என் மலர்
ஆட்டோமொபைல்

யமஹா எம்டி125
2021 யமஹா எம்டி125 அறிமுகம்
யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
யமஹா நிறுவனம் தனது எம்டி ஸ்டிரீட்பைட்டர் சீரிசில் சிறிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 2021 எம்டி125 என அழைக்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டாம் புளுயோ நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஐகான் புளூ, டெக் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது.
புதிய நிறங்கள் தவிர 2021 யமஹா எம்டி125 மோட்டார்சைக்கிளில் 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

சஸ்பென்ஷனிற்கு முன்புறம் இன்வெர்ட் செய்யப்பட்ட போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. புதிய யமஹா எம்டி125 இந்திய சந்தையில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Next Story






