என் மலர்tooltip icon

    பைக்

    • சுசுகி நிறுவனம் எட்டு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகிறது.
    • சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக எலெக்ட்ரிக் அக்சஸ் மாடல் இருக்கலாம்.

    சுசுகி நிறுவனம் 2030 ஆண்டு வரையிலான சர்வதேச செயல் திட்டம் மற்றும் வாகனங்கள் வெலியீடு திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சில சுவாரஸ்யமான எலெர்ட்ரிக் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், அக்சஸ் எலெக்ட்ரிக் மாடலே சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அக்சஸ் மாடல் சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும். மேலும் இது பர்க்மேன் ஸ்டிரீட் IC என்ஜின் வேரியண்டை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் இது சுசுகியின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இதோடு எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    சுசுகியின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் 2030 ஆண்டிற்குள் மொத்தம் எட்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியாகும் போதிலும், தொடர்ந்து IC என்ஜின் வாகனங்கள் பிரிவிலும் சுசுகி கவனம் செலுத்த இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முறையே 75:25 முறையில் அறிமுகமாகிறது.

    மோட்டார்சைக்கிள் பிரிவில் சுசுகி நிறுவனம் எந்த மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஜிக்சர் சீரிஸ் தான் எலெக்ட்ரிக் வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹோண்டா நிறுவனத்தின் புது 100சிசி பைக் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புது 100சிசி பைக் ஹோண்டா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது முற்றிலும் புதிய 100சிசி மோட்டார்சைக்கிளை மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருக்கும் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஏற்கனவே இந்த மாடலை உருவாக்கும் பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இது நேரடியாக ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100சிசி பைக் பற்றி தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது.

    முன்னதாக 2021 வாக்கில் ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அட்சுஷி ஒகாடா தெரிவித்து இருந்தார். தற்போது ஹோண்டா நிறுவனத்தின் ஷைன், SP125 மற்றும் யுனிகான் போன்ற மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடலாக CD 110 இருக்கிறது. இதன் விலை ரூ. 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 110சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.7 ஹெச்பி பவர், 9.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய 100சிசி ஹோண்டா பைக் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் CD110 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. புது 100சிசி பைக் மட்டுமின்றி ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    • இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளியாகிறது.
    • ஹோண்டா நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.

    இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா தெரிவித்து இருக்கிறார்.

    ஹோண்டா ஜப்பான் உடன் இணைந்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவதாக ஒகாடா தெரிவித்து இருக்கிறார். மேலும் முதல் ஸ்கூட்டர் மாடல் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என அவர் மேலும் தெரிவித்தார். ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆக்டிவா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் பிக்சட் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இதே ஸ்கூட்டரின் அதிக செயல்திறன் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதில் எளிதில் கழற்றி மாட்டிக் கொள்ளும் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஒரே ஆலையில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டு வர முதலீடுகள் செய்யப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியை சந்தைக்கு ஏற்றவாரு மாற்ற முடிவு செய்துள்ளது. இத்துடன் இரண்டாவது மாடலை அறிமுகம் செய்யும் முன் 6 ஆயிரம் கஸ்டமர் டச்பாயிண்ட்களை அமைக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. 

    • ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.
    • தற்போது ஹோண்டா ஆக்டிவா மாடல் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புது ஆக்டிவா மாடல் விலை ரூ. 80 ஆயிரத்து 537, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புது மாடலை தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா மாடல் - ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் அலாய் வீல் கொண்ட ஸ்மார்ட் கீ என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் கீலெஸ் வசதியை வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார் லாக் / அன்லாக், அண்டர் சீட் ஸ்டோரேஜ் மற்றும் ஃபியூவல் நிரப்பும் மூடியை திறப்பது உள்ளிட்டவைகளை சாவி இன்றி இயக்க முடியும்.

