என் மலர்
கார்
மாருதி சுசுகி நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நெக்சா கார்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றில் ஒரு சலுகை - கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி மட்டும் ஷர்தா காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் அனைத்து நெக்சா மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பண்டிகை காலக்கட்டத்தில் கார் வாங்குவோருக்கு கூடுதல் சலுகையை மாருதி சுசுகி வழங்குகிறது.

மாருதி சுசுகி இக்னிஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்னிஸ் சீட்டா வேரியண்ட்டிற்கு மட்டும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி சியாஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஆல்ஃபா மேனுவல் வேரியண்ட்டிற்கு எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.
பலேனோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, சிக்மா வேரியண்ட்டிற்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. எஸ் கிராஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை ரூ. 5 ஆயிரம் ஷர்தா கால திட்டத்தில் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
2020 மஹிந்திரா தார் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 தார் மாடல் வெளியீடு அக்டோபரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வெளியீட்டிற்கு முன் இந்த கார் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி 2020 மஹிந்திரா தார் விலை ரூ. 9.75 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதிய தார் மாடலுக்கான முன்பதிவு செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்கி விநியோகம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என தெரிகிறது.

2020 தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதன் உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கை விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஃபோக்ஸ்வேகன் தனது வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் மாற்றியமைத்து உள்ளது. ஃபோக்ஸ்வேகன் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் என்ட்ரி லெவல் மாடலான போலோ ஹேட்ச்பேக் மாடல் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி ரூ. 8 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை உயர்வின்படி ஃபோக்ஸ்வேகன் போலோ விலை தற்சமயம் ரூ. 5.87 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.67 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் இதன் ஹைலைன் பிளஸ் ஏடி வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
வென்டோ மாடல் புதிய விலை ரூ. 8.93 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் விலை ரூ.12 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 33.24 லட்சம் என மாறி இருக்கிறது. விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் இந்த மாதம் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 2.40 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 50 ஆயிரத்திற்கு எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. எக்ஸ்யுவி500 மாடலுக்கு ரூ. 12,760 தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 30 ஆயிரம், ரூ. 9 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எஸ்5 ட்ரிம் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
எக்ஸ்யுவி300 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மராசோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடல் விற்றுத்தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டி ராக் மாடலுக்கான முன்பதிவுகளை நிறுத்திவிட்டது. கார்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததால், முன்பதிவு நிறுத்தப்பட்டதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்து உள்ளது.
மார்ச் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் விலை ரூ. 19.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு இந்த மாடல் சிபியு முறையில் கொண்டு வரப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. கார்னெரிங் லைட்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டி ராக் காரில் 17 இன்ச் அலாய் வீல்கள், மெல்லிய மற்றும் அழகிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் என்ஜின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் குளோஸ்டர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த கார் தீபாவளி சமயத்தில் அறிமுகமாக இருக்கிறது. எம்ஜி குளோஸ்டர் பிரீமியம் ஆடம்பர எஸ்யுவி பிரிவில் அறிமுகமாகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக குளோஸ்டர் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மேக்சஸ் டி90 எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் விநியோகம் துவங்கப்பட்டு உள்ளது. இதன் முதல் மாடல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 எஸ்யுவி இந்திய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. புதிய கார் விநியோகம் ஜனாதிபதி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் சாவி இணை செயலாளரிடம் கொடுக்கப்பட்டது.
புதிய கார் விநியோக விவரங்களை மஹிந்திரா குழுமத்தின் மொபிலிட்டி சர்வீசஸ் பிரிவு தலைவர் பார்த்தசாரதி உறுதிப்படுத்தினார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மாடலில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மஹிந்திரா சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

