என் மலர்
கார்
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது டிரைபர் மாடல் விலையை மீண்டும் மாற்றி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் மாடல் காரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் டிரைபர் மாடலின் விலை பலமுறை மாற்றப்பட்டு விட்டது.
அந்த வரிசையில், ரெனால்ட் டிரைபர் மாடலின் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. முந்தைய விலை உயர்வின் போது, பேஸ் வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. எனினும், இந்த முறை அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்சமயம் ரெனால்ட் டிரைபர் மாடலின் விலை ரூ. 11,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் டிரைபர் மாடல் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 5.12 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.34 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் காருக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு மாத சந்தா சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை விசேஷ சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த சலுகை முதல் 100 சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் நெக்சான் இவி மாடலை நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையில் காரை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து கட்டணங்கள் மற்றும் வாடகை சேர்த்து மாதம் ரூ. 34,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது சந்தாவை 12 மாதங்களில் துவங்கி அதிகபட்சம் 24 மற்றும் 36 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். இந்த சேவை தற்சமயம் டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாத வாடகையில் 24x7 ரோடு சைடு அசிஸ்டண்ஸ், இலவச பராமரிப்பு மற்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் மற்றும் ஹோம் டெலிவரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ் மாடல் டீசல் வேரியண்ட்டிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிஎஸ்6 அல்ட்ரோஸ் மாடல் விலையை சத்தமில்லாமல் மாற்றி அமைத்தது. அதன்படி அல்ட்ரோஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. எனினும் பேஸ் மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்சமயம் அல்ட்ரோஸ் மாடல் எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் (ஒ) வேரியண்ட்களின் விலை ரூ. 40 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

டாடா அல்ட்ரோஸ் டீசல் வேரியண்ட்களின் விலை தற்சமயம் ரூ. 6.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.09 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்6 அல்ட்ரோஸ் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.89 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் விநியோகம் துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விநியோகத்தை துவங்கி உள்ளது. முதற்கட்டமாக சொனெட் மாடலை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்கி ரூ. 11.99 லட்சம் என நிர்ணம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்சமயம் கியா சொனெட் டாப் எண்ட் மாடல்களான ஜிடிஎக்ஸ் பிளஸ் டிசிடி மற்றும் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அறிமுக நிகழ்வில் கியா சொனெட் மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்ததாகவும், முதல் நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கியா சொனெட் எஸ்யுவி மாடல் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
புதிய சொனெட் எஸ்யுவி மாடலின் துவக்க விலை ரூ. 6.71 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கியா சொனெட் மாடல் அமேக வரவேற்பு பெற்று இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

வெளியீட்டிற்கு முன் இந்த மாடல் 25 ஆயிரம் முன்பதிவுகளை கடந்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 6500 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.
முன்பதிவில் வாடிக்கையாளர்கள் டாப் எண்ட் மாடலான ஜிடிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட்டை அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். கியா சொனெட் ஜிடிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட் டீசல் ஆட்டோமேடிக் மற்றும் டர்போ பெட்ரோல் ஐஎம்டி பவர்டிரெயின்களில் கிடைக்கிறது.
வால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் தனது வால்வோ கார் ஃபைனான்சியல் சர்வீசஸ் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை வழங்க வால்வோ தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த சேவையின் மூலம் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கென எவ்வித கூடுதல் கட்டணும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கான கடன் பெற முடியும். இத்துடன் நிதி சேவைக்கு இன்சூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் அக்சஸரீக்களும் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான ஒருங்கிணைந்த பிராசஸிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பலூன் ஃபைனான்ஸ், ஸ்டெப்-அப் ஃபைனான்ஸ் மற்றும் புல்லட் ஃபைனான்ஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்படுதாக வால்வோ கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ 6.71 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூன்று என்ஜின் மற்றும் ஐந்து டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும்.

முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது.
மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ரேபிட் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது ரேபிட் செடான் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2020 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் மாடல் துவக்க விலை ரூ. 9.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
2020 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.29 லட்சம், எக்ஸ் ஷாரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விநியோகம் நாளை (செப்டம்பர் 18) முதல் துவங்குகிறது.
மினி நிறுவனம் இந்திய பயனர்கள் புதிய கார் வாங்க பிரத்யேக வலைதளம் ஒன்றை துவங்கி உள்ளது.
மினி இந்தியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக ஆன்லைன் ரீடெயில் ஸ்டோர் ஒன்றை துவங்கி உள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதிய தளம் துவங்கப்பட்டு இருக்கிறது.

இதை கொண்டு பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி புதிய கார் வாங்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள முடியும். பயனர்கள் shop.mini.in வலைதளம் சென்று புதிய கார் வாங்கிட முடியும். இந்த வலைதளத்தில் மினி நிறுவனத்தின் அனைத்து மாடல்களையும் விரிவாக பார்க்க முடியும்.
இத்துடன் ஒவ்வொரு மாடலிலும் பயனர் விரும்பும் மாற்றங்களையும் மினி வழங்கும் கூடுதல் அக்சஸரீக்களுடன் மேற்கொள்ளலாம். பயனர்கள் வலைதளத்தில் லாக் இன் செய்து தங்களின் கான்பிகரேஷனை பார்க்க முடியும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் மாடல் விலை அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய கார் துவக்க விலை ரூ. 6.11 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் மேக்னா எம்டி, மேக்னா பெட்ரோல் ஏஎம்டி மற்றும் மேக்னா டீசல் எம்டி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 15 இன்ச் கன்மெட்டல் ஸ்டைல் அலாய் வீல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6.8 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே, ஏர் பியூரிஃபையர் மற்றும் கார்ப்பரேட் எடிஷன் சின்னம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் மாடல் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஒவ்வொரு ரேன்ஜ் பொருத்து கார் மாடல்கள் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக பாகங்களின் விலை உயர்ந்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த பணிகளுக்கான செலவை அதிகப்படுத்தி இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் மி கனெக்ட் சேவையில் பல்வேறு புது தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.
டாடா நிறுவனத்தின் புதிய கார் பெயர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிமெரோ பெயரில் நேம்பிளேட் ஒன்றை பதிவு செய்துள்ளது. தற்போதைய தகவல்களின் படி இந்த பெயர் ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யுவி கான்செப்ட்டிற்கு பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய பெயர் ஹெச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலுக்கு சூட்டுவது பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான விவரங்களின் படி இதில் வை வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய டாடா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ALFA பிளாட்ஃபார்மில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது.
புதிய டாடா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.






