என் மலர்
கார்
இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
நிசான் இந்தியா நிறுவனம் மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்த மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நிசான் மேக்னைட் மாடல் எட்டு வித நிறங்களில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் கடந்த ஆண்டுகளில் அறிமுகமாகி இருக்கின்றன. இதில் அனைத்து மாடல்களையும் நினைவில் கொள்ள முடியாது என்றாலும், சில மாடல்கள் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன.
அந்த வகையில் இன்றும் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு முதல் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் ஸ்விப்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15,798 ஸ்விப்ட் யூனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்து இருக்கிறது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் அதிகம் விற்பனையாகும் பத்து கார்களில் ஏழு மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தை சேர்ந்தவை ஆகும்.
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள விற்பனையாளர்கள் புதிய மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் 2021 குவான்சோ சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி முன்புறம் புதுவித எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், பாக் லேம்ப், முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட ஏர் இன்டேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. காரின் பக்கவாட்டுகளில் பெரும் மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இது புதிய அலாய் வீல்கள், ட்வீக் செய்யப்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2021 பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலிலும் இதே என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த என்ஜின்கள் முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இத்துடன் பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் யூனிட், டீசல் என்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட முற்றிலும் புதிய எம்பிவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் புதிய கியா எம்பிவி மாடல் இந்திய சந்தையில் 2022 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய எம்பிவி மாடல் கார்னிவல் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என தெரிகிறது. அளவில் புதிய கார் மஹிந்திரா மராசோ மாடலுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அளவில் இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கு நடுவில் இருக்கும் என தெரிகிறது.
மேலும் இந்த மாடல் ஏழு பேர் பயணிக்கும் இருக்கைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது கூர்மையான தோற்றம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் லைன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் டைகர் நோஸ் கிரில் வழங்கப்படும் என தெரிகிறது.
கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இந்த எம்பிவி மாடல் பல்வேறு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை இந்த தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன் படி விலை உயர்வு ஜனவரி 1, 2021 முதல் அமலாக இருக்கிறது. விலை உயர்வு பயணிகள் வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கும் பொருந்தும்.
உதிரிபாகங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு கட்டணம் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. வெவ்வேறு மாடல்களின் புதிய விலை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
கடந்த நிதியாண்டு வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் பல்வேறு சலுகைகள் மற்றும் கவர்ச்சிகர தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்தது. இதுதவிர டிசம்பர் 2020 முதல் ஆன்லைன் மூலம் விற்பனையாகும் அக்சஸரீக்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் இந்திய முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனம் புதிய ஐ20 மாடல் காரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 6 ஏர்பேக், 7 ஸ்பீக்கர் அடங்கிய மியூசிக் சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய மேப் வசதி உள்பட சொகுசு வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வந்தது.
புதிய ரக ஹூண்டாய் ஐ20 கார் முதற்கட்டமாக 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதுதொடர்பாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனத்தின் (விற்பனை, மார்க்கெட்டிங், சர்வீஸ்) இயக்குனர் தருண் கார்க் கூறியதாவது:-

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் 3 வகையான என்ஜின் வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு சொகுசு மற்றும் நவீன வசதிகள் கொண்ட இந்த கார், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக இளம்வயதினரின் மனதை ஈர்த்துள்ளது. எனவே கார் அறிமுகம் செய்யப்பட்ட 40 நாட்களில், இதுவரையில் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் டிஆர்டி மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் டிஆர்டி மாடலின் இந்திய விற்பனையை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பார்ச்சூனர் டிஆர்டி மாடல் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி ஆகும். இது பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களை கொண்டிருந்தது.
தற்சமயம் டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் டிஆர்டி மாடலை தனது வலைதளத்தில் இருந்து நீக்கி உள்ளது. அடுத்த ஆண்டு புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் டிஆர்டி லிமிடெட் எடிஷன் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பார்ச்சூனர் டிஆர்டி மாடலில் டூயல் டோன் ரூஃப், ரக்கட் சார்கோல் பிளாக் ஆர்18 அலாய் வீல்கள், 360 டிகிரி பானரோமிக் வியூ மாணிட்டர், ஆட்டோ ஃபோல்டு ஒஆர்விஎம், டூயல் டோன் டேஷ்போர்டு மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃபிள் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
லிமிடெட் எடிஷன் டொயோட்டா கார் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவன கார் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவன விற்பனையாளர்கள் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சலுகை ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்ட்களுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் ரைடர் வேரியண்ட் விற்பனை நிறுத்தியது.

இதுதவிர அடுத்த ஆண்டு ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்கோடா விஷன் இன் எஸ்யுவி, நான்காவது தலைமுறை ஆக்டேவியா, பெட்ரோல் என்ஜின் கொண்ட கோடியக் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
போர்ஷே நிறுவனத்தின் கயென் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்ஷே கயென் எஸ்யுவி மாடல் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மைல்கல் எட்டிய யூனிட் ஸ்லோவேகியா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த மாடல் கார்மைன் ரெட் நிறம் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இந்த மாடல் ஜெர்மனியை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டது. 2002 பாரிஸ் மோட்டார் விழாவில் போர்ஷே கயென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் போர்ஷே கயென் மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் போர்ஷே கயென் மாடல் துவக்க விலை ரூ. 1.19 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் இந்த மாடல் கயென், கயென் இ ஹைப்ரிட் மற்றும் கயென் டர்போ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
போர்ஷே கயென் மாடல் இந்திய வேரியண்ட் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஜனவரி 2021 முதல் கார் மாடல்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. கார் உற்பத்தி செலவீன கட்டணம் உயர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு வெவ்வேறு மாடல்களின் வேரியண்ட்கள் அளவில் வேறுபடும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை ஆல்டோ (ரூ. 2.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) துவங்கி எக்ஸ்எல்6 (ரூ. 9.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
முன்னதாக டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாருதி சியாஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களுக்கு ரூ.. 51 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலுக்கான சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கான சந்தா விலையை தற்காலிகமாக குறைத்து உள்ளது. அதன்படி டாடா நெக்சான் இவி சந்தா மாதம் ரூ. 29,500 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நெக்சான் இவி சந்தா விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 41,500 இல் இருந்து ரூ. 34,900 ஆக குறைக்கப்பட்டது. இந்த விலை நெக்சான் இவி 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திற்கு டெல்லி பகுதியில் மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

டாடா நெக்சான் இவி சந்தா விலை ஒவ்வொரு நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பெங்களூரு, ஐதராபாத், பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் நெக்சான் இவி கிடைக்கிறது. டாடா நெக்சான் இவி சந்தா முறை 12, 24 அல்லது 36 மாதங்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 மாடல் விற்பனை அடுத்த ஆண்டு நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அல்டுராஸ் ஜி4 மாடல் இரண்டாம் தலைமுறை சங்யாங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் அல்டுராஸ் ஜி4 மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட்டு இங்குள்ள மஹிந்திரா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால் மஹிந்திரா மற்றும் சங்யாங் நிறுவனங்களிடையே உள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வர இருகிறது.

தற்சமயம் சுமார் 500 யூனிட்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை மஹிந்திரா வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் கூடுதல் யூனிட்களை மஹிந்திரா இறக்குமதி செய்யாது என்றே கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 மாடலை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 28.69 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