    இத்துடன் ஆண்டி-தெஃப்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரில் உள்ள நாப்-போன்ற ஸ்விட்ச் கொண்டு மேலே உள்ள அம்சங்களை இயக்கலாம். இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்கூட்டரின் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டிலும் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஸ்ப்ரிங், டிரம் பிரேக் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தை விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ஸ்கூட்டர் 140 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இது டிவிஎஸ் நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பலரும் விரும்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐகியூப் இருந்து வருகிறது.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் போது டிவிஎஸ் நிறுவனம் அதன் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனினும், நாடு முழுக்க தனது விற்பனை மையங்கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    தற்போது டிவிஎஸ் ஐகியூப் மாடல்- ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் முதல் இரு வேரியண்ட்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐகியூப் ST டாப் எண்ட் மாடலில் பெரிய பேட்டரி பேக் உள்ளது. இது 140 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    டிவிஎஸ் ஐகியூப் ST மாடலில் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், TPMS மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. அடுத்த சில மாதங்ளில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஆக்டிவா இருக்கிறது.
    • ஆக்டிவா மாடலை வாங்குவோருக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோருக்கு குறுகிய கால சலுகை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா உள்ளது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீதம் கேஷ்பேக் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

    எனினும், இந்த கேஷ்பேக் சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்போர் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் குறைந்த பட்ச பரிவர்த்தனை தொகை ரூ. 40 ஆயிரம் ஆக இருக்க வேண்டும். மற்ற பலன்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு குறைந்த முன்பணம் ரூ. 3 ஆயிரம், 7.99 சதவீதம் வட்டியில் கிடைக்கிறது.

    இந்த சலுகை மார்ச் 31, 2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இரண்டு சலுகைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சலுகை தவிர ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இது பற்றி ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • டிவோட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டு பாகங்களை கொண்டுள்ளது.
    • புது டிவோட் மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், கீலெஸ் சிஸ்டம், ஆண்டிதெஃப்ட், டைப் 2 சார்ஜிங் பாயிண்ட் உள்ளது.

    ஜோத்பூரை சேர்ந்த டிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் ப்ரோடக்ஷன் ரெடி ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. டிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை பிரிட்டனில் கட்டமைத்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் டெவலப்மெண்ட் செண்டர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள 9.5 கிலோவாட் மோட்டார் அதிவேக அக்செலரேஷன் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த ஆண்டே டிவோட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    புதிய டிவோட் மோட்டார்சைக்கிளில் டிஎப்டி ஸ்கிரீன், கீலெஸ் சிஸ்டம், டைப் 2 சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்படுகிறது. சார்ஜிங்கை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளை ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இதில் உள்ள ஸ்மார்ட் இண்டர்ஃபேஸ் மூலம் ஸ்பீடு மோட்களும் வழங்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    டிவோட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் லித்தியம் LFP பேட்டரி பயன்படுத்துகிறது. இத்துடன் ஆன்போர்டு சார்ஜர், சார்ஜிங் ப்ரோடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் உடன் ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெம்பரேச்சர் கண்ட்ரோல், ரிஜெனரேஷன் போன்ற அம்சங்கள் உள்ளது. 

    • யமஹா நிறுவனத்தின் புதிய FZ-X மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • 2023 யமஹா FZ-X மாடலில் புது விண்ட்ஸ்கிரீன், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது FZ-X மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது மாடலின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. இத்துடன் புது விண்ட்ஸ்கிரீன், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    இதன் முன்புறம் ஹை-மவுண்ட் ஃபெண்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர 2023 FZ-X மாடல் புது நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடல் கோல்டன் நிற அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதே போன்ற கோல்டு நிற ரிம்கள் FZS 25 போன்ற மாடல்களிலும் யமஹா ஏற்கனவே வழங்கி இருக்கிறது.

    இவற்றுடன் புதிய யமஹா 2023 FZ-X மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், இந்த பைக் 149சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும்.

