என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 என்ட்ரி லெவல் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்தசமயம் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் பல்வேறு வேரியண்ட்கள், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     2020 ஹூண்டாய் ஐ20

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய தலைமுறை ஐ20 மாடல் பேஸ் வேரியண்ட் ஒன்று இரா எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஆர்டிஒ அரசு ஆவணம் மூலம் புதிய பேஸ் வேரியண்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    புதிய பேஸ் வேரியண்ட் பற்றிய தகவல்களை ஹூண்டாய் இதுவரை வெளியிடவில்லை. முன்னதாக பலமுறை ஹூண்டாய் தனது வாகனங்களின் பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதனால் புதிய ஐ20 மாடலின் இரா பேஸ் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வால்வோ கார் மாயமாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    வால்வோ இந்தியா நிறுவனம் தனது வி90 கிராஸ் கண்ட்ரி மாடலை வலைதளத்தில் இருந்து திடீரென நீக்கி உள்ளது. அந்த வகையில் இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. 

    இந்தியாவில் வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி

    வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி மாடல் சிங்கிள் டி5 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 235 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இததுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இதுதவிர ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் இகோ, கம்பர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோட் என நான்கு வித டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    போர்டு நிறுவனத்தின் 2021 இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்சமயம் விற்பனையாகும் இகோஸ்போர்ட் மாடலின் ரக்கட் மற்றும் ஆப்-ரோடு வெர்ஷன் ஆகும்.

    ஆக்டிவ் சீரிசில் இணையும் புதிய எஸ்யுவி மாடலாக புதிய இகோஸ்போர்ட் இருக்கிறது. முன்னதாக பியஸ்டா, போகஸ் போன்ற ஹேட்ச்பேக் மாடல்களில் ஆக்டிவ் பிராண்டிங் பயன்படுத்தப்பட்டு உள்ளது. புதிய மாடல் சற்றே உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது.

     2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ்

    இதுதவிர புதிய இகோஸ்போர்ட் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இவை மாடலுக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது. புதிய மாடல் வீல் ஆர்ச், பம்ப்பர்களில் பிளாக் கிளாடிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பக்கவாட்டில் ஆக்விட் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடலில் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 125 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது கார் மாடல்களை குத்தகைக்கு வழங்கும் புதிய திட்டத்தை துவங்கி உள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஆரிக்ஸ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து கார்களை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்த திட்டம் மாத சம்பளம் வாங்கும் நபர்கள், எஸ்எம்இ-க்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்காக அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா தெரிவித்து உள்ளது.

    புகிய கிளெவர் லீஸ் திட்டத்தில் ஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ மற்றும் சூப்பர்ப் மாடல்கள் 24, 36, 48 மற்றும் 60 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மாத வாடகை ரூ. 22,580 முதல் துவங்குகிறது. 

     ஸ்கோடா கார்

    இந்த கட்டணத்தில் சாலை வரி, பிரேக்டவுன் அசிஸ்டண்ஸ், விபத்துகளின் போது ஏற்படும் செலவீனங்கள், சர்வீஸ் பராமரிப்பு, டையர் மற்றும் பேட்டரி மாற்றம் உள்ளிட்டவை அடங்கும். 

    புதிய சேவை ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, மும்பை, பூனே, பெங்களுரு, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் பேஸ் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தார் எஸ்யுவி மாடலை சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ததது. புதிய தார் மாடல் இந்தியாவில் பல்வேறு வேரியண்ட்களை கொண்டிருந்தது. மேலும் இதன் துவக்க விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது தார் ஏஎக்ஸ் எஸ்டிடி, ஏஎக்ஸ் பெட்ரோல் மற்றும் எஸ்எக்ஸ் டீசல் வேரியண்ட்களை தார் வலைதளத்தில் இருந்து சத்தமின்றி நீக்கி இருக்கிறது. 

     மஹிந்திரா தார்

    மஹிந்திரா தார் மூன்று பேஸ் வேரியண்ட்கள் அதன் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் இதன் துவக்க விலை ரூ. 11.90 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி இருக்கிறது.

