search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா கார்
    X
    டாடா கார்

    பயணிகள் கார் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்

    இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மைல்கல் கடந்துள்ளது.

    இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. உற்பத்தியில் மூன்று தசாப்தங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி உள்ளது. 

    புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் #WeLoveYou4Million எனும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் சியரா மாடலுடன் 1991 ஆண்டு டாடா மோட்டார்ஸ் உற்பத்தியை துவங்கியது. வெளியானது முதல் இந்த எஸ்யுவி இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.

     டாடா கார்

    இதைத் தொடர்ந்து இன்டிகா, சியெரா, சுமோ என பல்வேறு மாடல்களில் மொத்தம் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை 2005-06 ஆண்டு காலக்கட்டத்தில் எட்டியது. பின் 20 லட்சம் யூனிட்களை 2015 ஆம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்தது. இதைத் தொடர்ந்து சபாரி மற்றும் டாடா நானோ போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

    இந்த இரு மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இதில் டாடா நானோ மாடல் குறைந்த விலை பயணிகள் காருக்கான வரலாற்றை திருத்தி எழுதியது. பின் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தியில் 40 லட்சம் யூனிட்களை டாடா மோட்டார்ஸ் கடந்து உள்ளது.
    Next Story
    ×