search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஜனவரி முதல் வாரத்தில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் ஏத்தர்?
    X

    ஜனவரி முதல் வாரத்தில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் ஏத்தர்?

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஏத்தர் பல்வேறு விஷயங்களில் விலை குறைப்பு செய்திருப்பதாக தெரிகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் புது வாகனத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் 450X மாடலின் குறைந்த விலை வெர்ஷனாகவோ அல்லது முற்றிலும் புது வெர்ஷனாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் 450 பிளஸ் மற்றும் 450X என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களும் சற்றே அதிக விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏத்தர் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் மிக எளிய உகபரணங்கள், அதாவது டியுபுலர் ஸ்டீல் பயன்படுத்தப்படலாம்.

    சமீபத்தில் தான் ஏத்தர் நிறுவனம் புது வாகனத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. அதன்படி புது வாகனம் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளித்தது. சவுகரிய அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபிளாட் சீட் வழங்கப்படலாம். முந்தைய 450X மாடலில் ஸ்டெப்டு யூனிட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் அறிமுகம் செய்யும் வாகனம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    அந்த வகையில், குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது முற்றிலும் புதிய ஸ்கூட்டர் தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 பிளஸ் அல்லது 450X மாடல்களின் புது நிறங்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இவை தவிர 450X சீரிஸ் 1 போன்றே புதிதாக லிமிடெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    Photo Courtesy: Autocarindia

    Next Story
    ×