என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2020 மாருதி சுசுகி செலரியோ மாடல் முற்றிலும் புது வடிவமைப்பில், மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக செலரியோ மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்ஃபார்மிலேயே வேகன்ஆர் மாடலும் உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இது பார்க்க வேகன்ஆர் ஹேட்ச்பேக் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையானகும் செலரியோ மாடல் 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது மாருதியின் என்ட்ரி லெவல் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ. 4.46 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் ஆறு வேரியண்ட்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் கார் ஆறு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் வேரியண்ட்கள் பிரீமியம், ஹை மற்றும் மிட் மற்றும் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரிம்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் புதிய கார் ஆறு சிங்கிள் டோன் மற்றும் மூன்று டூயல் டோன் ஷேட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் டாப் எண்ட் பிரீமியம் மாடலில் கிளைமேட் கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன.
இத்துடன் புதிய காரில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் பிளே சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எக்ஸ்எல்6 மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. எக்ஸ்எல்6 எம்பிவி மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் எம்பிவி வாகனங்கள் விற்பனையை 51 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
குறிப்பாக இந்திய சந்தையில் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடல் சுமார் 14 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. மாருதியின் எக்ஸ்எல்6 இந்திய சந்தையில் முதல் ஆண்டு நிறைவை இத்தகைய மைல்கல் விற்பனையுடன் நிறைவு செய்து இருக்கிறது.

புதிய எக்ஸ்எல்6 மாடலில் பிஎஸ்6 ரக கே15 பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடல்- மெட்டாலிக் பிரீமியம் சில்வர், மெட்டாலிக் மேக்மா கிரே பிரைம் ஆபன் ரெட், பியல் பிரேவ் காக்கி, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் நெக்சா புளூ என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் எஸ்யுவி மாடல் முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 6523 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய கியா சொனெட் மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும். முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
டேட்சன் நிறுவன கார் மாடல்களுக்கு அந்நிறுவனம் ரூ. 55 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனையை அதிகப்படுத்த டேட்சன் நிறுவனம் தனது ரெடிகோ, கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. அனைத்து மாடல்களிலும் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பலன்கள் ஒவ்வொரு வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும்.
புதிய பிஎஸ்6 ரெடிகோ மாடல்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் மற்றும் நிசான் / டேட்சன் ஃபைனான்ஸ் 7.99 சதவீத வட்டியில் ரூ. 5 ஆயிரம் தள்ளுடி வழங்கப்படுகிறது.

டேட்சன் கோ ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் பில்லர்ஸ் ஆஃப் இந்தியா அல்லது மெடிக்கல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஏழு பேர் பயணிக்கக்கூடிய டேட்சன் கோ பிளஸ் மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 10 ஆயிரம் லாயல்டி சலுகை மற்றும் ரூ. 5 ஆயிரம் பில்லர்ஸ் ஆஃப் இந்தியா அல்லது மெடிக்கல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் டேட்சன் வாடிக்கையாளர்கள் டெஸ்ட டிரைவ் செய்து கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில் 100 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விற்பனையாகும் கார் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தியை துவங்கி உள்ளது. இந்த மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மாட்யூலர் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த மாடல் ரியர்-வீல் டிரைவ் ஆப்ஸ்ரீனில் அறிமுகம் செய்யப்பட்டு பின் ஆல்-வீல்-டிரைவ் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் பேட்டரி சான்ட்விச் டிசைனில் பொருத்தப்படுகிறது.

முன்னதாக வெளியான ஸ்பை படங்களின் படி புதிய ஐடி.4 மாடல் தோற்றத்தில் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் 4592எம்எம் நீளமாகவும், 1852எம்எம் அகலம் மற்றும் 1629எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2765எம்எம் அளவில் இருக்கிறது.
புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலின் பின்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரியர்-வீல் மோட்டார் 200 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரியர்-வீல் மோட்டாரை தொடர்ந்து விரைவில் முன்புற மோட்டார் கொண்ட ஆல்-வீல் டிரைவ் வெர்ஷனை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் தனது வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்காமலேயே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கார் லீஸ் மற்றும் சந்தா முறை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் எனும் பெயரில் செயல்படுகிறது.
டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் பத்து நகரங்களில் இந்த சேவையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளதாக டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் தெரிவித்து இருக்கிறது.
புதிய திட்டம் தற்சமயம் டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் கின்டோ, ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியா மற்றும் எஸ்எம்ஏஎஸ் ஆட்டோ லீசிங் இந்தியா உள்ளிட்ட பிராண்டுகளுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

