search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமான ஆடி Q3 ஸ்போர்ட்பேக் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான ஆடி Q3 ஸ்போர்ட்பேக் - விலை எவ்வளவு தெரியுமா?

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை ரூ. 51 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் டெக்னாலஜி + S லைன் என அழைக்கப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் ரூஃப்லைன், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை-கிலாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், எல்இடி டெயில் லைட்கள், S-லைன் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டர்போ புளூ, கிளேசியர் வைட், க்ரோனோஸ் கிரே, மிதோஸ் பிளாக் மற்றும் நவரா புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இண்டீரியர்கள் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நான்கு வித லம்பர் சப்போர்ட், ஆடி டிரைவ் செலக்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ஸ்போக் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு ஏர்பேக், TPMS, பார்கிங் ஏய்ட் பிளஸ் ரியர் வியூ கேமரா, ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆடிடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு RSA சர்வீஸ், 2+3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறுகிய காலக்கட்டத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×