என் மலர்tooltip icon

    கார்

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.

    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளறான ஃபோக்ஸ்வேகன் பிஎஸ்6 போலோ மற்றும் வென்டோ மாடல்களின் டாப் எண்ட் வேரியண்ட்டிற்கான முன்பதிவை துவங்கி உள்ளன. 

    ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 9.67 லட்சம் மற்றும் ரூ. 12.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     வென்டோ

    புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் வேரியண்ட் விநியோகம் செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இரு மாடல்களிலும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. போலோ ஏடி மாடல் லிட்டருக்கு 16.47 கிலோமீட்டர்களும் வென்டோ ஏடி மாடல் லிட்டருக்கு 16.35 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாடலை மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது. புதிய மாடல் டபிள்யூ7, டபிள்யூ9 மற்றும் டபிள்யூ11 (ஒ) வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 14.43 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 153 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகஇறது. முன்னதாக இதே கியர்பாக்ஸ் எக்ஸ்யுவி500 பிஎஸ்4 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

     மஹிந்திரா எக்ஸ்யுவி500

    கியர் லீவர் தவிர இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புற பேட்ஜிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் தோற்றம் உள்ளிட்டவை மேனுவல் மாடலில் இருந்தபடியே வழங்கப்பட்டு இருக்கின்றன.  

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் டாடா ஹேரியர் ஏடி, ஜீப் காம்பஸ் ஏடி மற்றும் ஹூண்டாய் டக்சன் ஏடி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.66 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய இக்யூசி 400 மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய இக்யூசி 400 முழுமையான எலெக்ட்ரிக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி 400 பென்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பென்ஸ் இக்யூசி மாடல் விற்பனை முன்கூட்டியே துவங்க இருந்தது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி 400

    புதிய இக்யூசி 400 இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பிஹெச்பி பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பேர் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஹூண்டாய் மொபிஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனங்கள் ஹூண்டாய் மொபிலிட்டி சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. படிப்படியாக இந்தியாவில் அமலாக இருக்கும் திட்டத்தில் ஹூண்டாய் அங்கீகரிக்கப்பட்ட அக்சஸரீக்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்பட இருக்கின்றன.

     ஹூண்டாய்

    ஹூண்டாய் நிறுவனத்திற்கு உயர் ரக பாகங்கள் மற்றும் அக்சஸரீக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மொபிஸ் இருக்கிறது. தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் ஹூண்டாயுடன் இணைந்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக ஹூண்டாய் கார் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளை கொண்டே புதிய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதுவித விற்பனை முறை இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவின் பூனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் சந்தா முறையிலான வாகன விற்பனையை துவங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கென மாருதி நிறுவனம் மைல்ஸ் ஆட்டோமோடிவ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

    இரு நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் எளிய முறையில் வாகனங்களை விற்பனை செய்கின்றன. முன்னதாக இதே திட்டம் குருகிராம் மற்றும் பெங்களூரு நகரங்களில் துவங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இது மேலும் இரு நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

      மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

    சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் புதிய காரை முழுமையாக வாங்காமல், அதற்கான உரிமை கொண்டு குறுகிய காலக்கட்டத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் எவ்வித முன்பணமும் செலுத்தாமல், வாகன பதிவு, இன்சூரன்ஸ் போன்றவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

    மாருதி சுசுகியின் சந்தா முறை திட்டத்தில் ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, பலெனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் வழங்கப்படுகின்றன. இதில் வாடிக்கையாளர்கள் 12, 18, 24, 30, 36, 42 மற்றும் 48 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த கார் விற்பனை வரும் வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் மாடலுக்கான முன்பதிவு இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகம் மற்றும் ஆன்லைனில் நடைபெறுகிறது. புதிய ஸ்கோடா காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

      ஸ்கோடா ரேபிட்

    ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சக்திவாய்ந்த எஸ்யுவி மாடலான ஆர்எஸ் கியூ8 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் விலை ரூ. 2.07 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடல் ஆடி நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாகும். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகங்களில் மேற்கொள்ளலாம்.

    ஆடி ஆர்எஸ் கியூ8

    ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. 

    காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. கியா சொனெட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கியா சொனெட் மாடல் விற்பனையகம் வரத்துவங்கியுள்ளது. புதிய கியா சொனெட் ஜிடி லைன் வேரியண்ட் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

     கியா சொனெட்

    கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன. 

    கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 ஜாஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 ஹேட்ச்பேக் மாடல் - வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 துவக்க விலை ரூ. 7,49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. இதற்கான முன்பதிவு கட்டணம் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     ஹோண்டா ஜாஸ்

    ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    2020 ஹோண்டா ஜாஸ் காரில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. வேரியண்ட்களுக்கு ஏற்ப பயனர்கள் ஒன்-டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடலில் 1.5 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. 

    ஹோண்டா சிட்டி ஐ-எம்எம்டி என அழைக்கப்படும் மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே யூனிட் புதிய ஜாஸ் இஹெச்இவி ஹைப்ரிட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்

    புதிய சிட்டி ஹைப்ரிட் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மலேசியாவில் கிடைக்கும் சிட்டி ஹைப்ரிட் ஆர்எஸ் ட்ரிமில் வழங்கப்படுகிறது.

    டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் போன்றே புதிய ஹோண்டா சிட்டி ஆர்எஸ் ஐ-எம்எம்டி மாடல் பியூர் இவி மோடில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. தற்சமயம் இந்த பிரிவில் கிடைக்கும் ஒரே எலெக்ட்ரிக் மாடலாக சியாஸ் இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் பிஎஸ்6 மராசோ காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மஹிந்திரா மராசோ பிஎஸ்6 மாடல் விலை ரூ. 11.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய பிஎஸ்6 எம்பிவி மாடல் - எம்2, எம்4 பிளஸ் மற்றும் எம்6 பிளஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

     மஹிந்திரா மராசோ

    இதில் வழங்கப்பட்டுள்ள 1497சிசி பிஎஸ்6 என்ஜின் 121 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழஙஅகப்படுகிறது. இதன் வீல்பேஸ் 2760எம்எம் அளவில் இருக்கிறது. 

    மேம்பட்ட மஹிந்திரா மராசோ பிஎஸ்6 மாடல் - மரைனர் மரூன், ஐஸ்பெர்க் வைட், ஷிமெரிங் சில்வர், ஓசியானிக் பிளாக் மற்றும் அக்வா மரைன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய மராசோ அனைத்து வேரியண்ட்களும் எட்டு அல்லது ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை திடீரென மாற்றி உள்ளது.
     

    எம்ஜி மோட்டார்ஸ் நிருவனம் தனது புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹெக்டார் பிளஸ் புதிய விலை ரூ. 13.74 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும்.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 46 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா எக்ஸ்யுவி500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    ×