லிசிங் சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் வாகனங்களை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட மாத வாடகையை செலுத்தி பயன்படுத்தலாம். மாத வாடகையில் வாகனத்தை பராமரிக்கும் கட்டணம், இன்சூரன்ஸ் மற்றும் ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் 24 முதல் 48 மாதங்களுக்கு விரும்பும் காரை பயன்படுத்தலாம். கார் லீசிங் மற்றும் சந்தா முறையில் வாகனங்களை கூடுதல் பலன்களுடன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
தற்சமயம் டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் திட்டத்தில் கிளான்சா, யாரிஸ், இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் செடோனா எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் நான்காம் தலைமுறை மாடல் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 கியா கார்னிவல் மாடல் புதிய மிட்-சைஸ் பிளாட்ஃபாரிமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் கிராண்ட் யுடிலிட்டி வெஹிகில் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது நான்காம் தலைமுறை மாடல் 40 எம்எம் நீளமாகவும், 10எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 30 எம்எம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வடிவமைப்பில் புதிய மாடல் டைகர் நோஸ் கிரில், டைமன்ட் மெஷ் பேட்டன் மற்றும் க்ரோம் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பின்புறம் எல்இடி லைட் பார் வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
புதிய கியா கார்னிவல் மாடல் 3.5 லிட்டர் ஜிடிஐ வி6 பெட்ரோல் என்ஜின், 3.5 லிட்டர் எம்பிஐ வி6 என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 290 பிஹெச்பி, 335 என்எம் டார்க், 268 பிஹெச்பி, 332 என்எம் டார்க் மற்றும் 199 பிஹெச்பி, 404 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றுள்ள நெக்சான் இவி வெளியான ஆறே மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளது.
இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் நெக்சான் இவி மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகமானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் நெக்சான் இவி தற்போதைய எலெக்ட்ரிக் கார் சந்தை நிலவரப்படி சுமார் 62 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
வால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதன் காரணமாக வால்வோ தனது கம்பஷன் என்ஜின் மாடல்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த மாடல் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வால்வோ மேலும் அதிக வாகனங்களில் எலெக்ட்ரிக் திறன் வழங்கும் முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு வால்வோ நிறுவனம் இந்தியாவில் நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யுவி மாடலில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஆடி இந்தியா நிறுவனத்தின் புதிய ரெடி டூ டிரைவ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனம் இந்தியாவில் புதிய ரெடி டூ டிரைவ் சர்வீஸ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தில் புதிய சர்வீஸ் திட்டங்கள் மற்றும் விற்பனைக்கு பிந்தைய பலன்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி வாடிக்கையாளர்கள் பிரேக் பேட்கள், பிரேக் டிஸ்க்குகள் மற்றும் பேட் சென்சார் உள்ளிட்டவைகளில் அதிக சேமிப்பை பெற முடியும். இவைதவிர ஆடி ஜென்யூன் அக்சஸரீக்கள், மெர்சன்டைஸ், மை ஆடிய கனெக்ட், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் திட்டங்கள் மற்றும் சிறப்பான சர்வீஸ் பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் பிரேக் பேட், பிரேக் டிஸ்க் மற்றும் பிரேக் பேட் சென்சார்களுக்கு 20 சதவீதம் சேமிப்புகளை வழங்குகிறது. இத்துடன் ஆடி ஜென்யூன் அக்சஸரீக்கள், ஆடி கலெக்ஷன் மற்றும் ஆடி மெர்சன்டைஸ் அனைத்து மாடல்களுக்கும் 10 சதவீதம் வரை சேமிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர மைஆடி கனெக்ட் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு 50 சதவீதம் வரை சேமிக்க முடியும். தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் திட்டங்களில் 20 சதவீதம் சேமிக்க முடியும்.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹிலக்ஸ் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்திய சந்தையில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொலிரோ பிக்கப் மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் விலை சற்றே அதிகம் ஆகும்.
இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஐஎம்வி பிளாட்ஃபார்மிலேயே புதிய ஹிலக்ஸ் மாடலும் உருவாகி இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலின் என்ஜின், கியர்பாக்ஸ்கள், 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் உபகரணங்கள் ஒன்று தான்.

ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் அளவில் நீளமானதாகும். இதன் வீல்பேஸ் 3085 எம்எம் அளவில் இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலில் 2.4 மற்றும் 2.8 டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. இதன் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் என்ட்ரி லெவல் மாடல் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மற்றும் ஆடம்பர வெர்ஷன்களின் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.






