என் மலர்tooltip icon

    கார்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் விலை இந்தியாவில் சத்தமின்றி மாற்றப்பட்டு இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி மாடல் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. புதிய குளோஸ்டர் மாடல் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மாடலை வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் ரூ. 28.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஆண்டிற்கான யூனிட்கள் அனைத்து விற்றுத்தீர்ந்து விட்டன. அந்த வகையில் இதன்பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகள் புதிய விலையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இது ஆறு மற்றும் ஏழு இருக்கை கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போதைய விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இதன் பேஸ் மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மிட், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் சேவி மாடல் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
    ஹோண்டா அமேஸ் மற்றும் டபிள்யூஆர்வி மாடல்கள் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தியாளராக திகழ்கிறது. ஹோண்டோ அமேஸ் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்குளுசிவ் என இரண்டு புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹோண்டா அமேஸ் கார், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல்களில் விண்டோ குரோம் மோல்டிங், பிரீமியம் சூடோ பிளாக் சீட் கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

     ஹோண்டா அமேஸ் மற்றும் டபிள்யூஆர்வி

    ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலில் விண்டோ குரோம் கார்னிஷ்டு கிரில் மற்றும் பாக் லேம்ப், ஸ்டெப் இலுமினேஷன் மற்றும் முன்புற புட் லைட், எக்ஸ்குளூசிவ் எடிஷன் எம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹோண்டா அமேஸ் மற்றும் டபிள்யூஆர்வி எக்ஸ்குளுசிவ் எடிஷன் மாடல்களின் விலை முறையே ரூ. 7.96 லட்சம் மற்றும் ரூ. 9.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2020 மாதத்தில் மட்டும் 3750 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 48 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது எம்ஜி மோட்டார் 2537 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    இந்த நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் மாடல் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இந்த மாடல் மட்டும் 3625 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய மாதத்தை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். முந்தைய மாதத்தில் எம்ஜி மோட்டார் 2410 ஹெக்டார் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

     எம்ஜி ஹெக்டார்

    அக்டோபர் மாதத்தில் எம்ஜி இசட்எஸ் இவி மாடல் 125 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. முன்னதாக அக்டோபர் 8 ஆம் தேதி எம்ஜி நிறுவனம் தனது குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. வெளியான முதல் மாதத்திலேயே இந்நிறுவனம் 2 ஆயிரம் முன்பதிவுகளை கடந்தது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் இரண்டு வித டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின்களுடன் கிடைக்கிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை நவம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட்

    புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. எப்போதும் போன்றே புதிய ஹூண்டாய் மாடலிலும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட இருக்கின்றன. 

    இந்தியாவில் முதல் கனெக்ட்டெட் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை தவிர, இதில் பல்வேறு சவுகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹோண்டா ஜாஸ் மாடலிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹூண்டாய் ஐ20

    அந்த வகையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சன்ரூப் வசதியை பெறும் இரண்டாவது மாடலாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 இருக்கும். 

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மாடல் அதிரடி அம்சத்துடன் உருவாகி வருவதாக தகவல்.


    டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்டிராடா வி4 அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு வருகிறது.  அந்த வகையில், டுகாட்டி வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் மல்டிஸ்டிராடா வி4 மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. 

     மல்டிஸ்டிராடா வி4

    டீசர் படங்களின் படி, டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி சார்ந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் அப் & டவுன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவு மற்றும் விலை வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது புதிய மேக்னைட் மாடல் விலையை அடுத்த மாதம் அறிவிப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. இதன் விநியோகம் நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

     நிசான் மேக்னைட்

    உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    போர்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.


    போர்டு இகோஸ்போர்ட் மாடல் விலை இந்திய சந்தையில் திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய இகோஸ்போர்ட் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1500 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய விலை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலானதாக போர்டு இந்தியா செரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோகம் மற்றும் இதர பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனாலேயே கார் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

     போர்டு இகோஸ்போர்ட்

    தற்சமயம் போர்டு இகோஸ்போர்ட் மாடல் ரூ. 8.19 லடசத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    போர்டு இகோஸ்போர்ட் மாடல் தன்டர் எனும் பெயரில் ஸ்பெஷல் எடிஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் மாடல் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    ஸ்கோடா இந்தியா தனது கரோக் மாடலை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது கரோக் எஸ்யூவி மாடல் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத் தீர்ந்ததாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்விஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஜாக் ஹாலின்ஸ் கம்ப்லிட்லி பில்ட்-அப் எஸ்யுவிக்கள் இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்ததாக தெரிவித்து இருக்கிறார். 

     ஸ்கோடா கரோக்

    இந்திய சந்தையில் முதற்கட்டமாக 1000 ஸ்கோடா கரோக் யூனிட்களை கொண்டுவந்தது. ஸ்கோடா கரோக் அறிமுக நிகழ்விலும் அந்நிறுவனம் இதே தகவலை தெரிவித்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவன தலைமை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களில் கரோக் விற்றுத் தீர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    ஸ்கோடா கரோக் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் கேண்டி வைட், மேஜிக் பிளாக், மேக்னடிக் பிரவுன், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர் மற்றும் குவாட்ஸ் கிரே என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
    புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 காருக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மட்டுமின்றி புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு ஹூண்டாய் விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது. புத்தம் புதிய ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வருகிறது. 

    ஹூண்டாய் ஐ20

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்சென்ட் மாடல் கார் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது வலைதளத்தில் இருந்து எக்ஸ்சென்ட் மாடலை சத்தமின்றி நீக்கி உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடல் அந்நிறுவன வலைதளத்தில் காணப்படாததால், இதன் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹூண்டாய் இந்தியா தனது எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக புதிதாக ஆரா எனும் பெயரில் காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. 

     ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

    இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆரா மாடல் எக்ஸ்சென்ட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதுவரை எக்ஸ்சென்ட் மற்றும் ஆரா மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்சமயம் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடல் வாடகை கார் பயன்பாட்டிற்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது சிஎன்ஜி வேரியண்ட் ஆகும்.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் கார் ஐந்து ஆண்டுகள் அதாவது 59 மாதங்களில் எட்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

    இந்திய சந்தையில் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 2015 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் ஆனது முதல் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான ஒரே வருடத்தில் இந்த மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 

     மாருதி சுசுகி பலேனோ

    2017 ஆண்டு வாக்கில் இதன் ஆல்பா வேரியணட்டில் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. பின் மூன்று ஆண்டுகளில் பலேனோ ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பலேனோ மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ மாடல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    ×