    தற்சமயம் தார் என்ட்ரி லெவல் மாடல் ஏஎக்ஸ் (ஒ) ஆகும். இது கன்வெர்டிபில் ரூப் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மூன்று பேஸ் வேரியண்ட்களை வலைதளத்தில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை மஹிந்திரா இதுவரை அறிவிக்கவில்லை. 
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேக்னைட் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில் புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 5.50 லட்சத்தில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

     நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அல்ட்ரோஸ் எக்ஸ்எம் பிளஸ் வடிவில் வெளியாகி இருக்கிறது. இது எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்எம் ஸ்டைல் ட்ரிம்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்எம் பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 6.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் வேரியண்ட் பல்வேறு புதிய அம்சங்கள், காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் உபகரணங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்எம் பிளஸ் மாடல் ஹை ஸ்டிரீட் கோல்டு, டவுன்டவுன் ரெட், அவென்யூ வைட் மற்றும் மிட் டவுன் கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் ரெவோடிரான் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மாடலுக்கு புதிய டீசரை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மாடலுக்கென புதிய டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     மாருதி சுசுகி பலேனோ

    எனினும், புதிய பலேனோ மாடல் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக பலேனோ ஆர்எஸ் மாடலை 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருந்தது. 

    எனினும், மோசமான விற்பனை காரணமாக இந்த வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டது. மாருதி சுசுகி பலேனோ ஆர்எஸ் வேரியண்ட் 100 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருந்தது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    டாடா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கேமோ எடிஷன் எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட்பிளஸ் வேரியண்ட்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷனும், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் ட்ரிம்கள் ஆட்டோமேடிக் யூனிட்களுடன் வழங்கப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் புதிய கேமோ கிரீன் ஷேட், 17 இன்ச் பிளாக்ஸ்டோன் அலாய் வீல்கள், கேமோ லோகோ வழங்கப்படுகிறது.

     டாடா ஹேரியர் கேமோ எடிஷன்

    உள்புறம் கன்மெட்டல் கிரே, பிளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் டேஷ்போர்டு மற்றும் ஹார்மோனிசிங் பினெக் கலிகோ பிளாக்ஸ்டோன் லெதர் சீட்கள் மற்றும் கேமோ கிரீன் ஸ்டிட்சிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் ஹேரியர் மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     
    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Meteor 350 தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. 

    புதிய ராயல் என்பீல்டு Meteor 350 அந்நிறுவனத்தின் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட்டான பயர்பால் விலை ரூ. 1,78,825 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ராயல் என்பீல்டு Meteor 350

    ராயல் என்பீல்டு Meteor 350 ஸ்டெல்லார் மாடல் விலை ரூ. 1,81,342 என்றும் சூப்பர்நோவா வேரியண்ட் விலை ரூ. 1,90,536 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, லாங் ஸ்டிரோக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின் சைடெட் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 ஐ20 மாடல் கார் பல்வேறு புது அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் துவக்க விலை ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என தெரிகிறது. இந்த கார் போலார் வைட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, பியரி ரெட், ஸ்டேரி நைட், மெட்டாலிக் காப்பர், போலார் வைட் மற்றும் பிளாக் ரூப், பியரி ரெட் மற்றும் பிளாக் ரூப் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

     2020 ஹூண்டாய் ஐ20

    இந்த கார் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார், 6 ஸ்பீடு ஐஎம்டி யூனிட், 7 ஸ்பீடு டிசிடி யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பாக் லைட்கள், முக்கோண வடிவம் கொண்ட பாக் லைட் சரவுண்ட், கேஸ்கேடிங் கிரில் டிசைன், சன்ரூப், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், ஷார்க் பின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் மைல்கல் எட்டி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. இதன் காரணமாக புதிய தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் ஏழு மாதங்களாக அதிகரித்து இருக்கிறது.

    புதிய தார் மாடல் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.

     மஹிந்திரா தார்

    புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×