற்றும் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இவற்றுடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இரு வேரியண்ட்களும் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

காரின் வெளிப்புறம் காப்பர் நிற இன்சர்ட்கள், பிலான்க்டு-ஆஃப் கிரில், ட்வின் பீக் லோகோ, புதிய எல்இடி டெயில் லைட்கள், 16 இன்ச் அலாய் வீல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் 7 இன்ச் டச் ஸ்கரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளது.
இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, டிரைவ் மோட்கள், 60:40 ஸ்ப்லிட் ரியர் சீட்கள், புளூ சென்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV400 மாடலின் முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. வெளியாகி ஒரே ஆண்டிற்குள் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மஹிந்திரா XUV400 மாடல் ஆர்க்டிக் புளூ, எவரஸ்ட் வைட், கேலக்ஸி கிரே, நபோலி பிளாக், இன்ஃபினிட்டி புளூ மற்றும் இன்ஃபினிட்டி புளூ மற்றும் சேடின் காப்பர் ரூஃப் என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
மஹிந்திரா XUV400 EC மற்றும் 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம்
மஹிந்திரா XUV400 EC மற்றும் 7.7 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம்
மஹிந்திரா XUV400 EL மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை சமீபத்தில் அறிவித்தது. மேலும் இரு கார்களுக்கான முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கிராண்ட் i10 நியோஸ் வெளியீடு இந்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில், ஆரா மாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் தற்போது நான்கு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இவைதவிர ஆறு ஏர்பேக், இஎஸ்சி மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

இத்துடன் புது ஆரா மாடலில் உள்ள ஹெட் ரெஸ்டிரைண்ட்கள் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டுள்ளன. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இரு அனலாக் காஜ்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ஸ்பீடோமீட்டராகவும் மற்றொன்று டகோமீட்டராகவும் செயல்படுகின்றன. மேலும் புதிதாக 3.5mm எம்ஐடி டிஸ்ப்ளே, டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
வெர்னா, i20, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களில் உள்ளதை போன்று புது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் ஸ்டாரி நைட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 83 ஹெச்பி பவர், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 69 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு யூனிட்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
- டொயோட்டா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
- பிரேசிலில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹைப்ரிட் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடல் இந்தியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
டொயோட்டா நிறுவனம் கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் e20 முதல் e85 வரை கிடைக்கும் எதனால் சார்ந்த ஃபியூவல்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. தற்போது காட்சிப்படுத்தப்பட்ட டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடல் ஏற்கனவே பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ப என்ஜின் புகை விதிகள் மற்றும் எத்தனாலின் குறைந்த அடர்த்திக்கு ஏற்ப டியூனிங் செய்யப்பட வேண்டும். இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெடயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தரையில் 1.8 லிட்டர் ஃபிலெக்ஸ் ஃபியூவல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த யூனிட் 138 ஹெச்பி பவர், 177 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலில் 50 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. புதிய கொரோலா ஆல்டிஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புது பிரெஸ்ஸா மாடலின் மற்றொரு வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
- விரைவில் பிரெஸ்ஸா CNG மாடலின் விற்பனை இந்தியாவில் துவங்க இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா CNG மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. வரும் மாதங்களில் புதிய மாருதி பிரெஸ்ஸா CNG மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது மாருதி அரினா விற்பனை மையங்களில் CNG ஆப்ஷன் இல்லாத ஒற்றை மாடலாக பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரெஸ்ஸா CNG மாடல் காட்சிக்கு வைத்து விட்டது. காட்சிக்கு வைக்கப்பட்ட பிரெஸ்ஸா CNG மாடல் மேட் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற CNG மாடல்களை போன்றே பிரெஸ்ஸா மாடலிலும் CNG டேன்க் பூட் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை CNG மாடலில் அதன் பெட்ரோல் வேரியண்டில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

