search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய புது கேடிஎம் 390 டியூக்!
    X

    இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய புது கேடிஎம் 390 டியூக்!

    • கேடிஎம் நிறுவனத்தின் புது டியூக் 390 மாடல் ஏராளமான அம்சங்களுடன் உருவாகி வருகிறது.
    • முற்றிலும் புது பாடிவொர்க், வீல்கள், பிரேக், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை இந்த மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும்.

    கேடிஎம் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டியூக் 390 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது ஸ்பை படங்களில் 390 டியூக் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடலில் என்ஜின் மாற்றப்பட்டு இருக்கிறது. புது என்ஜின் கவர், ரி-ரூட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் பெரிய ரேடியேட்டர், டுவின்-ஃபேன் செட்டப் உள்ளது. இதன் காரணமாக புது பைக் தற்போதைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர கூடுதல் ஃபேன் தற்போதைய என்ஜினை அதிகளவு குளிர்ச்சிப்படுத்தவும் வழங்கப்படலாம். டுவின்-ஃபேன் செட்டப் கொண்ட 390 அட்வென்ச்சர் மாடல் அதிகளவு வெப்பத்தை குறைப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

    புது பைக்கின் ஃபிரேமை சற்றி பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஃபிரேம் தோற்றத்தில் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இது ரிவைஸ்டு ஸ்விங்-ஆர்ம், சற்றே வித்தியாசமான வடிவம் மற்றும் டிசைன் கொண்டிருக்கிறது. புது டியூக் மாடலில் சமீபத்திய RC390 மாடலில் உள்ளதை போன்ற வீல் மற்றும் பிரேக்குகள் வழங்கப்படலாம். சஸ்பென்ஷனிற்கு இந்த மாடலில் ஆஃப்செட் ரியர் மோனோஷாக் வழங்கப்படுகிறது.

    மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்றாக முற்றிலும் புது பாடி வொர்க் உள்ளது. இந்த மாடலில் உள்ள அனைத்து பேனல்களும் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புது டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தற்போதைய மாடலில் இருப்பதை விட அதிக கூர்மையாகவும், நீளமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் புதிய ஹெட்லைட், சீட், மிரர் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை 390 டியூக் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே, டூயல் சேனல் ஏபிஎஸ், பை - டைரெக்ஷனல் குயிக்ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதே அம்சங்கள் புது மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவற்றுடன் IMU டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடல் 2023 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை தற்போதைய மாடலை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

    Photo Courtesy: Instagram | adi60666

    Next Story
    ×