தற்சமயம் இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் எஸ்600 புல்மேன் கார்டு மாடலை தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகிறார். புதிய அல்டுராஸ் ஜி4 மெர்சிடிஸ் பென்ஸ் மாடலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படாது.
மேம்பட்ட அல்டுராஸ் ஜி4 மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 28.69 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் ஹூண்டாய் வெர்னாவை முந்தியுள்ளது.
ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான ஹோண்டா ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய சிட்டி மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 2020 விற்பனையில் ஹோண்டா நிறுவனம் 2299 சிட்டி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1593 சிட்டி யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் கடந்த மாத விற்பனையில் 44 சதவீத வளர்ச்சியை ஹோண்டா பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 2015 வெர்னா யூனிட்களையும், 2019 ஆகஸ்ட் மாதத்தில் 1597 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியை பெற்று இருக்கிறது.
மாருதி சுசுகி சியாஸ் மாடல் 1223 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் 2019 இல் மாருதி நிறுவனம் 1597 சியாஸ் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் 23 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஈக்கோ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் ஏழு லட்சம் ஈக்கோ யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளில் இந்த மைல்கல் சாதனையை மாருதி எட்டியுள்ளது.
மாருதி ஈக்கோ மாடல் தனிநபர் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஈக்கோ மாடல் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை பதிவு செய்தது. பின் 2014 ஆம் ஆண்டில் மற்றொரு 1 லட்சம் யூனிட்கள் விற்பனையானது.

அறிமுகமானது முதல் இந்த வாகனம் பொருட்களை டெலிவரி செய்ய ஏற்றதாக இருக்கும் என கண்டறியப்பட்டது. பின் 2015 ஆம் ஆண்டு ஈக்கோ கார்கோ வேரியண்ட் வர்த்தக பயன்பாடுகளுக்காக வெளியிடப்பட்டது. இது மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனையானது.
சமீபத்தில் மாருதி நிறுவனம் ஈக்கோ மாடலை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. புதிய பிஎஸ்6 ஈக்கோ மாடல் விலை ரூ. 4.64 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் கார் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் எஸ்யுவி மாடலை 2019 வாக்கில் அறிமுகம் செய்தது. கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக அமைகிறது. இந்நிலையில், இந்திய விற்பனையில் கியா செல்டோஸ் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை 11 மாதங்களில் கியா செல்டோஸ் எட்டியிருக்கிறது. இதில் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கியா செல்டோஸ் மாடல் இந்திய எஸ்யுவி வாகன விற்பனையில் 9 சதவீத பங்குகளை கொண்டிருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 8 ஆயிரம் செல்டோஸ் யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
கியா செல்டோஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவற்றில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், சிவிடி அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் மாடல் புது டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலுக்கான புது டீசரை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. புதிய மாடலில் சிறு அப்டேட்களுடன் அல்லது லிமிட்டெட் எடிஷன் மாடலாகவோ இருக்கும் என தெரிகிறது.

டீசர்களின் படி புதிய யாரிஸ் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டீசர் தவிர புதிய யாரிஸ் மாடல் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கார் புதிய என்ஜினுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக டொயோட்டா நிறுவனம் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட யாரிஸ் மாடலை வியோஸ் எனும் பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட்டது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் ஆகஸ்ட் மாத விற்பனையில் கியா செல்டோஸ் மாடலை முந்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிரெட்டா மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய விற்பனையில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக கிரெட்டா மாடல் கியா செல்டோஸ் மாடலை முந்தி இருக்கிறது.
ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் 11758 கிரெட்டா யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதே காலக்கட்டத்தில் கியா நிறுவனம் 10655 செல்டோஸ் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் எஸ்யுவி பிரிவு விற்பனையில் கிரெட்டா முன்னணி மாடலாக இருக்கிறது.

முன்னதாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஹூண்டாய் நிறுவனம் முறையே 3212, 7202 மற்றும் 11549 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் முறையே 1611, 7114 மற்றும் 8270 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
ஹூண்டாய் கிரெட்டா இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. கியா நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் மூன்று என்ஜின் மற்றும் இரண்டு ட்ரிம்களில் கிடைக்கிறது.






