search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஸ்கோடா ஆக்டேவியா
    X
    ஸ்கோடா ஆக்டேவியா

    இணையத்தில் லீக் ஆன புது ஸ்கோடா ஆக்டேவியா விவரங்கள்

    ஸ்கோடா நிறுவனத்தின் புது ஆக்டேவியா மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஸ்கோடா நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை சமீப காலமாக சோதனை செய்து வருகிறது. புதிய ஆக்டேவியா மாடல் என்ஜின் விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதன்படி நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடல் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.

    இந்த மாடலில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஎஸ் பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. புது ஆக்டேவியா மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் பெரிய ஃபுளோட்டிங் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அனைத்து பட்டன்கள் மற்றும் நாப்களில் டச் சார்ந்த கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    Next Story
    ×