என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
எலான் மஸ்க்கின் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
விர்ஜின் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எமிராட்டி மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலையம், 'இந்த தசாப்தம் முடிவதற்குள் உலகின் பல்வேறு நாடுகளில் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை பயன்பாட்டுக்கு வரும்,' என தெரிவித்தார்.

மேலும், 'இந்த போக்குவரத்து முறை முதலில் இந்தியா அல்லது சவுதி அரேபியாவில் பயன்பாட்டுக்கு வரும். பிரபலமாக இருக்கும் தூரமான இடங்களுக்கு விமானத்தின் வேகத்தில் பயணிக்க லாரிக்கு கொடுக்கும் விலையை கொடுத்தாலே போதும்.' என அவர் மேலும் தெரிவித்தார்.
இ-பைக்-கோ நிறுவனம் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
ஐ.ஓ.டி. எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் சார்ந்து இயங்கும் சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளை துவங்க இ-பைக்-கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சார்ஜிங் மையங்கள் இ-பைக்-கோ சார்ஜ் எனும் பெயரில் இயங்க இருக்கின்றன.
இ-பைக்-கோ நிறுவனம் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிளாட்பார்ம் ஆகும். குறைந்த விலையில் ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்துள்ளது. இவற்றை பயனர்கள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயன்படுத்தலாம். வைபை வசதி இருப்பதால், சார்ஜிங் விவரங்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

புதிய ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை ஒவ்வொரு 500 மீட்டர்களில் கட்டமைக்க இ-பைக்-கோ திட்டமிட்டுள்ளது. மேலும் வாகனத்தில் முழு சார்ஜ் ஆனதும், சார்ஜிங் தானாக நிறுத்தப்பட்டு விடும். சார்ஜிங் செய்வதற்கான கட்டண முறைகளிலும் இ-பைக்-கோ ரீசார்ஜ் திட்டங்களை வழங்க இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆடம்பர வசதிகளுடன், அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டது. இதனை ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி டோஸ்டென் முல்லர் அட்வோஸ் லின்க்டு-இன் தளத்தில் பதிவிட்டார்.
115 ஆண்டு பழைமை மிக்க நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது ஸ்பெக்டர் மாடல் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்குகிறது.

'துணிவு மிக்க புதிய எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கையுடன் கால் பதிக்கிறோம். எலெக்ட்ரிக் டிரைவ் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை விட எங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். இது மிகவும் அமைதியாக, சீராக, இழுவிசையை உடனடியாக வெளிப்படுத்தி அதிக ஆற்றலை உருவாக்கும்,' என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
இந்த காலத்து வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனத்தில் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கொண்டிருக்கும், என அவர் மேலும் தெரிவித்தார்.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் மாடல் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
எம்ஜி ஆஸ்டர் மாடல் இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அந்த வகையில் எம்ஜி ஆஸ்டர் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய எம்ஜி ஆஸ்டர் மாடல்- ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் எஸ்.டி.டி., ஸ்மார்ட், ஷார்ப் எஸ்.டி.டி., ஷார்ப், சேவி மற்றும் சேவி ரெட் என எட்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் முதல் ஆறு வேரியண்ட்களில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

எம்ஜி ஆஸ்டர் லெவல் 2 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் கொண்ட எம்ஜி நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். இதில் உள்ள ஏ.டி.ஏ.எஸ். சிஸ்டம் ஆட்டோமேடிக் எமர்ஜன்சி பிரேக்கிங், லேண் கீப் அசிஸ்ட், ரியர் டிரைவ் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராபிக் அலெர்ட் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 20 மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.
அல்ட்ரோஸ் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இது பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் மாடல் குளோபல் என்கேப் பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது.

