என் மலர்
கார்
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 55 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறது.
இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. முன்பதிவு விவரங்களின் படி 67 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் வேரியண்ட்டையும், 33 சதவீதம் பேர் பெட்ரோல் வேரியண்ட்டை தேர்வு செய்து இருக்கின்றனர்.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஊரடங்கு கால விற்பனையில் படைத்து இருக்கும் சாதனை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மாருதி சுசுகி ஊரடங்கு துவங்கியது முதல் விற்பனை செய்த இரண்டில் ஒரு கார் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து உள்ளது.
ஊரடங்கு மாதங்களில் 45 சதவீத சந்தேகங்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2019 நிதியாண்டில் 13 சதவீதம் ஆகும். மாருதி சுசுகியின் 26 டச் பாயிண்ட்களில் 21 ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்கும் வகையில் மாருதி சுசுகி நிறுவனம் பிரத்யேக ஆன்லைன் சேவையை கட்டமைத்து இருக்கிறது. டிஜிட்டல் சிக்னல்கள் அடிப்படையில், மாருதி சுசுகி நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட தகவல்களை வழங்கி வருகிறது.
டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் மூலம் ஆண்டு முழுக்க வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க முடியும் என மாருதி சுசுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் மொபைல் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 ஸ்போர்ட்ஸ் டி ஜிடிஐ மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் சக்திவாய்ந்த வேரியண்ட்டை ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட்ஸ் மாடலில் எம்ஸ்டேலியன் டி ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
புதிய டர்போ பெட்ரோல் என்ஜினுடன், எக்ஸ்யுவி300 ஸ்போர்ட்ஸ் இந்திய சந்தையில் சக்திவாய்ந்த எஸ்யுவி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டை பொருத்தவரை இந்த வேரியண்ட் அடுத்த ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா எஸ்யுவி ஸ்போர்ட்ஸ் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு 2021 ஆண்டு நடைபெற இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
1.2 லிட்டர், 3 சிலிண்டர் டைரெக்ட் இன்ஜெக்ஷன், டர்போ பெட்ரோல் யூனிட் 129 பிஹெச்பி பவர், 230 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இது தற்சமயம் வழங்கப்பட்டுள்ள டர்போ பெட்ரோல் என்ஜினை விட புதிய என்ஜின் 20 பிஹெச்பி மற்றும் 30 என்எம் டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சொனெட் முன்பதிவு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி விலை மற்றும் வெளியீடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
புதிய சொனெட் மாடலின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் மாடல் அந்நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இந்த கார் 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் மாடல் பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாடா அல்ட்ராஸ் மாடலின் மிட்-ரேன்ஜ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் இந்த அப்டேட் வழங்கப்பட்டு உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில் டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த வேரியண்ட்டில் மேனுவல் ஏசி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஒ வேரியண்ட்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.

டாடா அல்ட்ரோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 86 பிஹெச்பி மற்றும் 90 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி வேரியண்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ. 6.84 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 8.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையின் எஸ்யுவி பிரிவு வாகனங்கள் விற்பனையில் ஹூண்டாய் கார் முன்னணி இடம் பிடித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் இந்திய சந்தையின் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக இருக்கிறது. மே மற்றும் ஜூன் மாதம் என தொடர்ச்சியாக இரு மாதங்களாக அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடல்களில் 2020 கிரெட்டா முதலிடத்தில் இருக்கிறது.
2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 10419 ஹூண்டாய் கிரெட்டா யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது சந்தையில் விற்பனையான வாகனங்களில் 38 சதவீதம் ஆகும். கிரெட்டாவை தொடர்ந்து கியா செல்டோஸ் மாடல் 8725 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது அதிகம் விற்பனையான மாடலாக இருக்கிறது.

இதே நிதியாண்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ 12 சதவீத பங்குகளை பெற்று உள்ளது. மஹிந்திரா நிறுவனம் 3287 ஸ்கார்பியோ யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் எம்ஜி ஹெக்டார் 2539 யூனிட்களும், டாடா ஹேரியர் 814 யூனிட்களும் விற்பனையாகி இருக்கிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து நிறுவனங்களின் வாகன விற்பனையும் பெருமளவு சரிந்துள்ளது. அந்த வகையில் இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடுவது பொருத்தமான ஒன்றாக இருக்காது. எனினும், கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் இடையேயான போட்டி, விற்பனையை அதிகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிப்ட் காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் யாரிஸ் மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. புதிய ஃபேஸ்லிப்ட் மாடல் பிலிப்பைன்சில் ஜூலை 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய கார் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
டீசரின் படி ஃபேஸ்லிப்ட் யாரிஸ் காரில் மேம்பட்ட பம்ப்பர், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட கிரில் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேம்பட்ட முன்புற பம்ப்பரில் டிரேப்சோயிடல் சென்ட்ரல் ஏர் டேம், ஹெட்லேம்ப் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளது. இது காருக்கு லெக்சஸ் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

ஃபாக் லேம்ப்கள் சி வடிவ ரெசஸ்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய மாடலில் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகமான யாரிஸ் மாடல் விற்பனையில் அதிக வரவேற்பு பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இதன் வர்த்தக மாடல் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் கார் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலின் முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள நெக்சா விற்பனையகம் அல்லது நெக்சா வலைதளத்தில் ரூ. 11 ஆயிரம் செலுத்தி புதிய மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிஎஸ்6 அப்டேட் பெறாத மாடலாக எஸ் கிராஸ் இருக்கிறது. இதுவரை டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதன் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்று எஸ் கிராஸ் மாடலிலும் சுசுகியின் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. முதன்முதலில் இந்த என்ஜின் சியாஸ் மாடலில் வழங்கப்பட்டது. இது 105 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் என்யாக் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மமாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.
புதிய ஸ்கோடா காரில் ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் பாடி பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் செக் குடியரிசில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு தேதி மட்டுமின்றி புதிய கார் வரைபடத்தையும் ஸ்கோடா வெளியிட்டு உள்ளது.

ஸ்கோடா என்யாக் மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. புதிய என்யாக் மாடல் 2022 ஆம் ஆண்டிற்குள் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடும் ஸ்கோடா நிறுவன திட்டத்தின் முதல் கார் ஆகும்.
புதிய ஸ்கோடா என்யாக் மாடலில் 72kWh யூனிட் பேட்டரி வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பியாஜியோ இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 1,10,373 மற்றும் ரூ. 1,14,204 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல்களில் 125சிசி, 3 சிலிண்டர் வால்வு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 9.7 பிஹெச்பி பவர், 9.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரின் முன்புறம் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் பூட் லைட் வழங்கப்பட்டு உள்ளது.

முந்தைய மாடல்களை போன்றே புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 பிஎஸ்6 மாடல்களும் மெட்டல் பாடி பேனல்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் 11-10 இன்ச் வீல்கள் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனிற்கு ஹைட்ராலிக் ஆம் மற்றும் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல்களை ஆன்லைன் அல்லது அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் முன்பதிவு செய்ய முடியும்.
இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 ஆகும். ஆன்லைன் முன்பதிவுகளுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பசாட் ஃபேஸ்லிபிட் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கார் பல்வேறு வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் புதிய பவர்டிரெயின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய பசாட் ஃபேஸ்லிப்ட் மாடல் இரண்டு மாதங்களுக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் புதிய பம்ப்பர், கிரில், எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லேம்ப் கிளஸ்டர், புதிய பசாட் லோகோ காரின் பூட் பகுதியில் பொருத்தப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
கியா சொனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த கார் கியா மோட்டார்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதிய கார் டீசர் வீடியோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டீசர் வீடியோவில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது.

கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகின.






