என் மலர்
கார்
ஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 2015 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகளை கொண்டாடும் கிரெட்டா மாடல் விற்பனையில் இதுவரை ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த கிரெட்டா மாடல் முதல் நான்கு மாதங்களில் 70 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்தது. பின் எட்டே மாதங்களில் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. ஒரே ஆண்டில் இந்த மாடல் உற்பத்தி பணிகள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு கிரெட்டா ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சந்தையில் இது 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த மாடல் ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டது.
பின் 2019 ஆண்டடு துவக்கத்தில் கிரெட்டா மாடல் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்தது. இதில் 3.7 லட்சம் யூனிட்கள் இந்தியாவிலும் 1.4 லட்சம் யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புத்தம் புதிய சொனெட் எஸ்யுவி மாடலின் சர்வதேச வெளியீட்டை இந்தியாவில் நடத்தி இருக்கிறது. புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும்.
முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. புதிய கியா சொனெட் மாடஸ் ஹூண்டாய் வென்யூவை தழுவி உருவாகி இருக்கிறது.

கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இந்தியாவில் கியா சொனெட் மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விலை ரூ. 8 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய காம்பேக்ட் எஸ்யுவியான அர்பன் குரூயிசர் மாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்து இருந்தது.
இந்திய சந்தையில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கும் டோயோட்டா அர்பன் குரூயிசர் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும். புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் டொயோட்டா விற்பனையகங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் புதிய அர்பன் குரூயசர் மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது.

இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆடி நிறுவனம் புதிய ஆர்எஸ் கியூ8 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இறுக்கிறது. புதிய கார் முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகத்தில் ரூ. 15 லட்சம் செலுத்தி மேற்கொள்ள முடியும்.
புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் இதே ஆண்டு ஆடி அறிமுகம் செய்யும் நான்காவது வாகனம் ஆகும். கடந்த மாதம் ஆடி ஆர்எஸ்7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய கார் இந்த ஆண்டு அறிமுகமாகும் இரண்டாவது ஆர்எஸ் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் டிஎஸ்ஐ மாடல் வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் டிஎஸ்ஐ மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் ஜாக் ஹோலிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக ஸ்கோடா கோடியக் டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின் இந்த ஆண்டு இறுதியில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் இதன் வெளியீடு தாமதமாக கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

புதிய ஸ்கோடா கோடியக் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. 190 பிஎஸ் திறன் கொண்ட இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தலைமுறை தார் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய மாடலுக்கான டீசர் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய தார் மாடல் விங் மிரர்களை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதும் தெரிகிறது.

இத்துடன் புதிய தார் மாடல் பிளாக் ஃபென்டர் கிளாடிங், முன்புற பம்ப்பர் வடிவமைப்பும் புகைப்படங்களில் அம்பலமாகி இருக்கிறது. புதிய தார் மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஏழு ஸ்லாட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க ஜீப் ராங்ளர் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.
ஹார்டு-டாப் மட்டுமின்றி புதிய தார் மாடல் சாஃப்ட்-டாப் வெர்ஷனும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. மஹிந்திராவின் புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதன் டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்ஹாக் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது 140 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா தனது ஹெக்டார் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம்செய்தது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த ஹெக்டார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்திய சந்தையில் வெளியான கார்களில் இணைய வசதி கொண்ட முதல் மாடலாக ஹெக்டார் இருக்கிறது. ஏஐ அசிஸ்டண்ட் வசதி சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹெக்டார் மாடல் விற்பனையில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல் ஒரே ஆண்டிற்குள் எம்ஜி மோட்டார் கடந்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹெக்டார் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற போட்டி மாடல்களை விட அதிக விற்பனையை பதிவு செய்தது. இதன் காரணமாக இது விரைவில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெ்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 143 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொனெட் மாடலினை ஆகஸ்ட் 7 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், புதிய கார் இன்டீரியர் மற்றும் வெளிப்புற வரைபடங்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்திய சந்தையில் சொனெட் மாடல் கியா நிறுவனத்தின் மூன்றாவது கார் ஆகும்.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா சொனெட் மாடல் ஜிடி லைன் மற்றும் டெக் லைன் ட்ரிம்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் சில கியா விற்பனையாளர்கள் சொனெட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என தெரிகிறது. சொனெட் மாடலின் ஜிடி லைன்- ஜிடிகே, ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் பிளஸ் என மூன்று வேரியண்ட்களிலும், டெக் லைன்- ஹெச்டிஇ, ஹெச்டிகே, ஹெச்டிஎக்ஸ் மற்றும் ஹெச்டிஎக்ஸ் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய சொனெட் மாடலின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தின் வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஜூலை மாதத்தில் 41300 யூனிட்களை விற்பனை செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இதில் உள்நாட்டில் 38200 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 3100 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் ஐஎம்டி வேரியண்ட் மற்றும் ஸ்போர்ட் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய தலைமுறை கிரெட்டா மாடல் இந்திய சந்தையில் இதுவரை சுமார் 55 ஆயிரத்திற்கும் அதிக முன்பதவுகளை கடந்துள்ளது. இவற்றில் 20 ஆயிரம் யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை விற்பனையாகி இருக்கும் புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடல்களில் 60 சதவீத யூனிட்கள் டீசல் வேரியண்ட் ஆகும்.
ஜூலை மாத விற்பனையில் 98 சதவீதம் உள்நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இத்தகைய வரவேற்புக்கு புத்தம் புதிய கிரெட்டா, வென்யூ, வெர்னா, எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்கள் முக்கிய காரணம் என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார்.
ஜிஎம்சி ஹம்மர் இவி மாடல் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜிஎம்சி ஹம்மர் இவி புதிய டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய டீசர் வீடியோவில் காரின் புதிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. காரின் சில்ஹவுட் விவரங்களில் இது உண்மையான ஹம்மர் பாக்சி கோட்களை கொண்டு இருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் ஹம்மர் நான்கு கதவுகள் கொண்ட மாடலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 745 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎம் நிறுவனத்தின் அல்டியம் லாங் ரேன்ஜ் பேட்டரி பேக் கொண்ட முதல் மாடலாக இது இருக்கும் என தெரிகிறது.
ஹம்மரின் புதிய மாடல் தற்போதைய காலக்கட்டத்தில் அதிக திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய ஹம்மர் இவி மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் விநியோகம் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனம் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய டீசர் வீடியோவின் படி ஆர்எஸ் கியூ8 மாடல் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் கியூ8 எஸ்யுவியின் பெர்பார்மன்ஸ் வெர்ஷன் ஆகும்.
புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் வெளியீட்டின் போது ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் திலான் இந்தியாவில் மேம்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் மட்டுமே ஒரே ஆர்எஸ் மாடலாக இருக்காது என தெரிவித்து இருந்தார். 2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் நர்புர்கிரிங் களத்தின் வேகமாக எஸ்யுவி மாடல் ஆகும்.

ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை அறிவித்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது. கார் மாடல்கள் மட்டுமின்றி கார் உபகரணங்களுக்கும் சிறப்பு நிதி சலுகைகள் பொருந்தும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து உள்ளது.
வாகன உபகரணங்களுக்கு நிதி சலுகைகளுடன் ஊதியம் பெறுவோர், சொந்த தொழில் செய்வோர், விவசாய துறை மற்றும் வணிக வாகனங்களை வைத்திருப்போர் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தமாக சலுகைகளை வழங்குகிறது.

புதிய சலுகையுடன் கடந்த சில மாதங்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகளும் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. இதில், Own now and pay in 2021, அதிகபட்சம் 8 ஆண்டுகளுக்கு மாத தவணை வசதி, 100 சதவீதம் ஆன் ரோடு தவணை முறை மற்றும் BS6 Pickup at BS4 EMI உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நிதி சலுகைகளில், யுடிலிட்டி வாகனங்களுக்கு அதிகபட்சம் 10 சதவீதம் எக்ஸ் ஷோரூம் விலையில் வழங்கப்படுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கான தவணை வழக்கமான மாத தவணையை விட 50 சதவீகம் குறைந்த கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
இத்துடன் லட்சம் ரூபாய்க்கு ரூ. 899 எனும் மாத தவணை வழங்கப்படுகிறது. பொலிரோ பிக்கப் மற்றும் பொலிரோ மேக்சி டிரக் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு நிதி சலுகை வழங்கப்படுகிறது.