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவதற்கான முதற்கட்ட பணிகளை யமஹா துவங்கி இருக்கிறது.
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான யமஹா இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு, பேட்டரி உற்பத்தி, விலை போன்ற விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் வெற்றி பயனர்கள் இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே கிடைக்கும் என யமஹா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக் கொள்ள போதுமான சார்ஜிங் கட்டமைப்பு, சீரான பேட்டரி உற்பத்தி போன்ற வசதிகள் இருக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளை யமஹா மோட்டார் இந்தியா வரவேற்பதாக அந்நிறுவன தலைவர் மோடோபுமி ஷித்தாரா தெரிவித்தார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான இடைவெளியை ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் பூர்த்தி செய்ய திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சர்வீஸ் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்தது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், விற்பனைக்கு பிந்தைய சேவைகளை ஓலா எலெக்ட்ரிக் எப்படி செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓலா எஸ்1 சீரிஸ் மாடல்களின் விற்பனை, ஆன்லைன் முன்பதிவு மற்றும் டெலிவரி பற்றிய விவரங்களுடன் வழக்கமான சர்வீஸ் மற்றும் இதர சேவைகள் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'ஓலா எஸ்1 / ஓலா எஸ்1 ப்ரோ மாடல்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் ஸ்மார்ட் வாகனங்கள் ஆகும். இவற்றை வழக்கமான வாகனங்களை போன்று 3-6 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்கூட்டரில் எதையேனும் மாற்ற வேண்டுமெனில் ஸ்கூட்டரே உங்களுக்கு தகவல் கொடுக்கும்.'
'பின் ஓலா எலெக்ட்ரிக் செயலியில் அதனை தெரிவித்தால், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே சரி செய்யப்படும். ஒருவேளை வீட்டில் இருந்தபடி சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், வாகனம் கொண்டு செல்லப்பட்டு கோளாறு சரியானதும் வீட்டிற்கே கொண்டுவரப்படும்,' என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படத்துடன் நிற்கும் படத்தை ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் வெளியிட்டார். புகைப்படத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது போன்றே காட்சியளித்தது.

எனினும், இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. தனது எலெக்ட்ரிக் பிரிவுக்கு ஹீரோ மோட்டோகார்ப் புதிய பெயரை சூட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் 2022 வாக்கில் அறிமுகமாகும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றி அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பதிவிட்டுள்ளார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
'இது வெறும் துவக்கம் தான், எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் பிரிவில் களமிறங்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த இருக்கிறோம்,' என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட் ரைடு அக்டோபர் மாதத்திலும் ஆன்லைன் விற்பனை தளம் நவம்பர் 1 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது. தற்போது இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் மீண்டும் கார் உற்பத்தி துவங்கி இருக்கிறது.
போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இகோஸ்போர்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இகோஸ்போர்ட் மாடல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் போர்டு நிறுவனம் சுமார் 30 ஆயிரம் இகோஸ்போர்ட் மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சென்னை ஆலை பணியாளர்கள் யூனியனை சேர்ந்தவர், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

அப்போது, 'சென்னை ஆலையில் திட்டமிட்டப்படி உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் செயல்படும் ஆலைகளை மூட முடிவு செய்திருக்கும் மூத்த அதிகாரிகளை சந்திக்க யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,' என அவர் தெரிவித்தார்.
டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மான்ஸ்டர் சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி, இந்தியாவில் தனது மான்ஸ்டர் மற்றும் மான்ஸ்டர் பிளஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மான்ஸ்டர் மற்றும் மான்ஸ்டர் பிளஸ் மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
இந்தியாவில் டுகாட்டி மான்ஸ்டர் மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய மான்ஸ்டர் சீரிஸ் டிஜிட்டல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய சூப்பர்பைக் மாடல்களின் வினியோகம் விரைவில் துவங்குகிறது.

டுகாட்டி மான்ஸடர் மாடல்களில் 937சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்டிரெட்டா 11 டிகிரி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், டுகாட்டி குயிக் ஷிப்ட் அப் / டவுன் குவிக் ஷிப்டர் வழங்கப்படுகிறது.
வீட்டில் உள்ள 48 வோல்ட் சார்ஜர் கொண்டு எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு மாடலை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு பைக் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியதாக தனியார் பள்ளி மாணவரான ராஜன் தெரிவித்தார். பெட்ரோல் திறன் கொண்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் திறன் வழங்க ரூ. 45 ஆயிரம் செலவானது என அவர் தெரிவித்தார்.

'பள்ளி தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால், அருகாமையில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் மோட்டார்சைக்கிளின் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொண்டேன். பின் பெற்றோரிடம் கேட்டு, பழைய மோட்டார்சைக்கிள் மற்றும் இதர பொருட்களை வாங்கினேன். இதற்கு மொத்தத்தில் ரூ. 45 ஆயிரம் செலவானது.'
'ஒரு மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிளுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். பின் மூன்று நாட்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்தேன்,' என ராஜன் தெரிவித்தார். இந்த எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டை வீட்டில் உள்ள 48 வோல்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்துவிட முடியும்.






