என் மலர்tooltip icon

    கார்

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    பிஎம்டபிள்யூ இந்தியா தனது கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ குழுமம் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார் மாடல்களின் விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்

    தற்சமயம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. 

    பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்6, இசட்4, எம்2 காம்படீஷன், எம்4 கூப், எம்5 காம்படீஷன் மற்றும் எம்8 கூப் உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இவை சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் 12 நாட்களில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகமான 12 நாட்களில் 9,266 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 18,676 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

    கடந்த மாதம் விற்பனையில், அதிக யூனிட்களை கடந்த இரண்டாவது மாடலாக கியா சொனெட் இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கியா சொனெட் 9,079 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     கியா சொனெட்

    கியா சொனெட் மாடலை வாங்க இதுவரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் கியா மோட்டார்ஸ் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    அடுத்த 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரம் யூனிட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என கியா மோட்டார்ஸ் எதிர்பார்ப்பு தெரிவித்து உள்ளது.
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8116 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வாகன விற்பனை சந்தை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

     டொயோட்டா யாரிஸ்

    இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாத விற்பனையில் டொயோட்டா நிறுவனம் 46 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 2019 செப்டம்பரில் டொயோட்டா நிறுவனம் 10,203 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. 

    கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, முன்பதிவு சதவீதம் 14 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 
    ரெனால்ட் நிறுவனம் தனது இரு கார் மாடல்களின் விலையை திடீரென மாற்றி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ரெனால்ட் நிறுவனம் டிரைபர் மற்றும் க்விட் மாடல் கார்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் மாடல் ரூ. 13 ஆயிரம், க்விட் வேரியண்ட்களுக்கு ரூ. 3510 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடல் துவக்க விலை ரூ. 5.12 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.34 லட்சம் என மாறி இருக்கிறது. ரெனால்ட் க்விட் மாடல் துவக்க விலை ரூ. 3.07 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.20 லட்சம் என மாறி இருக்கிறது.

     ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    இதன் சிறிய என்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. பெரிய பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது நான்காவது கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    இந்நிலையில், எம்ஜி குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் முதல் லெவல் 1 ஆட்டோனோமஸ் எஸ்யுவி ஆகும். புதிய குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

     எம்ஜி குளோஸ்டர்

    இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டர் சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் டாப் எண்ட் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 6 மற்றும் 7 இருக்கை என இருவித கான்பிகரேஷன்களில் கிடைக்கிறது. 

    எம்ஜி குளோஸ்டர் மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 216 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதுதவிர டர்போ வேரியண்ட் கிடைக்கிறது. இது 162 பிஹெச்பி பவர், 375 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.


    2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரேன்ஜ் ரோவர் மாடல் விலை ரூ. 1.97 கோடியில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.09 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 88.24 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் ரூ. 1.72 கோடி  என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ரேன்ஜ் ரோவர்

    புதிய ரேன்ஜ் ரோவர் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் இரு மாடல்களிலும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 

    இதன் 5.0 லிட்டர், பெட்ரோல் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட எஸ்விஆர் மாடல் விலை விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை தார் மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. புதிய தார் மாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

     2020 மஹிந்திரா தார்

    இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் டிஜிட்டல் திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய ஹோண்டா விர்ச்சுவல் ஷோரூம் கொண்டு பயனர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடி பிடித்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பிளாட்பார்ம் வாடிக்கையாளர்களுக்கு ஷோரூம் அனுபவத்தை வழங்குகிறது. 

     ஹோண்டா கார்ஸ் விர்ச்சுவல் ஷோரூம்

    விர்ச்சுவல் ஷோரூம் சேவையை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். இந்த தளத்தில் கார்களின் வெளிப்புறம் மற்றும் உள்புற தோற்றம் 360 கோணத்தில் பார்க்க முடியும். 

    இது புது வாகனத்தை ஷோரூமில் இருந்து பார்க்கும் அனுபவத்தை வீட்டிலேயே வழங்குவது ஆகும். 
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது டிபென்டர் ஆஃப்-ரோட் எஸ்யுவி மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் டிபென்டர் மாடலை முதல் முறையாக அறிமுகம் செய்கிறது. 

    வேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. 

     லேண்ட் ரோவர் டிபென்டர்

    டிபென்டர் 90 மாடல் விலை ரூ. 69.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 81.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிபென்டர் 110 மாடல் விலை ரூ 76.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 86.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    லேண்ட் ரோவர் டிபென்டர் 110 மாடல் விநியோகம், அறிமுக நிகழ்வை தொடர்ந்து துவங்குகிறது. டிபென்டர் 90 மாடலின் விநியோகம் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதம் ஆகும் என தெரிகிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க நிசான் புதிய மாடலை காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நிசான் மேக்னைட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்னைட் மாடல் 2021 துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     நிசான் மேக்னைட்

    புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்ஷனல் ஏஎம்டி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.


    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 35.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    என்டேவர் ஸ்போர்ட் மாடலில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்குகிறது. காரின் முன்புற கிரில், லோவர் பம்ப்பர், ORVM, பின்புற நேம் பிளேட் மற்றும் அலாய் வீல்களில் பிளாக்-அவுட் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட்

    இந்த எஸ்யுவி மாடலில் ஆல்-எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப்கள், டிஆர்எல்கள் மற்றும் ஃபாக்லைட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதே உபகரணங்கள் ஸ்டான்டர்டு மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புளம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம்  டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலின் 3 லட்சத்து யூனிட்டை வெளியிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சனந்த் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

    இம்பேக்ட் டிசைன் கொண்டு உருவான முதல் மாடலாக டாடா டியாகோ வெளியிடப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. மேலும் குளோபல் என்கேப்-இன் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.

     டாடா டியாகோ

    இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் டியாகோ பிஎஸ்6 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதல் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின், புதிய காஸ்மெடிக் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் டியாகோ பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது.

    டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    ×