என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படுகிறது.
ஆல்டோ, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது. மாருதி டூர் எஸ் மாடலின் விலையில் ரூ. 5061 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஸ்விப்ட் மற்றும் எர்டிகா போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்படு இருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, ஆல்டோ, டிசையர் மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 12,500, ரூ. 14 ஆயிரம் மற்றும் ரூ. 23 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.
முன்னதாக டிசம்பர் 2020 மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது விலையை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. அதன்படி விலை உயர்வு தற்சமயம் அமலாகி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலை இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த மாடல் துவக்க விலை ரூ. 29.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய பேஸ்லிப்ட் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் கணிசமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. தற்சமயம் 2021 பார்ச்சூனர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் லெஜண்டர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.
பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 சூப்பர்ப் மாடல் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட சூப்பர்ப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 சூப்பர்ப் மாடல் துவக்க விலை ரூ. 31.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 34.99 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2021 ஸ்கோடா சூப்பர்ப் மாடல் தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் உள்ள மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்களுடன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவே இன்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன.

காரின் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் வாய்ஸ் கமாண்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சூப்பர்ப் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய டிபிஎக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சர்வதேச சந்தையை தொடர்ந்து புதிய டிபிஎக்ஸ் சூப்பர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் விலை ரூ. 3.82 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் முதல் பெர்பார்மன்ஸ் எஸ்யுவி மாடலாக இது வெளியாகி உள்ளது.
புதிய டிபிஎக்ஸ் புல்-சைஸ் 5-சீட் எஸ்யுவி மாடல் ஆகும். இதன் முன்புறம் கிளாம்ஷெல் பொனெட், டூயல் ஏர் வென்ட்களுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழக்கமான டிபி முன்புற கிரில் வழங்கப்பட்டு உள்ளது. பம்ப்பரின் கீழ்புறத்தில் எல்இடி டிஆர்எல்கள் வழஹ்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. பின்புற டெயில் லைட் வேண்டேஜ் மாடலில் இருந்ததை போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், பவர்டு டெயில் கேட் மற்றும் ட்வின் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.
2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடலாக நெக்சான் இவி காரை 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் 2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.
2020 ஆண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2529 நெக்சான் இவி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் நெக்சான் இவி மட்டும் 63.2 சதவீத பங்குகளை பெற்று உள்ளது. டாடா நெக்சான் இவி மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கவர்ச்சிகர விலை, சிறந்த செயல்திறன், நீண்ட தூரம் பயணிக்கும் வசதி மற்றும் இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் என பல்வேறு காரணங்களால் இதன் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் துவக்க விலை ரூ. 13.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 40.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய 220ஐ மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டீரிங் வீலில் பேடிள் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க இதன் டீசல் வேரியண்ட்டை போன்று காட்சியளிக்கிறது.
இத்துடன் புதிய காரில் பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், பிரேம்லெஸ் டோர், எல்இடி ஹெட்லைட்கள், டெயில்-லைட் யூனிட்கள், ஸ்லோப்பிங் ரூப்லைன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 17 இன்ச் டபிள் ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது சி5 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும்.
தற்போதைய தகவல்களின் படி புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் ஓசூரில் உள்ள சிட்ரோயன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
தற்சமயம் சிட்ரோயன் நிறுவனம் தனது விற்பனை மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் அறிமுகமானதும் விற்பனைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டஸ்டர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. கார் மாடல் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக ரெனால்ட் இந்தியா தெரிவித்து உள்ளது.
விலை உயர்வின் படி ரெனால்ட் க்விட் துவக்க விலை ரூ. 3,12,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5,31,200 என மாறி இருக்கிறது. ரெனால்ட் க்விட் மாடல் விலை ரூ. 18,500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரெனால்ட் டிரைபர் மாடல் விலை ரூ. 5.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.50 லட்சம் என மாறி இருக்கிறது. அதன்படி டிரைபர் மாடல் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டஸ்டர் எஸ்யுவி விலை ரூ. 28 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 9.57 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.87 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமத்தின் 2020 வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 2020 ஆண்டு முழுவதும் இந்திய சந்தையில் 6,604 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 6,092 பிஎம்டபிள்யூ யூனிட்களும், 512 மினி கார்களும் அடங்கும். இதே ஆண்டு பிஎம்டபிள்யூ மோட்டராட் 2563 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து இருக்கிறது.
கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் பிஎம்டபிள்யூ 5 உள்ளிட்டவை அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதுதவிர புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 அனைத்து பகுதிகளிலும் அமோக வரவேற்பு பெற்றது.

இத்துடன் வழக்கம்போல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஒட்டுமொத்த விற்பனையில் மினி கன்ட்ரிமேன் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. மின் ஹேட்ச் மற்றும் மினி கன்வெர்டிபில் போன்ற மாடல்கள் 23 சதவீதம் விற்பனையாகி இருக்கின்றன.
இருசக்கர வாகனங்களை பொருத்தவரை பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் உள்ளிட்ட மாடல்கள் ஒட்டுமொத்த ஆண்டு விற்பனையில் 80 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன.
இவைதவிர பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஜிஎஸ்ஏ, பிஎம்டபிள்யூ எப் 750 மற்றும் 850 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் உள்ளிட்டவையும் விற்பனையாகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் உற்பத்தி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், அந்த விழாவில் இந்த மாடல் கிராவிடாஸ் என அழைக்கப்பட்டது.
தற்சமயம் புதிய சபாரி மாடல் உற்பத்தி துவங்கியதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புகைப்படத்தில் இருக்கும் கார் ஸ்டீல் ரிம் கொண்டிருப்பதால், அது லோயர் வேரியண்ட் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய டாடா சபாரி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் சில விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்திய சந்தையில் டாடா சபாரி மாடல் இரண்டு தலைமுறைகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இது அதிக பிரபலமான எஸ்யுவி மாடலாகவும் விளங்கியது. அந்த வகையில், இந்த மாடல் அசத்தலான புது அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தனது கார் மாடல்கள் விலையை அதிகப்படுத்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 15, 2021 முதல் அமலாக இருக்கிறது. விலை உயர்வு மாடல்களுக்கு 5 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்களை வழங்குவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. `தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கான புதிய விலை பிராண்டின் பிரீமியம் விலையை நிலைநிறுத்தவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்' என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பென்ஸ் மாடலில் மெர்சிடிஸ் மி கனெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்ட முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மாடல் இது ஆகும்.
ஜீப் நிறுவனத்தின் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி 2020 குவான்ஷௌ சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய காம்பஸ் மாடல் வரும் வாரங்களில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் முன்புறம் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புற கிரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது.

உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, கிளைமேட் கண்ட்ரோல், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் சன்ரூப், டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.






