என் மலர்
கார்
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. எப்போதும் போன்றே புதிய ஹூண்டாய் மாடலிலும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்தியாவில் முதல் கனெக்ட்டெட் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை தவிர, இதில் பல்வேறு சவுகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹோண்டா ஜாஸ் மாடலிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சன்ரூப் வசதியை பெறும் இரண்டாவது மாடலாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 இருக்கும்.
புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மாடல் அதிரடி அம்சத்துடன் உருவாகி வருவதாக தகவல்.
டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்டிராடா வி4 அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டுகாட்டி வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் மல்டிஸ்டிராடா வி4 மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

டீசர் படங்களின் படி, டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி சார்ந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் அப் & டவுன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவு மற்றும் விலை வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் தனது புதிய மேக்னைட் மாடல் விலையை அடுத்த மாதம் அறிவிப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. இதன் விநியோகம் நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
போர்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.
போர்டு இகோஸ்போர்ட் மாடல் விலை இந்திய சந்தையில் திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய இகோஸ்போர்ட் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1500 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலானதாக போர்டு இந்தியா செரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோகம் மற்றும் இதர பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனாலேயே கார் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் போர்டு இகோஸ்போர்ட் மாடல் ரூ. 8.19 லடசத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
போர்டு இகோஸ்போர்ட் மாடல் தன்டர் எனும் பெயரில் ஸ்பெஷல் எடிஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் மாடல் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்கோடா இந்தியா தனது கரோக் மாடலை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது கரோக் எஸ்யூவி மாடல் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத் தீர்ந்ததாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்விஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஜாக் ஹாலின்ஸ் கம்ப்லிட்லி பில்ட்-அப் எஸ்யுவிக்கள் இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்ததாக தெரிவித்து இருக்கிறார்.

இந்திய சந்தையில் முதற்கட்டமாக 1000 ஸ்கோடா கரோக் யூனிட்களை கொண்டுவந்தது. ஸ்கோடா கரோக் அறிமுக நிகழ்விலும் அந்நிறுவனம் இதே தகவலை தெரிவித்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவன தலைமை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களில் கரோக் விற்றுத் தீர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்கோடா கரோக் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் கேண்டி வைட், மேஜிக் பிளாக், மேக்னடிக் பிரவுன், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர் மற்றும் குவாட்ஸ் கிரே என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 காருக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மட்டுமின்றி புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு ஹூண்டாய் விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது. புத்தம் புதிய ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வருகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்சென்ட் மாடல் கார் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வலைதளத்தில் இருந்து எக்ஸ்சென்ட் மாடலை சத்தமின்றி நீக்கி உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடல் அந்நிறுவன வலைதளத்தில் காணப்படாததால், இதன் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹூண்டாய் இந்தியா தனது எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக புதிதாக ஆரா எனும் பெயரில் காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆரா மாடல் எக்ஸ்சென்ட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதுவரை எக்ஸ்சென்ட் மற்றும் ஆரா மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்சமயம் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடல் வாடகை கார் பயன்பாட்டிற்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது சிஎன்ஜி வேரியண்ட் ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் கார் ஐந்து ஆண்டுகள் அதாவது 59 மாதங்களில் எட்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 2015 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் ஆனது முதல் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான ஒரே வருடத்தில் இந்த மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

2017 ஆண்டு வாக்கில் இதன் ஆல்பா வேரியணட்டில் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. பின் மூன்று ஆண்டுகளில் பலேனோ ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பலேனோ மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ மாடல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மைல்கல் கடந்துள்ளது.
இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. உற்பத்தியில் மூன்று தசாப்தங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி உள்ளது.
புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் #WeLoveYou4Million எனும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் சியரா மாடலுடன் 1991 ஆண்டு டாடா மோட்டார்ஸ் உற்பத்தியை துவங்கியது. வெளியானது முதல் இந்த எஸ்யுவி இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்டிகா, சியெரா, சுமோ என பல்வேறு மாடல்களில் மொத்தம் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை 2005-06 ஆண்டு காலக்கட்டத்தில் எட்டியது. பின் 20 லட்சம் யூனிட்களை 2015 ஆம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்தது. இதைத் தொடர்ந்து சபாரி மற்றும் டாடா நானோ போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
இந்த இரு மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இதில் டாடா நானோ மாடல் குறைந்த விலை பயணிகள் காருக்கான வரலாற்றை திருத்தி எழுதியது. பின் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தியில் 40 லட்சம் யூனிட்களை டாடா மோட்டார்ஸ் கடந்து உள்ளது.
இந்திய சந்தையில் டீலர் நெட்வொர்க் எண்ணிக்கையை ரெனால்ட் நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா முழுக்க சுமார் 34 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்து இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனம் ஒரு ஆண்டிற்குள் 90 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்துள்ளது.

புதிய டீலர்ஷிப்கள் மத்திய பிரதேசம், தமிழ் நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.
தற்சமயம் ரெனால்ட் இந்தியாவின் ஒட்டுமொத்த டீலர் நெட்வொர்க்கில் 415 விற்பனை மற்றும் 475-க்கும் அதிக சர்வீஸ் டச்பாயிண்ட்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 200-க்கும் அதிகமான வொர்க்ஷாப் ஆன் வீல்ஸ் சேவையும் அடங்கும்.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அர்பன் குரூயிசர் எஸ்யுவி மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்த மாத துவக்கத்தில் அர்பன் குரூயிசர் மாடல் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் இவை விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. மேலும் அர்பன் குரூயிசர் மாடலுக்கான விநியோகம் துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 8.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து பத்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. மாருதியின் குஜராத் ஆலையில் இது புதிய சாதனையாக அமைந்து இருக்கிறது. இந்த சாதனை அக்டோபர் 21 ஆம் தேதி எட்டப்பட்டு இருக்கிறது.
குஜராத் ஆலை உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் 3 ஆண்டுகள் 9 மாதங்களில் எட்டியிருக்கிறது. இது மற்ற ஆலைகளை விட வேகமானது என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி பணிகள் பிப்வரி 2017 வாக்கில் துவங்கப்பட்டது.

புதிய மைல்கல் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது நெக்சா பிரீமியம் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலேனோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த மாடல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது.






