என் மலர்
பைக்
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு இம்மாத இறுதி வரை அசத்தல் சலுகைகளை வழங்குகிறது.
- எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கூடுதல் அம்சங்களை வழங்க தொடர்ந்து புது ஒஎஸ் அப்டேட்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் வழங்கி வருகிறது. மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஸ்கூட்டர்களின் செயல்திறன், ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதோடு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் மூவ் ஒஎஸ் 3 ஆகும். இந்த அப்டேட் தீபாவளி சமயத்தில் வெளியாக இருந்த நிலையில், திடீரென வெளியீடு தாமதமானது.
முன்னதாக மூவ் ஒஎஸ் 2.0 வெளியீடும் பலமுறை தாமதமானது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஒலா S1, S1 ஏர் மற்றும் S1 ப்ரோ என மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்கூட்டர்கள் வரிசையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஸ்கூட்டர்களுக்கு 50 புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.

இதில் ஹில் ஹோல்டு, மூட்ஸ், ரிஜென் வி2, பிராக்சிமிட்டி லாக், கீ ஷேரிங், காலிங், ஹைப்பர் சார்ஜிங் உள்ளிட்டவை ஒலா எலெக்ட்ரிக் ஏற்கனவே அறிவித்து தற்போது வழங்கி இருப்பவை ஆகும். புது அம்சங்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்தி இருப்பதாக ஒலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. இந்த அப்டேட் ஆக 4.5 நொடிகள் ஆகும்.
புது அப்டேட்டை தொடர்ந்து ஒலா ஸ்கூட்டர்களை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதோடு ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த ரேன்ஜ் இரண்டில் இருந்து அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை சிறப்பாக அதிகரித்து இருக்கிறது. இவை தவிர இந்த அப்டேட் ஸ்கூட்டரில் ஏராளமான அம்சங்களை வழங்கி இருக்கிறது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நின்ஜா 300 மாடலுக்கு குறுகிய கால விலை குறைப்பை அறிவித்துள்ளது.
- நின்ஜா 300 மாடலில் 38.88 ஹெச்பி பவர் கொண்ட 296சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் செயல்பட்டு வரும் கவாசகி விற்பனையாளர்கள் நின்ஜா 300 மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர். இந்த விலை குறைப்பு குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு0 டிசம்பர் 31, 2022 தேதி வரை அமலில் இருக்கும். 2023 மாடலை அறிமுகம் செய்யும் முன், தற்போதைய மாடல்களை விற்று முடிக்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கவாசகி நின்ஜா 300 விலை இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட கிராஃபிக்ஸ் உடன் அறிமுகமான போதிலும், நின்ஜா 300 மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 13 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

பின் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இதன் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டது. விலை உயர்வு காரணமாக வாங்காமல் இருந்த வாடிக்கையாளர்களை தூண்டும் வகையிலும், விலை குறைப்பு மூலம் வாகன விற்பனையை அதிகப்படுத்தவும் கவாசகி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய விலை குறைப்புக்கு முன் கவாசகி நின்ஜா 300 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
நின்ஜா 300 மாடலில் 296சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.8 ஹெச்பி பவர், 26.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீல் டியூப் சேசிஸ், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பிரீலோடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக், இருபுறமும் ஒற்றை டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் கன்வென்ஷனல் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், செமி டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கவாசகி நின்ஜா 300 மாடல் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR310, பிஎம்டபிள்யூ G310 RR மற்றும் கீவே K300 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்குகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 200சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
- புது மாடலின் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் மெக்கானிக்கல், காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை முந்தைய வெர்ஷனை விட சிறிதளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
டிசைனை பொருத்தவரை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல் தற்போது ஸ்போர்ட் தோற்றம் பெற்று இருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் முன்புற ஃபோர்க்குகள், எல்இடி ஹெட்லைட்டின் மேல் சிறிய ஃபிளைஸ்கிரீன், பாடி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ஹெட் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் பின்புற டெயில் ரேக் மீது டியுபுலர் கிராப் ரெயில் உள்ளது. இதன் அலாய் டிசைன், ஸ்கூப்டு சீட் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புது மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக சற்றே சக்திவாய்ந்த 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 வால்வுகளுக்கு பதில் 4 வால்வுகள் கொண்ட செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 18.83 ஹெச்பி பவர், 17.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கால் அலெர்ட்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஸ்டாண்டு சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரு வீல்களிலும் ஒற்றை டிஸ்க் மற்றும் அலாய் வீல் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 726, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2V மாடலின் விலையை விட ரூ. 1036 அதிகம் ஆகும். புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல்- ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் ஃபன்க் லைம் எல்லோ மற்றும் மேட் ஷீல்டு கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 110 சீரிசில் ABS பிரேக்கிங் கொண்ட புது மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
- புது பிளாட்டினா 110 மாடலின் ஸ்பீடோமீட்டரில் ABS இண்டிகேட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ABS வசதி கொண்ட தனது பிளாட்டினா 110 ABS மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடலின் விலை ரூ. 72 ஆயிரத்து 224, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எண்ட்ரி லெவல் கம்யுட்டர் பிரிவில் இத்தகைய பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் ஒரே மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புதிய பிளாட்டினா 110 ABS பெற்று இருக்கிறது.
புதிய பிளாட்டினா 110 மாடலில் பஜாஜ் நிறுவனம் சிங்கில் சேனல் ABS வழங்கி இருக்கிறது. இதன் மூலம் மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பு அதிகரித்து இருக்கிறது. இத்துடன் புதிய பிளாட்டினா 110 ABS மாடலில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ABS இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கியர் கைடன்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இது பிளாட்டினா சீரிசில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 110 ABS மாடல் எபோனி பிளாக், கிளாஸ் பீவ்டர் கிரே, காக்டெயில் வைன் ரெட் மற்றும் சஃபயர் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய பிளாட்டினா 110 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 115.45சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.44 ஹெச்பி பவர், 9.81 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர 17 இன்ச் அளவில் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள், ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 11 லிட்டர் ஃபியூவல் டேன்க், செமி டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடல் இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ், ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா CD 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் ஏராள மாற்றங்கள் செய்யப்படுகிறது.
- இந்த மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படுவதோடு, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளின் புது டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதற்கான டீசர்கள் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளுக்கான புது டீசரில் முன்புற தோற்றம் அம்பலமாகி இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் மீண்டும் மேம்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் ஸ்டைலிங் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. எனினும், இதன் ஹெட்லேம்ப் பொசிஷண் மாற்றப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பாடி நிறத்தால் ஆன ஃபிளை ஸ்கிரீன், ரிடிசைன் செய்யப்பட்ட பெல்லி பேன் வழங்கப்பட்டு உள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட செட்டப் வழங்கப்படலாம். புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் 199.6சிசி சிங்கில் சிலிண்டர், ஆயில்/ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை 18.8 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் வழங்கப்பட்டு இருந்த இரண்டு வால்வுகள் கொண்ட வேரியண்ட் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்திவிட்டது.
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு அந்நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருந்தது.
- தற்போது ஒலா S1 ஸ்கூட்டருக்கு புதிய கேஷ்பேக் சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று ஒலா S1 மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சலுகைகளில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் நிலையில், கேஷ்பேக் சலுகை டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 97 ஆயிரத்து 999 என மாறி விடும், அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இவை தவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் போது மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் முறை, குறைக்கப்பட்ட வட்டி, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளில் தள்ளுபடி, பிராசஸிங் கட்டணத்தில் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சலுகைகள் மட்டுமின்றி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்க இருக்கிறது. தற்போது இந்த ஒஎஸ் பீட்டா முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இறுதி வெர்ஷன் OTA முறையில் வழங்கப்பட இருக்கிறது. புதிய மூவ் ஒஎஸ் 3.0 ஸ்கூட்டரை ஓட்டும் போது சவுண்ட்-டிராக், ஹில் ஹோல்டு, ரிஜெனரேடிவ் பிரேக்கிங் மற்றும் சில அம்சங்களை ஸ்கூட்டர்களில் வழங்க இருக்கிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விலை உயர்த்தப்பட்டன.
- இரு ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அவ்வப்போது உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹீரோ பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது.
எனினும், தற்போதைய விலை உயர்வில் டெஸ்டினி 125 மாடல் பாதிக்கப்படவில்லை. பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. விலை உயர்வின் படி ஹீரோ பிலெஷர் பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 982 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 79 ஆயிரத்து 522 என மாறி இருக்கிறது. இதே போன்று மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 816 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 92 ஆயிரத்து 760 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய விலை விவரங்கள்:
ஹீரோ பிலெஷர் பிளஸ் LX ரூ. 70 ஆயிரத்து 982
ஹீரோ பிலெஷர் பிளஸ் VX ரூ. 72 ஆயிரத்து 738
ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ரூ. 76 ஆயிரத்து 228
ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ஜூபிலண்ட் எல்லோ ரூ. 79 ஆயிரத்து 522
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிரம் ரூ. 69 ஆயிரத்து 816
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிஸ்க் ரூ. 74 ஆயிரத்து 910
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 83 ஆயிரத்து 440
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 88 ஆயிரத்து 240
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் ரூ. 88 ஆயிரத்து 660
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் / கனெக்டெட் ரூ. 92 ஆயிரத்து 760
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
விலையை உயர்வை அடுத்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தொடர்ந்து நிதி சார்ந்த சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் குறுகிய காலத்திற்கு எக்சேன்ஜ் மற்றும் நிதி சலுகைகளை அறிவித்து இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
- கேடிஎம் நிறுவனத்தின் புதிய 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான புது நிறங்களில் கிடைக்கிறது.
- மற்ற அம்சங்களுடன், புதிய 2023 மாடலில் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மாடல்- ஆரஞ்சு மற்றும் பிளாக், கிரே என இரண்டு விதமான புதிய நிறங்களில் கிடைக்கிறது.
முந்தைய மாடலை போன்றே புது மாடலிலும் ஸ்ப்லிட்-ஸ்டைல் ஹெட்லைட், செமி ஃபேரிங் டிசைன், 23 லிட்டர், 3-பார்ட் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், டூயல் பாரெல் எக்சாஸ்ட், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, புதிய நேவிகேஷன் மென்பொருள், செலக்டபில் ரைடு மோட்கள், WP செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

இத்துடன் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி உள்ளது. இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்+ கைடன்ஸ், வேபாயிண்ட் மார்க்கர், மியூசிக் மற்றும் போன் அழைப்புகளை இயக்கும் வசதிகளை வழங்குகிறது. புதிய 2023 மாடலில் வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பை-டைரெக்ஷனல் குயிக்ஷிப்டர், WP சஸ்பென்ஷன் ப்ரோ உள்ளிட்டவை ஆப்ஷனல் அக்சஸரீயாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்-ஆன் மற்றும் அக்சஸரீக்கள் பட்டியலில் கேடிஎம் பவர்பார்ட்ஸ் கலெக்ஷன் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் பாதுகாப்பு, டீடெயிலிங், அதிக செயல்திறன், லக்கேஜ், ரேக் மற்றும் பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
- புதிய எலெக்ட்ரிக் பைக் அதிக சக்திவாய்ந்த பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது ரோஸ் பரேட்-க்காக புது டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன திட்டம் அனைவரும் அறிந்ததே. இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி விட்டன. இதில் சர்வதேச சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கும் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விவரங்கள் இடம்பெற்று இருந்தன.
இதே தகவல்களில் இந்தியாவுக்காக ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதும் அம்பலமானது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் சந்தையில் பெருமளவு வாடிக்கையாளர்களை குறிவைத்து வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இவை அதிக செயல்திறன் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என தெரிகிறது.

அமெரிக்க சந்தைக்காக திட்டமிடப்பட்டு இருக்கும் புது எலெக்ட்ரிக் பைக் மிட்-பெர்ஃபார்மன்ஸ் ஸ்டிரீட் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார், 150 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
- டுகாட்டி நிறுவனத்தின் முற்றிலும் DesertX மோட்டார்சைக்கிளில் 937சிசி, L ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் கிராஸ்-ஸ்போக் ரக வீல்களை கொண்டிருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் டூரர், DesertX மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டுகாட்டி DesertX விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் டுகாட்டி DesertX மாடல் இந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 ரேலி மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய DesertX அட்வென்ச்சர் மாடலில் 937 சிசி, L ட்வின் ரக என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் புதிய மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த என்ஜின் குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட வரையில் மாற்றப்பட்டு இருப்பதாக டுகாட்டி தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்த 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியூரோ என ஆறு விதமான ரைடிங் மோட்கள்- ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களை கொண்டிருக்கிறது.
இவை தவிர குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்ஷனல் குயிக்ஷிஃப்டர், கார்னெரிங் ABS போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை ட்வின் பாட் ஹெட்லைட், உயரமான விண்ட்-ஸ்கிரீன், செமி ஃபேரிங் டிசைன், 21 லிட்டர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், பேஷ் பிலேட், டியூப்லெஸ் டயர், வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மற்ற ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை கயபாவின் அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக், இரண்டையும் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய டுகாட்டி ஏராளமான அக்சஸரீக்களை ஆப்ஷனாக வழங்குகிறது.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
- புதிய பிஎம்டபிள்யூ பைக் டுகாட்டி பனிகேல் வி4, கவாசகி நின்ஜா ZX-10R மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் S1000RR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR விலை ரூ. 20 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
பிஎம்டபிள்யூ S1000RR ஸ்டாண்டர்டு ரூ. 20 லட்சத்து 25 ஆயிரம்
பிஎம்டபிள்யூ S1000RR ப்ரோ ரூ. 22 லட்சத்து 15 ஆயிரம்
பிஎம்டபிள்யூ S1000RR M ஸ்போர்ட் ரூ. 24 லட்சத்து 55 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2023 பிஎம்டபிள்யூ S1000RR மோட்டார்சைக்கிள் ஏராளமான ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களை பெற்று இருக்கிறது. இதன் ஃபேரிங்கில் ஸ்போர்ட்ஸ் ஏரோ விங்லெட்கள் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் வடிவில் வழங்கப்படுகிறது. இது டவுன்ஃபோர்ஸ்-ஐ 10 கிலோ வரை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் விண்ட்ஸ்கிரீன் உயரம் சற்றே அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லைட் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ரியர் எண்ட், அதிக திறன் கொண்ட என்ஜின், மேம்பட்ட அசிஸ்டண்ஸ் சிஸ்டம்கள் உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR மாடலிலும் 999சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல் ஃபன்ஷன், ஏபிஎஸ், பிரேக் ஸ்லைடு அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்ஷனல் குயிக்ஷிப்டர், லான்ச் கண்ட்ரோல், லேண் லிமிட்டர் மற்றும் ரெயின், ரோடு, டைனமிக், ரேஸ் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் 2023 பிஎம்டபிள்யூ S1000RR மோட்டார்சைக்கிள் டுகாட்டி பனிகேல் வி4, கவாசகி ZX-10R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
- இவற்றில் இரு ஸ்கூட்டர்களுக்கு ஒலா நிறுவனம் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவித்து இருந்த ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை நீட்டித்து இருக்கிறது. அந்த வகையில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி இந்த ஆண்டு இறுதிவரை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகை பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்து இருக்கிறது.
இந்த சலுகையின் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் குறைந்த விலை, அதாவது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும். சலுகையின்றி இந்த ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சலுகை ஒலா S1 ப்ரோ மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

தள்ளுபடி மட்டுமின்றி மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் வசதி, குறைக்கப்பட்ட வட்டி, இதர கட்டணங்கள் முழுமையாக ரத்து, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகலுக்கு கூடுதல் தள்ளுபடி என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.
சலுகை தவிர ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 11 நகரங்களில் புதிதாக 14 எக்ஸ்பீரின்ஸ் செண்டர்களை துவங்கி இருக்கிறது. இவற்றில் மூன்று பெங்களூரு நகரிலும், பூனேவில் இரண்டு மற்றும் ஆமதாபாத், போபால், டேராடூன், டெல்லி, ஐதராபாத், கோடா, நாக்பூர், ராஞ்சி மற்றும் வதோதரா போன்ற பகுதிகளில் ஒன்று என்ற வீதத்தில் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.






