search icon
என் மலர்tooltip icon

    பைக்

    புது நிறங்கள், கூடுதல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
    X

    புது நிறங்கள், கூடுதல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
    • புது அப்டேட் படி ஏத்தர் ஸ்கூட்டர்கள் புது நிறங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கிடைக்கும்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பெங்களூரு நகரில் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏத்தர் கம்யுனிட்டி கடந்த முறையை விட இந்த ஆண்டு எந்த அளவுக்கு விசேஷமாக மாறி இருக்கிறது என்பதை தெரிவித்தது. கடந்த கம்யுனிட்டி நிகழ்வில் 6 ஆயிரம் பயனர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த முறை 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதுவரை ஏத்தர் வாகனங்கள் 500 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் ஒரு பில்லியன் கிலோமீட்டர்களை கடக்க முடியும் என ஏத்தர் எனர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதவிர ஏத்தர்ஸ்டேக் 5.0 பெயரில் மென்பொருள் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பயனர்களுக்கு புது யூசர் இண்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    புது யூசர் இண்டர்ஃபேஸ் சிறப்பான ஸ்வைப் மற்றும் டச் ரெகக்னிஷன் கொண்டுள்ளது. இது முன்பை விட அதிக சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதுதவிர ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற ஐகான்கள் மொபைல் போனில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. கூகுள் மேப்ஸ் சேவை கொண்ட உலகின் முதல் ஸ்கூட்டர் ஏத்தர் 450X ஆகும். தற்போது வெக்டார் மேப் சேவை வழங்கப்படுவதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் பயனர்களுக்கு நேரலை போக்குவரத்து விவரங்கள் வழங்கப்படுகிறது. இது மொபைலில் உள்ள கூகுள் மேப்ஸ் போன்றே செயல்படும். இவைதவிர ஆட்டோஹோல்டு எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இது வழக்கமான ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும் மெக்கானிக்கல் பிரேக் லாக் வசதியை வழங்கும். இந்த அம்சம் கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.

    இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், கிரால் கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட ரிஜென் போன்ற வசதிகளை வரும் மாதங்களில் வழங்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு வருகிறது. இதுவரை 900 ஃபாஸ்ட் சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை ஏத்தர் இன்ஸ்டால் செய்து இருக்கிறது. மேலும் மார்ச் 2023-க்குள் நாடு முழுக்க 1300 சார்ஜிங் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3.3 கிலோவாட் சர்வதேச ஏசி சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார்களையும் சார்ஜ் செய்யும்.

    450X மாடலுக்காக புது சீட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய சீட்-ஐ விட அதிக சவுகரியமாக இருக்கிறது. கம்யுனிட்டி டே நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் சீட் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதுதவிர ஏத்தர் 450X மாடலுக்கு- லூனார் கிரே மற்றும் ரெட் அக்செண்ட்கள், காஸ்மிக் பிளாக் மற்றும் அக்வா புளூ அக்செண்ட்கள், ட்ரூ ரெட் மற்றும் வைட் அக்செண்ட்கள், சால்ட் கிரீன் மற்றும் ஆர்ஞ்சு அக்செண்ட்கள் என நான்கு புது நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×