என் மலர்tooltip icon

    கார்

    ஸ்கோடா நிறுவனத்தின் புது ஆக்டேவியா மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஸ்கோடா நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை சமீப காலமாக சோதனை செய்து வருகிறது. புதிய ஆக்டேவியா மாடல் என்ஜின் விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதன்படி நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடல் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.

    இந்த மாடலில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஎஸ் பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. புது ஆக்டேவியா மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் பெரிய ஃபுளோட்டிங் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அனைத்து பட்டன்கள் மற்றும் நாப்களில் டச் சார்ந்த கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    நிசான் நிறுவனம் கடந்த வாரம் புதிய மேக்னைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நிசான் மேக்னைட் மாடல் விலை இந்தியாவில் ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    அறிமுகமானதும் முன்பதிவு துவங்கிய நிலையில், நிசான் மேக்னைட் மாடல் ஐந்து நாட்களில் 5 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    நிசான் மேக்னைட்

    புதிய நிசான் மேக்னைட் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இவை அறிமுக விலை தான் என்றும் டிசம்பர் 31, 2020 ஆம் தேதிக்கு பின் இந்த விலை மாற்றப்படும்.

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    ரெனால்ட் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ. 70 ஆயிரம் வரையும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.

     ரெனால்ட் டஸ்டர்

    ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 43 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், ஏஎம்டி வேரியண்ட்களுக்கு ரூ. 10 கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது. 

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று ஒவ்வொரு கார் மாடலுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவைகளாக பிரித்து வழங்கப்படும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் மாடல் புதிய மைல்கல் எட்டி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜி கிளாஸ் மாடல் உற்பத்தியில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 1979 ஆண்டுகளில் முதலில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் தற்சமயம் ஆஸ்த்ரியாவில் உள்ள கிராஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    2017 ஆம் ஆண்டில் ஜி கிளாஸ் 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடல் ஜி63 ஏஎம்தி மற்றும் ஜி 350டி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ்

    இதுதவிர ஜி கிளாஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் இகியூ சப் பிராண்டின் அங்கமாக இருக்கும் என தெரிகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் இவி அந்நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். 

    இந்திய சந்தையில் பத்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் 2 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தமாக 2200 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

     நெக்சான் எலெக்ட்ரிக்

    முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் மற்றொரு ஆயிரம் யூனிட்கள் விற்பனைாகி இருக்கின்றன. இந்த வளர்ச்சி கொண்டு நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளலாம். 

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் நெக்சான் இவி மாடல் 74 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. நெக்சான் இவி மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார், 30.20kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பவர்டிரெயின் 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவன வாகனங்களுக்கு இந்தியாவில் ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறு வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    அதன்படி ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. 

     ஹோண்டா கார்

    கடந்த மாதம் ஹோண்டா அமேஸ் சிறப்பு மற்றும் பிரத்யேக எடிஷனை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் ரூ. 12 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடல் ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும், ஹோண்டா சிவிக் பெட்ரோல் மாடல் ரூ. 1 லட்சமும், டீசல் மாடல் ரூ. 2.50 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் முன்பதிவில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதன் முன்பதிவு துவங்கப்பட்டது. தற்சமயம் புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது. 

     ஹூண்டாய் ஐ20

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் துவக்க விலை ரூ. 6.80 லட்சம் என துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடல் விலையை உயர்த்துகிறது. ஏற்கனவே மஹிந்திரா தார் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், விலை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் மாடல் அக்டோபர் 2 ஆம் தேதி ரூ. 9.8 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் பேஸ் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புதிய தார் துவக்க விலை ரூ. 11.9 லட்சமாக மாறியது. எனினும், இந்த விலை நேற்று வரை முன்பதிவு செய்தவர்களுக்கானது ஆகும்.

     மஹிந்திரா தார்

    அந்தவகையில் இன்று (டிசம்பர் 1) முதல் புதிய தார் மாடலை முன்பதிவு செய்வோர் சற்றே அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. புதிய தார் மாடலை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அறிமுக விலையில் வாங்கிடலாம்.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    பிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 1.94 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் விற்பனையகத்திற்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். புதிய காரை இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்சலன்ஸ் கிளப் வடிவமைத்த பிரத்யேக சேவை வழங்கப்படுகிறது. 

     பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன்

    பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலில் 4.4 லிட்டர் எம் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 625 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் இந்திய வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராவிடாஸ் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என கூறப்பட்டது. 

    எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கிராவிடாஸ் மாடல் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிகிறது.

     டாடா கிராவிடாஸ்

    புதிய கிராவிடாஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது ஹேரியர் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. டாடா கிராவிடாஸ் வெளியீடு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    டாடா கிராவிடாஸ் மாடல் அந்நிறுவனத்தின் ஹேரியர் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷன் ஆகும். இது 63 எம்எம் நீளமாகவும், 80 எம்எம் அகலமாகவும், 2741 எம்எம் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 172 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது மாடல்களின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில டொயோட்டா விற்பனையாளர்கள் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி வெர்ஷன் லீக் ஆகி உள்ளது.

     பார்ச்சூனர் பேஸ்லிப்ட்

    டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேலும் இதே மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய பேஸ்லிப்ட் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    சர்வதேச சந்தையில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் இதே என்ஜின் 175 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ×