என் மலர்tooltip icon

    கார்

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 10.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

    புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் ஐந்து ட்ரிம்களில் கிடைக்கிறது. இதன் 1.3 லிட்டர் என்ஜின் 154 பிஹெச்பி பவர், 254 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி யூனிட் வழங்கப்படுகிறது.

     ரெனால்ட் டஸ்டர்

    ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் மேனுவல் மற்றும் சிவிடி ட்ரிம்கள் முறையே லிட்டருக்கு 16.5 கிலோமீட்டரும், 16.42 கிலோமீட்டரும் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் கிரில், முன்புற பம்ப்பர், ரூஃப் ரெயில்கள், ஃபாக் லேம்ப் கிளஸ்டர் மற்றும் டெயில் கேட் எம்பெலிஷர் உள்ளிட்டவைகளில் க்ரிம்சன் ரெட் அக்சென்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார் நிறத்துடன் ஒற்றுப்போகும் ஒஆர்விஎம்கள், புதிய 17 அங்குல அலாய் வீல்கள், பிளாக் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்டும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 10.49 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் வேரியண்ட் விலை ரூ. 13.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலான அர்பன் குரூயிசரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இரண்டாவது மாடலாக அர்பன் குரூயிசர் இருக்கிறது.

    இந்நிலையில், புதிய அர்பன் குரூயிசர் வெளியீட்டிற்கு முன் ரெஸ்பக்ட் எனும் பெயரில் விளம்பரம் செய்ய துவங்கி உள்ளது. அர்பன் குரூயிசர் மாடல் டொயோட்டா நிறுவனத்தின் இளம் எஸ்யுவி மாடலாக இருக்கிறது. புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கி வெளியீடு பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என தெரிகிறது.  

     டொயோட்டா அர்பன் குரூயிசர்

    அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

    காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.

    மாருதி சுசுகி ஆல்டோ மாடல் இந்திய விற்பனையில் 40 லட்சம் யூனிட்களை கடந்து உள்ளது. ஆல்டோ கார் வாங்கியவர்களில் 76 சதவீதம் பேரின் முதல் கார் இந்த மாடல் ஆகும். இந்தியாவில் மாருதி ஆல்டோ மாடல் 2000 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

     மாருதி சுசுகி ஆல்டோ

    மாருதி ஆல்டோ மாடல் எட்டு ட்ரிம்கள் மற்றும் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 800சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 47 பிஹெச்பி பவர், 69 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆல்டோ மாடல் சிஎன்ஜி வேரியண்ட்டும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் முறையே ஒரு லிட்டருக்கு 22.05 கிலோமீட்டர் மற்றும் 31.56 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் விற்பனையில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

    தற்சமயம் இதன் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் இருக்கிறது. 

     ஹோண்டா அமேஸ்

    ஏப்ரல் 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஹோண்டா அமேஸ் மார்ச் 2018 வரை 2.8 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதன் இரண்டாம் தலைமுறை மாடல் மே 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இதுவரை 1.4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 

    ஹோண்டா அமேஸ் மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஐ-விடெக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வசதி ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை தார் மாடல் காருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. புதிய எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீசர் வீடியோவில் புதிய தார் மாடல் சில்ஹவுட்டில் காட்சியளிக்கிறது. 

    இரண்டாம் தலைமுறை தார் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய தார் மாடலில் மஹிந்திராவின் பாரம்பரியத்தை தழுவும் எஸ்யுவி தோற்றமும், உள்புறத்தில் அதிநவீன வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     மஹிந்திரா தார்

    புதிய தார் மாடல் பிளாக் ஃபென்டர் கிளாடிங், முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஏழு ஸ்லாட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க ஜீப் ராங்ளர் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

    ஹார்டு-டாப் மட்டுமின்றி புதிய தார் மாடல் சாஃப்ட்-டாப் வெர்ஷனும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. மஹிந்திராவின் புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இதன் டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்ஹாக் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது 140 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் கார் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸ் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் துவக்க விலை ரூ. 5.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி ரூ. 7.75 லட்சம் என்றும் டாப் எண்ட் டீசல் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் போன்ற மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும், எக்ஸ்இ டீசல் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 6.99 லட்சம் என பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் டாடா அல்ட்ரோஸ் மாடலின் எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அல்ட்ரோஸ் மாடலின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் துவக்க விலை ரூ. 7.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 8.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் வைட் கோல்டு, டைமண்ட் வைட் மற்றும் ஸ்மோக் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட் இன்செர்ட்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் ORVMகள் ரெட் ஷேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஃபோர்டு ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன்

