search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா கார்
    X
    கியா கார்

    இந்திய சந்தைக்கென உருவாகும் புது கியா கார்

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட முற்றிலும் புதிய எம்பிவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் புதிய கியா எம்பிவி மாடல் இந்திய சந்தையில் 2022 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய எம்பிவி மாடல் கார்னிவல் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என  தெரிகிறது. அளவில் புதிய கார் மஹிந்திரா மராசோ மாடலுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அளவில் இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கு நடுவில் இருக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த மாடல் ஏழு பேர் பயணிக்கும் இருக்கைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது கூர்மையான தோற்றம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் லைன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் டைகர் நோஸ் கிரில் வழங்கப்படும் என தெரிகிறது.

    கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இந்த எம்பிவி மாடல் பல்வேறு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    Next Story
    ×