search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vida"

    • பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.
    • 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. ஹீரோவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு விடா பிராண்டு விடா அட்வான்டேஜ் பேக்கேஜ் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.

    ஏற்கனவே விடா V1 ப்ரோ பயன்படுத்துவோர் புதிய அட்வான்டேஜ் பேக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பெற முடியும். இதில் இரண்டு பேட்டரிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படும்.

     


    இத்துடன் 2 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி, விடா வொர்க்ஷாப்களில் இலவச சர்வீஸ், 24x7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ், மை விடா செயலியில் உள்ள அனைத்து கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய விடா V1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • ஸ்கூட்டர் வாங்குவோருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
    • மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப்-இன் எலெக்ட்ரிக் வாகன பிரிவு "விடா" எனும் பெயரில் இயங்கி வருகிறது. மேலும் விடா பிராண்டின் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆண்டு இறுதியை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள், வாரண்டி மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 7 ஆயிரத்து 500 வரை லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

     


    ஹீரோ மோட்டோகார்ப் அல்லது விடா வாடிக்கையாளர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமே லாயல்டி பலன்கள் பொருந்தும். இத்துடன் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 5.99 சதவீதம் எனும் மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    விடா V1 ஸ்கூட்டரை மாத தவணையில் வாங்கும் போது இதர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மாத தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரத்து 429-இல் இருந்து வாங்கிட முடியும். நிதி சார்ந்த பலன்களை வழங்குவதற்காக விடா பிராண்டு ஐ.டி.எஃப்.சி., இகோஃபை மற்றும் ஹீரோ ஃபின்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்திய சந்தையில் விடா V1 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. விடா V1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

    • இந்திய சந்தையில் விடா பிராண்டின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • முதற்கட்டமாக விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் பெங்களூரு நகரில் துவங்கி இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிராண்டு விடா இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் யூனிட் பெங்களூரு நகரில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ள விடா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக பெங்களூரு நகரில் வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் விடா V1 வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை நிறம், பேட்டரி திறன் மற்றும் பிக்கப் வேகம் உள்ளிட்ட பிரிவுகளில் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், விடா V1 ப்ரோ வேரியண்ட் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இதன் ப்ரோ வேரியண்ட் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன.

    இத்துடன் இகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் யூசர் கஸ்டமைசபில் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. விடா V1 பிளஸ் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கிளாஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ப்ரோ வேரியண்ட் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட், கிளாஸ் பிளாக் மற்றும் மேட் அப்ரக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. 

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
    • விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவாக விடா பிராண்டு உருவாக்கப்பட்டது. ஹீரோ விடா பிராண்டிங்கின் கீழ் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

    விடா பிராண்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஸ்கூட்டரை தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் விடா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.

    "ஒட்டுமொத்த சந்தையிலும் முதலில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வதே வழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், சிலர் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்வதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நிச்சயமாக மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்து இருக்கிறார்.

    ஹீரோ விடா V1 மாடல் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், கீலெஸ் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், எஸ்ஒஎஸ் அலெர்ட், டு-வே திராட்டில் என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடன் இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ×