என் மலர்tooltip icon

    கார்

    இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மைல்கல் கடந்துள்ளது.

    இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. உற்பத்தியில் மூன்று தசாப்தங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி உள்ளது. 

    புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் #WeLoveYou4Million எனும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் சியரா மாடலுடன் 1991 ஆண்டு டாடா மோட்டார்ஸ் உற்பத்தியை துவங்கியது. வெளியானது முதல் இந்த எஸ்யுவி இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.

     டாடா கார்

    இதைத் தொடர்ந்து இன்டிகா, சியெரா, சுமோ என பல்வேறு மாடல்களில் மொத்தம் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை 2005-06 ஆண்டு காலக்கட்டத்தில் எட்டியது. பின் 20 லட்சம் யூனிட்களை 2015 ஆம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்தது. இதைத் தொடர்ந்து சபாரி மற்றும் டாடா நானோ போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

    இந்த இரு மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இதில் டாடா நானோ மாடல் குறைந்த விலை பயணிகள் காருக்கான வரலாற்றை திருத்தி எழுதியது. பின் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தியில் 40 லட்சம் யூனிட்களை டாடா மோட்டார்ஸ் கடந்து உள்ளது.
    இந்திய சந்தையில் டீலர் நெட்வொர்க் எண்ணிக்கையை ரெனால்ட் நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா முழுக்க சுமார் 34 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்து இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனம் ஒரு ஆண்டிற்குள் 90 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்துள்ளது.

     ரெனால்ட் டிரைபர்

    புதிய டீலர்ஷிப்கள் மத்திய பிரதேசம், தமிழ் நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.

    தற்சமயம் ரெனால்ட் இந்தியாவின் ஒட்டுமொத்த டீலர் நெட்வொர்க்கில் 415 விற்பனை மற்றும் 475-க்கும் அதிக சர்வீஸ் டச்பாயிண்ட்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 200-க்கும் அதிகமான வொர்க்ஷாப் ஆன் வீல்ஸ் சேவையும் அடங்கும்.  
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அர்பன் குரூயிசர் எஸ்யுவி மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 

    இந்த மாத துவக்கத்தில் அர்பன் குரூயிசர் மாடல் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் இவை விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. மேலும் அர்பன் குரூயிசர் மாடலுக்கான விநியோகம் துவங்கப்பட்டு இருக்கிறது.

     அர்பன் குரூயிசர்

    புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். 

    இந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 8.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  

    மாருதி சுசுகி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து பத்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. மாருதியின் குஜராத் ஆலையில் இது புதிய சாதனையாக அமைந்து இருக்கிறது. இந்த சாதனை அக்டோபர் 21 ஆம் தேதி எட்டப்பட்டு இருக்கிறது.

    குஜராத் ஆலை உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் 3 ஆண்டுகள் 9 மாதங்களில் எட்டியிருக்கிறது. இது மற்ற ஆலைகளை விட வேகமானது என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி பணிகள் பிப்வரி 2017 வாக்கில் துவங்கப்பட்டது.

     மாருதி பலேனோ

    புதிய மைல்கல் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது நெக்சா பிரீமியம் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலேனோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த மாடல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.

    கியா மோட்டார்ஸ் இந்தியா தனது புதிய சொனெட் மாடல் முன்பதிவில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்த மைல்கல் முன்பதிவு துவங்கிய இரண்டு மாதங்களில் எட்டப்பட்டு உள்ளது. கியா மோட்டார்ஸ் தனது சொனெட் மாடலுக்கான முன்பதிவை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்கியது.

    கடந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களில் இரண்டு முன்பதிவுகள் நடைபெற்றதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. கியா சொனெட் மாடல் அறிமுகமான 12 நாட்களில் 9266 யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     கியா சொனெட்

    புதிய சொனெட் எஸ்யுவி மாடலின் துவக்க விலை ரூ. 6.71 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கியா சொனெட் மாடல் அமேக வரவேற்பு பெற்று வருகிறது. 

    கியா சொனெட் மாடலில் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 

    இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
    இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ மாடலின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி உள்ளது. ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப வென்யூ மாடல் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    விலை மாற்றம் தவிர காம்பேக்ட் எஸ்யுவி-யின் சில வேரியண்ட்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. என்ட்ரி லெவல் ஹூண்டாய் வென்யூ 1.2இ மாடலின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 6.75 லட்சம் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வென்யூ பெரும்பாலான வேரியண்ட்களுக்கு ரூ. 7 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     ஹூண்டாய் வென்யூ

    ஹூண்டாய் வென்யூ டி-ஜிடிஐ டிசிடி எஸ்எக்ஸ் பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 12 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி ஹூண்டாய் வென்யூ மாடல் ரூ. 6.74 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.65 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) டூயல் டோன் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக வென்யூ மாடல் 24 ட்ரிம்களில் கிடைத்த நிலையில், தற்சமயம் இது 19 ட்ரிம்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் மாடல் ஆப் ரோடு எஸ்யுவி இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய தார் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய தார் மாடல் முன்பதிவில் 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. புதிய தார் மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் மைல்கல் குறுகிய காலக்கட்டத்தில் எட்டப்பட்டு உள்ளது. புதிய தார் மாடல் வாங்கியவர்களில் 57 சதவீதம் பேர் முதல்முறை கார் வாங்குவோர் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

     மஹிந்திரா தார்

    புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அறிமுக நிகழ்வுக்கு முன் 2020 ஹூண்டாய் ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

     ஹூண்டாய் ஐ20

    2020 ஹூண்டாய் ஐ20 மாடலில் புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய டூயல் டோன் அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் புது டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் மேலும் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. என்ஜின்களுக்கு ஏற்ப 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி, டார்க் கன்வெர்ட்டர் யூனிட், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி போன்ற டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அர்பன் குரூயிசர் மாடலின் காரின் விநியோகத்தை விரைவில் துவங்க உள்ளது. தற்சமயம் உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் குரூயிசர் மாடலின் முதற்கட்ட யூனிட்கள் ஆலையில் இருந்து அனுப்பப்பட்டன.

    இந்தியாவில் புதிய அர்பன் குரூயிசர் மாடல் முன்பதிவு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கியது. இதுவரை அர்பன் குரூயிசர் மாடலுக்கு முன்பதிவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

     அர்பன் குரூயிசர்

    டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 8.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  

    புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். 
    இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


    இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ மற்றும் வென்டோ கார்களின் ரெட் அண்ட் வைட் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் விசேஷ ரெட் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    இரு மாடல்களும் போலோ ஹைலைன் பிளஸ் ஏடி மற்றும் வென்டோ ஹைலைன் ஏடி மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. போலோ ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 9.19 லட்சம் என்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரூ. 11.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     போக்ஸ்வேகன் போலோ

    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இரண்டு கார்களிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    புதிய ரெட் அண்ட் வைட் ஸ்பெஷல் எடிஷன் தவிர போக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது. 
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் செல்டோஸ் அனிவர்சரி எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 13.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் வெளிப்புறத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டேங்கரைன் சென்டர் கேப், டூயல் மப்ளர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாற்றங்கள் காரணமாக காரின் வெளிப்புற அளவீடு அதிகரித்து இருக்கிறது.

     கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன்

    கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஐவிடி யூனிட் வழங்கப்படுகிறது. இந்த எடிஷன் மொத்தத்தில் 6 ஆயிரம் யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விலை ரூ. 39.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்

    புதிய பிஎம்டபிள்யூ மாடலில் கிட்னி கிரில், எல்இடி லைட்டிங், டூயல் டோன் அலாய் வீல்கள், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் எம்ஐடி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
    ×