என் மலர்tooltip icon

    கார்

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தத்தில் 17 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • இதுதவிர Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இந்திய சந்தையில் 25 மில்லியன் யூனிட்கள் எனும் விற்பனை இலக்கை எட்டியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி இந்த மைல்கல் எட்டியதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. 1983 வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் கார், மாருதி 800 மாடலை அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 25 ஆவது மில்லியன் யூனிட் ஆக கிராண்ட் விட்டாரா மாடல் அமைந்துள்ளது. மாருதி 800 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது 17 வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    இவற்றில் பெட்ரோல் மற்றும் CNG மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் பத்து லட்சம் CNG கார்களை விற்று அசத்தியது.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இரு மாடல்களின் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹைரைடர் CNG மாடல் 26.06 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது அர்பன் குரூயிசர் CNG மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 23 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹைரைடர் CNG மாடல் S மற்றும் G என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் CNG மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக், 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், டொயோட்டா i-கனெக்ட், ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள், ஆட்டோ டிம்மிங் IRVM, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    • பிஎம்டபள்யூ நிறுவனத்தின் 2023 பிஎம்டபள்யூ X1 மாடல் இந்திய வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
    • புதிய பிஎம்டபள்யூ X1 மாடல் பெட்ரோல், டீசல் என இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபள்யூ நிறுவனம் அடுத்த தலைமுறை X1 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 பிஎம்டபள்யூ X1 மாடலின் விலை ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய X1 மாடல் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டீசல் வேரியண்ட் வினியோகம் மார்ச் மாதத்திலும், பெட்ரோல் வேரியண்ட் வினியோகம் ஜூன் மாதத்திலும் துவங்க இருக்கிறது.

    புதிய பிஎம்டபள்யூ X1 மாடல் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 136 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 150 ஹெச்பி பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இரு என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய 2023 பிஎம்டபள்யூ X1 மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புது எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிட்னி கிரில், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், புதிய முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் பெரிய வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய ஐடிரைவ் 8 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் செண்டர் கன்சோலில் ஃபுளோடிங் ஆர்ம்ரெஸ்ட், செங்குத்தாக பொருத்தப்பட்ட வயர்லெஸ் சார்ஜர் உள்ளது.

    • டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா க்ரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா மாடலை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைகிராஸ் உடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்த மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின், நான்கு வேரியண்ட்கள், இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா க்ரிஸ்டா மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு, அதிகளவு க்ரோம் ஹைலைட்களை பெற்று இருக்கிறது. இதன் முன்புற கிரில் பகுதியில் கிடைமட்டமான க்ரம் ஸ்டிரைப், பம்ப்பரில் க்ரோம் இன்சர்ட், ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது.

    இவை தவிர புதிய க்ரிஸ்டா மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த கார் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் பவர்டு டிரைவர் சீட், ரியர் ஏசி வெண்ட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, செட்பேக் டேபிள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா மாடலில் ஏழு ஏர்பேக், முன்புறம் மற்றும் பின்புற பார்கிங் சென்சர்கள், பிரேக் அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய க்ரில்சா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. வரும் வாரங்களில் இந்த மாடலுக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

    • இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய eC3 விற்பனைக்கு வர இருக்கிறது.
    • IC என்ஜின் மாடல் வெளியான ஆறு மாதத்தில் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் சிட்ரோயன் டீலர்ஷிப் மற்றும் சிட்ரோயன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். கடந்த ஆண்டு சிட்ரோயன் C3 IC என்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆறு மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டது.

    தோற்றத்தில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மற்றும் அதன் IC என்ஜின் வெர்ஷன் ஒரே மாதரியே காட்சியளிக்கிறது. இரு கார்களிலும், செவ்ரன் லோகோ முன்புற கிரில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களை போன்று, eC3 மாடலில் க்ளோஸ்டு கிரில் அல்லது பெட்ரோல் மாடலில் இருப்பதை விட முற்றிலும் புது முன்புறத்தை பெறவில்லை.

    இரு கார்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசமாக காரின் வெளிப்புறம் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் eC3 பேட்ஜ்கள் உள்ளன. இந்த காரில் சார்ஜிங் போர்ட் முன்புறம் வலதுபுற ஃபெண்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிட்ரோயன் C3 மாடல் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் நோக்கிலேயே சிட்ரோயன் உருவாக்கியது.

    இதன் காரணமாகவே சிட்ரோயன் C3 மாடலில் நீண்ட வீல்பேஸ் வழங்கப்பட்டது. வெளிப்புறம் போன்றே, காரின் உள்புறமும் ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. எனினும், எலெக்ட்ரிக் வெர்ஷனில் மேனுவல் டே/நைட் IRVMகள் உள்ளன. இதில் உள்ள ORVMகளை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்ய முடியாது. மேலும் ஏசி மேனுவல் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் மோனோக்ரோம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. சிட்ரோயன் eC3 மாடல்- லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டச் ஸ்கிரீன், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஒட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை ஃபீல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் கனெக்டெட் கார் அம்சங்கள் மைசிட்ரோயன் கனெக்ட் செயலி மூலம் வழங்கப்படுகிறது. சிட்ரோயன் eC3 மாடலில் 29.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 57 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும். 

    • மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இந்தியாவில் ரிகால் செய்யப்படுகின்றன.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரு கார்களும் இதுவரை மூன்று முறை ரிகால் செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா இந்தியா நிறுவனங்கள் தங்களின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளன. இரு கார்களின் ரியர் சீட் பெல்ட் மவுண்ட் பிராகெட்-இல் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ரிகால் செய்யப்படுகின்றன.

    மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் 11 ஆயிரத்து 177 யூனிட்களும், டொயோட்டா ஹைரைடர் மாடலின் 4 ஆயிரத்து 026 யூனிட்களும் ரிகால் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 8, 2022 முதல் நவம்பர் 15, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளன.

    இரு நிறுவன உற்பத்தியாளர்கள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர், அவற்றை சரி செய்ய சர்வீஸ் மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ரிகால் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை விரைந்து சரி செய்வது பெரும் ஆபத்தை தவிர்க்க உதவும்.

    முன்னதாக இரு எஸ்யுவி மாடல்களும் இருமுறை ரிகால் செய்யப்பட்டுள்ளன. ஒருமுறை காரின் முன்புற சீட் பெல்ட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் மறுமுறை ஏர்பேக் கண்ட்ரோலர் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் இரு கார்களும் ரிகால் செய்யப்பட்டன. ரிகால் நடவடிக்கைகள் கார்களின் நீண்ட நாள் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முயற்சி ஆகும். 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியணட்களில் கிடைக்கிறது.
    • புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆரா காரின் விலை ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புது ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறுவித நிறங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் E, S, SX மற்றும் SX (O) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் CNG வேரியண்ட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பிளாக் கிரில், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், பூட் லிட் மீது க்ரோம் இன்சர்ட் உள்ளது. இந்த கார் போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டியல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்டாரி நைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் நான்கு ஏர்பேக், TPMS, ABS மற்றும் EBD, ESC, VSM, HAC, 3.5 இன்ச் கிளஸ்டர் மற்றும் MID, ஃபூட்வெல் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், டைப் சி போர்ட்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெகக்னீஷன், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் அட்ஜஸட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியெரா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை மைல்கல்லுடன் நிறைவு செய்தது. உள்நாட்டு சந்தையில் டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டே டியாகோ EV மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இவை தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கும் ஹேரியர் EV மற்றும் சியெரா EV மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. அந்த வகையில், ஜனவரி 2023 மாதத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    அதன்படி டாடா நெக்சான் EV பிரைம் 2022 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தத்தில் ரூ. 80 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வகையில் தள்ளுபடியாக பெற முடியும். டாடா நெக்சான் EV பிரைம் XM வேரியண்ட் தவிர வேறு அனைத்து மாடல்களுக்கும் கிடைக்கும்.

    2022 நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். 2022 டிகோர் EV மாடலுக்கு்ம இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நெக்சான் EV மாடல்களின் விலையை சமீபத்தில் அறிவித்தது. இதில் நெக்சான் EV மேக்ஸ் ரேன்ஜ் நீட்டிக்கப்பட்டு, சில வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2023 நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    2023 டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2023 டாடா டிகோர் EV மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அகிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல், CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    காரின் வெளிப்புறம் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், புது முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்பார்க் கிரீன் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. உள்புறத்தில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரிகோக்னிஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஏராளமான புது கார்களை அறிமுகம் செய்தது.
    • புதிய கார்களில் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்டும் இடம்பெற்று இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் ஹேச்பேக் காரின் அல்ட்ரோஸ் ரேசர் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 மாடலில் காட்சிக்கு வைத்தது. பொது மக்கள் மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களை அதிகம் கவர்ந்த அல்ட்ரோஸ் ரேசர் மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ஆகும்.

    அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் ரேசர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் வித்தியாசமான ரியர் ஸ்பாயிலர், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப், டூயல் டோன் நிற ஆப்ஷன், பிளாக்டு-அவுட் ஹெட்லைட், முன்புற கிரில் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் ஏராளமான ரெட் அக்செண்ட்கள், ரேசர் லோகோ, ஆல் பிளாக் இருக்கை மேற்கவர் மற்றும் ரெட் நிற ஸ்டிட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புது காரில் அளவில் பெரிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118.3 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்து்ம திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் குறைபாடு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • குறைபாடு கண்டறியப்பட்ட யூனிட்களை வைத்திருப்போர் அதனை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் 17 ஆயிரத்திற்கும் அதிக கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. கார்களின் ஏர்பேக் கண்ட்ரோலர் தவறுதலாக பொருத்தப்பட்டதால் ரிகால் செய்யப்பட உள்ளன.

    ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டறியப்பட்டு இருக்கும் 17 ஆயிரத்து 362 யூனிட்களையும் ரிகால் செய்து, அதில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து இலவசமாக சரி செய்து கொடுப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

    பிரச்சினை சரி செய்யப்படவில்லை எனில், கார் விபத்தில் சிக்கும் போது அதில் உள்ள ஏர்பேக் வேலை செய்யாத நிலை ஏற்படும் என மாருதி சுசுகி சந்தேகிக்கிறது. வொர்க்ஷாப்களில் இருந்து தொடர்பு கொள்ளும் வரை அல்லது பிரச்சினையை சரி செய்து முடிக்கும் வரை காரை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

    கடந்த மாதம் தான் கிராண்ட் விட்டாரா, XL6, எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற மாடல்களில் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி ரிகால் செய்தது. இந்த பிரச்சினையில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. இது மட்டுமின்றி கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வேகன் ஆர், இக்னிஸ் மற்றும் செலரியோ மாடல்களின் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் ரிகால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV400 எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய மஹிந்திரா XUV400 மாடலின் முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் கார் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய XUV400 மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இவை அறிமுக விலை என்றும் இது முதல் 5 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய மஹிந்திரா XUV400 மாடல் இரண்டு வேரியண்ட்கள், இருவித சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV400 மாடல் 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 கிலோமீட்டர் மற்றும் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இவற்றுடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இரு வேரியண்ட்களும் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    காரின் வெளிப்புறம் காப்பர் நிற இன்சர்ட்கள், பிலான்க்டு-ஆஃப் கிரில், ட்வின் பீக் லோகோ, புதிய எல்இடி டெயில் லைட்கள், 16 இன்ச் அலாய் வீல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் 7 இன்ச் டச் ஸ்கரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளது.

    இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, டிரைவ் மோட்கள், 60:40 ஸ்ப்லிட் ரியர் சீட்கள், புளூ சென்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV400 மாடலின் முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. வெளியாகி ஒரே ஆண்டிற்குள் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மஹிந்திரா XUV400 மாடல் ஆர்க்டிக் புளூ, எவரஸ்ட் வைட், கேலக்ஸி கிரே, நபோலி பிளாக், இன்ஃபினிட்டி புளூ மற்றும் இன்ஃபினிட்டி புளூ மற்றும் சேடின் காப்பர் ரூஃப் என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    மஹிந்திரா XUV400 EC மற்றும் 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா XUV400 EC மற்றும் 7.7 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா XUV400 EL மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×