புது CNG வேரியண்ட் விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், பிரெஸ்ஸா மாடலின் VXi மற்றும் ZXi வேரியண்ட்களில் CNG ஆப்ஷன் வழங்கப்படலாம். பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இது CNG மோடில் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் போது, சப் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் CNG ஆப்ஷன் பெறும் முதல் மாடலாக பிரெஸ்ஸா இருக்கும்.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ்யுவி கூப் மாடல் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
- புதிய மாருதி சுசுகி Fronx மாடல் நெக்சா பிராண்டிங்கின் கீழ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் தனது புதிய Fronx பலேனோ சார்ந்த உருவாக்கப்பட்ட எஸ்யுவி கூப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி Fronx மாடலுக்கான முன்பதிவு துவங்கி விட்ட நிலையில், விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. மாருகி சுசுகி Fronx மாடல் மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டிங்கின் கீழ் நடைபெற இருக்கிறது.
நெக்சா பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் காம்பேக்ட் எஸ்யுவி கூப் மாடலாக Fronx அமைந்துள்ளது. பலேனோ சார்ந்து உருவாகி இருக்கும் நிலையில், இந்த கார் ஹார்டெக்ட் மோனோக் பிளாட்ஃபார்ம்-ஐ பயன்படுத்துகிறது. சில பாடி பேனல்கள் தவிர இந்த காரில் அப்ரைட் நோஸ் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் உள்ளிட்டவை கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் சற்று திடமனாக இருக்கின்றன. இருபுறமும் பிரத்யேக ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய ரியர் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய Fronx மாடலின் அம்சங்களில் சில ஏற்கனவே பலேனோ ஹேச்பேக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை மாருதி சுசுகி Fronx 3995mm நீளம், 1550mm உயரம் மற்றும் 1765mm அகலமாக இருக்கிறது.
காரின் உள்புறமும் பெரும்பாலான அம்சங்கள் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டேஷ்போர்டு, இருக்கை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இரு மாடல்களிலும் வெவ்வேறு டெக்ஸ்ச்சர் மற்றும் சில வேறுபாடுகள் இருக்கும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் மற்றும் ஒற்றை டர்போ பெட்ரோல் என்ஜின் - 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் யூனிட் 2017 வாக்கில் அறிமுகமான முந்தைய தலைமுறை பலேனோ மாடலில் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் ஸ்டாண்டர்டு யூனிட்களின் ஸ்போர்ட் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. இது பலேனோ RS டாப் எண்ட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. குறைந்த விற்பனை மற்றும் கடினமான புகை விதிகள் காரணமாக இந்த என்ஜின் திரும்பப் பெறப்பட்டது.
தற்போது Fronx மாடலில் டர்போ யூனிட் மீண்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.2 லிட்டர் K சீரிஸ் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வருகிறது. சிட்ரோயன் C3, டாடா பன்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் போன்ற மாடல்களுக்கு புதிய மாருதி சுசுகி Fronx போட்டியாக அமையும்.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் உள்ள பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.
- புதிய ஐயோனிக் 5 எலெர்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் அறிமுக விலை ரூ. 44 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக 2022 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 5 காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது.
புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. ஹூண்டாய் கோனா மாடலை தொடர்ந்து இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் இது ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கியா EV6 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஐயோனிக் 5 மாடல் ஒற்றை மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்பட இருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 216 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 800 வோல்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
காரின் வெளிப்புறம் புது ஹெட்லேம்ப்கள், ஃபிலஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள், 20 இன்ச் அலாய் வீல்கள், இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள்- ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், லெவல் 2 ADAS, பவர் சீட்கள், கிளைமேட் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், வெஹிகில் டு லோட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், இண்டீரியர் மற்றும் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா சப்காம்பேக்ட் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு ஹூண்டாய் நிறுவன வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்புறம் புது கிரில் மற்றும் பம்ப்பர் கொண்டிருக்கிறது. இந்த காரின் கிரில் தற்போது அகலமாகவும், அதிக செங்குத்தான வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் பாடி நிறத்திலான இன்சர்ட்கள், L வடிவம் கொண்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இரண்டாவது கிரில் தற்போது ஹெட்லேம்ப்களிடையே உள்ளது.

பின்புறம் ரியர் ஸ்பாயிலர் மற்றும் மூன்றாவது ஸ்டாப் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா மாடல் - போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், ஸ்டாரி நைட், டியல் புளூ மற்றும் ஃபியரி ரெட் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. காரின் உள்புறம் டேஷ்போர்டு டிசைன் அதிகளவு மாற்றப்படவில்லை. எனினும், புது இருக்கை மேற்கவர் நிறங்கள், புது நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் CNG வெர்ஷன் 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்- E, S, SX, SX(O) மற்றும் SX+ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜின் அனைத்து வேரியண்ட்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் CNG ஆப்ஷன் S மற்றும் SX வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்திய சந்தையில் புது ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் 2WD மாடல் இரண்டு புது நிறங்களில் கிடைக்கிறது.
- மஹிந்திரா தார் 2WD மாடல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தார் 2WD மாடலை அறிமுகம் செய்தது. அறிமுக சலுகையாக மஹிந்திரா தார் 2WD மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மஹிந்திரா தார் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இந்த கார் மூன்று வேரியண்ட்கள், இரண்டு புது நிறங்கள் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அறிமுக சலுகை காரை முன்பதிவு செய்யும் முதல் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொருந்தும். புதிய மஹிந்திரா தார் 2WD மாடலின் வினியோகம் ஜனவரி 14 ஆம் தேதி துவங்க இருக்கிறது. மாற்றங்களை பொருத்தவரை மஹிந்திரா தார் 2WD மாடல் - பிளேசிங் பிரான்ஸ் மற்றும் எவரஸ்ட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவைதவிர ரெட் ரேஜ், கேலக்ஸி கிரே, நபோலி பிளாக் மற்றும் அக்வா மரைன் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

புதிய காரின் பின்புற ஃபெண்டரில் 4x4 பேட்ஜிங் நீக்கப்பட்டு இருப்பதை தவிர இந்த கார் தோற்றத்தில் அதன் 4WD வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. மஹிந்திரா தார் 2WD மாடலில் 2.0 லிட்டர் எம்ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 150 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
டீசல் என்ஜின் 117 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இண்டீரியர் பெருமளவு மாற்றப்படவில்லை. மஹிந்திரா தார் 4WD மாடலில் தற்போது எலெக்டிரானிக் பிரேக் லாக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் LX டீசல் மாடலில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரென்ஷியல் அம்சம் ஆப்ஷாக வழங்கப்படுகிறது.
ஸ்டைல் பேக், முன்புறம் மற்றும் பின்புற ஆர்ம் ரெஸ்ட்கள், கூடுதல் பி-ஸ்போக் அக்சஸரீக்களை மஹிந்திரா புதிய தார் மாடலுடன் வழங்குகிறது. புதிய மஹ்ந்திரா தார் 2WD LX டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஹார்டு-டாப் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம் என்றும் 2WD LX பெட்ரோல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஹார்டு டாப் விலை ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி விளங்குகிறது.
- சமீபத்தில் தான் மாருதி சுசுகி தனது கிராண்ட் விட்டாரா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்திய சந்தையில் குறைந்த விலை 7 சீட்டர் பிரிவில் மாருதி சுசுகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறைந்த விலை மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்வது எர்டிகா அல்லது XL6 ஆகவே இருந்து வருகிறது. இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் ஈகோ மாடலை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2010 ஆண்டு முதல் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கிறது.
அவ்வப்போது இந்த மாடலுக்கு சிறு அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈகோ மாடலுக்கு பெரும் அப்டேட் கொடுக்க மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஈகோ மாடலின் வெளிப்புறம் புது டிசைன், புதிய பம்ப்பர்கள், ரிவொர்க் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புது கிரில் மற்றும் மேம்பட்ட டெயில் லேம்ப் டிசைன் வழங்கப்பட இருக்கிறது.

இதுதவிர ஸ்டாண்டர்டு வீல் கவர்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படும். இவை தவிர ஈகோ மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் வேன் போன்றே காட்சியளிக்கும். ஈகோ மாடல் அதன் வேன் போன்ற தோற்றத்திற்கு பெயர் பெற்று இருக்கிறது. சமீபத்தில் மாருதி அறிமுகம் செய்த புது ஈகோ மாடலில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் இதர மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 80 ஹெச்பி பவர், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் புதிய தலைமுறை ஈகோ மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். புது அப்டேட்கள் கொண்ட மாருதி சுசுகி ஈகோ மாடல் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கலாம்.