    இதன் கிரில், ரூஃப் மற்றும் அலாய் வீல்கள் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன. இதன் கோர்களில் ஃபிளெயிர் எடிஷன் கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. புதிய ஃபிளெயிர் எடிஷன் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 99 பிஹெச்பி பவர், 215 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    இந்தியாவில் 2020 ஜூலை மாத பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வை கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல் காலாண்டு விற்பனை படுமோசமான சூழலை சந்தித்தது. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய ஆட்டோ துறை சரிவில் இருந்து மீளத் துவங்கி உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் படி 2020 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14,64,133 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது ஜூன் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகம் ஆகும். 

    ஜூன் 2020 மாதத்தில் மொத்தம் 11,19,048 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுட கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 14 சதவீதம் குறைவு ஆகும்.
    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்யுவி300 மாடல் காரின் விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.
     

    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸியுவி300 எஸ்யுவி மாடல் விலையை இந்தியாவில் மாற்றி அமைத்து இருக்கிறது. அதன்படி பெட்ரோல் வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டு டீசல் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மஹிந்திரா வலைதளத்தில் டூயல் டோன் வேரியண்ட்கள் காணப்படவில்லை.

    மஹிந்திரா டபிள்யூ4 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு பெட்ரோல் மாடல் விலை ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டபிள்யூ6 மாடல் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 17 ஆயிரம் குறைக்கப்பட்டு டீசல் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

     மஹிந்திரா எக்ஸ்யுவி300

    டபிள்யூ8 பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 70 ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. டபிள்யூ8 (ஒ) மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களின் விலை முறையே ரூ. 87ஆயிரம் மற்றும் ரூ. 39 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா எக்ஸ்யுவி300 ஏஎம்டி மாடல் டீசல் வேரியண்ட் விலை ரூ. 21 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. டபிள்யூ8 ஏஎம்டி மற்றும் டபிள்யூ8 (ஒ) ஏஎம்டி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ. 39 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியா முழுக்க 17 புதிய விற்பனை மையங்களை திறந்து உள்ளது.


    ரெனால்ட் இந்தியா தனது டீலர்ஷிப்களை இந்திய சந்தையில் நீட்டித்து உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ரெனால்ட் நிறுவனம் மொத்தம் 17 புதிய டச்பாயிண்ட்களை இந்தியா முழுக்க திறந்துள்ளது. 17 புதிய டச்பாயிண்ட்களில் 14 ஷோரூம்களும், மூன்று வொர்க்ஷாப்களும் அடங்கும். 
     
    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டச்பாயிண்ட்கள் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் துவங்கப்பட்டு உள்ளன. வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 டச்பாயிண்ட்களில் நான்கு இமாச்சல பிரதேசத்திலும், மூன்று தெலுங்கானாவிலும், இரண்டு டச்பாயிண்ட்கள் ராஜஸ்தான் மர்றும் உத்திர பிரதேசத்திலும், ஒன்று டெல்லி, அசாம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் அமைந்துள்ளன.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஜாஸ் பிஎஸ்6 மாடல் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹோண்டா நிறுவனம் புதிய ஜாஸ் பிஎஸ்6 காருக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் முன்பதிவு ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. 

    புதிய ஹோண்டா கார் முன்பதிவை விற்பனையகங்களில் மேற்கொள்வோருக்கு ரூ. 21 ஆயிரமும், ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ஹோண்டா ஜாஸ்

    ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    புதிய ஹோண்டா காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. 

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    இந்தியா முழுக்க இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் தேர்வு செய்யப்பட்ட ஷோரூம்களில் டாடா கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    வாடிக்கையாளர்கள் இந்த பலன்களை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சலுகை டாடா அல்ட்ரோஸ் மற்றும் நெக்சான் இவி மாடல்களுக்கு வழங்கப்படவில்லை. 

    டாடா ஹேரியர் எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் மற்றும் டார்க் எடிஷன் வேரியண்ட்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவியின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டாடா டிகோர்

    டாடா நெக்சான் மாடலுக்கு ரூ.5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, டீசல் வேரியண்ட்டிற்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    ×