    இது 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய யமஹா FZ-X மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் எல்இடி ஹெட்லைட் கொண்ட ஒற்றை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் இது ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சூப்பர் மீடியோர் 650 ஆஸ்ட்ரல் வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 48 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இண்டர்ஸ்டெல்லார் மற்றும் செலஸ்டியல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 300 மற்றும் ரூ. 3 லட்சத்து 78 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்றாவது பிரீமியம் மோட்டார்சைக்கிள் ஆகும். சூப்பர் மீடியோர் 650 மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், பெரிய டிரான்ஸ்பேரண்ட் வைசர், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஒற்றை சீட் செட்டப் வேரியண்டிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இத்துடன் பேக்ரெஸ்ட், க்ரோம் அம்சங்களை கொண்டுள்ளது.

    இந்த மாடலில் 648சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதே யூனிட் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மாடலின் முன்புறம் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரீலோடு மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. சூப்பர் மீடியோர் 650 முன்புறம் 16 இன்ச் பின்புறம் 19 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. எல்இடி இலுமினேஷன் தவிர இந்த பைக்கில் டூயல் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளது. பெரிய டயலில் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃபியூவல் லெவல் ரீடிங் உள்ளது.

    சிறிய யூனிட்-இல் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலில் மிரர்கள், டூரிங் சீட்கள், பேக்ரெஸ்ட்கள், ஹார்டு கேஸ் பேனியர்கள், என்ஜின் கார்டு மற்றும் பல்வேறு அக்சஸரீக்களை கொண்டுள்ளது.

    இந்த மாடல் ஆஸ்ட்ரல் பிளாக், ஆஸ்ட்ரல் புளூ, ஆஸ்ட்ரல் கிரீன், இண்டர்ஸ்டெல்லார் கிரே, இண்டர்ஸ்டெல்லார் கிரீன், செலஸ்டியல் ரெட் மற்றும் செலஸ்டியல் புளூ என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா அப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது டெசர்ட் எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் வினியோகத்தை துவங்கி விட்டது. ஆஃப் ரோட் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புது டூரிங் மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.

    இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஜாய் இ பைக் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • புதிய ஜாய் மிஹோஸ் வினியோகம் படிப்படியாக துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜாய் இ பைக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜாய் மிஹோஸ் என அழைக்கப்படும் புது ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வதோதராவில் உள்ள வார்டுவிசார்டு R&D குழுவினரால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், வட்ட வடிவம் கொண்ட ரியர் வியூ மிரர்கள், முன்புற இண்டிகேட்டர்கள் அப்ரானில் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வளைந்த பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ-ரிவர்சபில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

    பாதுகாப்பிற்கு சைடு ஸ்டாண்டு சென்சார், ஹைட்ராலிக் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் பேட்டரி ஸ்டேட்டஸ் ரிமோட் அக்சஸ் வசதி, ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ், ஆண்டி-தெஃப்ட் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஜாய் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 74V40Ah லி-அயன் சார்ந்த பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. நான்கு மணி நேரத்தில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஜாய் மிஹோஸ் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மெட்டாலிக் புளூ, சாலிட் பிளாக் கிளாசி, சாலிட் எல்லோ கிளாசி மற்றும் பியல் வைட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் குஜராத் மாநிலத்தின் வதோதரா உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. வினியோகம் நாடு முழுக்க படிப்படியாக துவங்க இருக்கிறது.

    • எல்எம்எல் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தப்பட்டது.
    • ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

    எல்எம்எல் (லொஹியா மெஷினரி லிமிடெட்) நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. எல்எம்எல் ஸ்டார் மாடல் அதிநவீன டிசைன் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2022 வாக்கில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எதிர்கால டிசைன், முன்புறம் ஃபுளோடிங் இன்சர்டில் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கூட்டரை முதல் முறையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியதோடு எல்எம்எல் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்களை அறிவித்தது. அந்த வகையில், இந்த ஸ்கூட்டரில் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், இண்டராக்டிவ் ஸ்கிரீன், போடோசென்சிடிவ் ஹெட்லைட் உள்ளது.

    இவைதவிர எல்எம்எல் ஸ்டார் மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் ஃபேர்க் முன்புற சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பே எல்எம்எல் நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்கி விட்டது. குறிப்பாக இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் எதையும் எல்எம்எல் இதுவரை வசூலிக்கவில்லை. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

    ×