என் மலர்
கார்
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வால்வோ நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடலை நவம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.
இந்தியாவில் மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது டாப் எண்ட் ஆர் டிசைன் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

இதே என்ஜின் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது. இது குறைந்தபட்சம் 190 ஹெச்பி துவங்கி அதிகபட்சம் 390 ஹெச்பி வரையிலான செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.
புதிய வால்வோ எஸ்60 மாடல் இந்திய சந்தையில் பிஎம்டபியூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடி ஏ4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 ரீசார்ஜ் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.
அந்த வகையில் வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வால்வோ படிப்படியாக கம்பஷன் என்ஜின் வாகனங்களுக்கு மாற்றாக முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் அந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது கம்பஷன் என்ஜின் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பார்க்க ஸ்டான்டர்டு எக்ஸ்சி40 போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த கார் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வங்கும் திறன் பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் விற்றுத்தீர்ந்ததை தொடர்ந்து புதிய விலை பட்டியலுடன் முன்பதிவு துவங்கி இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இது சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை அக்டோபர் 31 ஆம் தேதி அல்லது முதல் 20 ஆயிரம் முன்பதிவுகளுக்கு ரூ. 28.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அறிமுகமானது முதல் இந்த கார் 2020 ஆண்டுக்கான யூனிட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் புதிய விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவை அறிமுக விலையை விட ரூ. 1 லட்சம் வரை அதிகம் ஆகும்.
எம்ஜி குளோஸ்டர் மிட்-லெவல் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் விலை முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாகி இருக்கிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் கார் 20 நாட்கள் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவு துவங்கிய 20 நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் சுமார் 4 ஆயிரம் யூனிட்களை டெலிவரி செய்ததாக அறிவித்தது. முன்பதிவில் 85 சதவீத யூனிட்கள் ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) ட்ரிம்கள் என ஹூண்டாய் அறிவித்து இருக்கிறது.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ஆறு சிங்கிள் டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் இது கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன விற்பனையில் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
1945 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் எட்டிய வரலாற்று நினைவுகளை திரும்பி பார்க்கும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பத்மஸ்ரீ விருது வென்ற அனுபம் கெர் குரல் கொடுத்துள்ளார்.

வீடியோ நிறைவு பகுதியில் சமீபத்திய பிஎஸ்6 ரக டியாகோ, டிகோர், நெக்சான், ஹேரியர் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களின் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இவை இந்திய சந்தையில் பாதுகாப்பான வாகனங்களாக இருக்கின்றன.
ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் கார் வெளியீட்டுக்கு முன் வலைதளத்தில் அப்டேட் ஆகி இருக்கிறது.
ஆட் இந்தியா நிறுவனத்தின் வலைதளம் சத்தமின்றி அப்டேட் ஆகி இருக்கிறது. அதன்படி வலைதளத்தில் எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முந்தைய வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலின் இந்திய விற்பனை விவரம் உறுதி செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் 2020 ஆண்டில் ஆடி அறிமுகம் செய்யும் ஆறாவாது கார் ஆகும். முன்னதாக கியூ9, ஏ8 எல், ஆர்எஸ்7, ஆர்எஸ் கியூ8, கியூ8 செலபிரேஷன் மற்றும் கியூ2 போன்ற மாடல்களை ஆடி அறிமுகம் செய்தது.

முந்தைய தகவல்களின் படி புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பெரிய சிங்கிள் பிரேம் கிரில், எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப்கள், பெரிய அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூப்-லைன் மற்றும் பிளாக்டு-அவுட் ORVMகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துட் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் 2018 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இது இந்தியாவில் அறிமுகமான முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.
தற்சமயம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோனா எலெக்ட்ரிக் மாடலின் பேஸ்லிப்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் டிசைன் அப்டேட் மற்றும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கோனா பேஸ்லிப்ட் மாடலில் கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், 3 பிராக்ஷன் எல்இடி ஹெட்லைட்கள், கீழ்புறம் அகலமான ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், உள்புறம் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேஸ்லிப்ட் மாடலில் 39.2 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 136 பிஹெச்பி மற்றும் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோமீட்டர் மற்றும் 484 கிலோமீட்டர் வரை செல்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் காரை இந்திய சந்தையில் ரீகால் செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்யுவி டீசல் யூனிட்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் பியூவல் பம்ப்பில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்யப்படுவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கியா செல்டோஸ் டீசல் யூனிட்கள் ரீகால் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், எத்தனை யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

வாடிக்கையாளர்கள் தங்களின் செல்டோஸ் டீசல் வேரியண்ட்டை அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் கொண்டு சென்று காரை சரி செய்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த கோளாறு இலவசமாக சரி செய்து வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடல் 5.5 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் அதிகம் விற்பனையாகும் எம்பிவியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் எர்டிகா மாடல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக விற்பனையில் முன்னணியில் உள்ளது.
மாருதி எர்டிகா எம்பிவி மாடல் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நவம்பர் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளிப்புறம் மற்றும் உற்புறங்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
பின் 2019 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா மாடலின் 6 பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷனை எக்ஸ்எல்6 பெயரில் அறிமுகம் செய்தது. இந்த மாடலும் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தில் இத்தனை லட்சம் வாகனங்களை விறப்னை செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு வாக்கில் மாருதி சுசுகி டிஜிட்டல் தளத்தை துவங்கியது. பின் 2019 ஏப்ரல் முதல் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
டிஜிட்டல் தளத்தில் நாடு முழுக்க ஆயிரம் விற்பனையகங்களை கொண்டுள்ளது. இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் கார் விவரங்களை டிஜிட்டல் தளத்தில் கேட்டறிந்துள்ளனர் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது.

புதிய கார் வாங்குவோர் பெரும்பாலும் கார் பற்றிய விவரங்களை ஆன்லைனில் ஆய்வு செய்து அதன்பின் விற்பனையகம் செல்கின்றனர். சமீப காலங்களில் வாடிக்கையாளர்கள் அலுவல் வழிமுறைகளை பூர்த்தி செய்யும் முன் விதிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ள விற்பனையகம் செல்கின்றனர்.
டிஜிட்டல் தளத்தில் புதிய கார் பற்றிய தகவல்களை சேகரிக்கும் வாடிக்கையாளர்கள் பத்து நாட்களுக்குள் காரை வாங்கிவிடுகின்றனர் என மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்த தேதியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. மேக்னைட் மாடல் ப்ரோடக்ஷன் வெர்ஷன், என்ஜின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கடந்த மாதம் வெளியிட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் நிசான் மேக்னைட் மாடல் இந்தியாவில் நவம்பர் 26 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய மேக்னைட் மாடல் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி நிசான் மேக்னைட் வெளியாகும் பட்சத்தில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 5.50 லட்சம் முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் சமீபத்திய பண்டிகை காலம் அமோகம் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் சமீபத்திய பண்டிகை கால விற்பனையில் 12 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் புதிய பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பண்டிகை காலம், தட்டுப்பாடு மற்றும் அசத்தலான சலுகைகள் உள்ளிட்டவை விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. விற்பனை மட்டுமின்றி முன்பதிவிலும் 10 முதல் 13 சதவீதம் வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக டொயோட்டா தெரிவித்து உள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாத விற்பனை பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபெற்று இருக்கிறது. பண்டிகை காலம் நிறைவுற்றதும் வாகனங்கள் விற்பனை குறைய வாய்ப்புகள் இருப்பதாக அந்நிறுவனம் கணித்திருக்கிறது.






