என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைகுன் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைகுன் மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. டைகுன் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில், டைகுன் மாடல் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
இந்த தகவலை வோக்ஸ்வேகன் குழும நிர்வாக குழு உறுப்பினர் கிளாஸ் செல்மர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் டைகுன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் எம்.கியூ.பி.-ஏ.ஒ.-ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. டைகுன் மாடல் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய பன்ச் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி இருக்கின்றனர்.
புதிய டாடா பன்ச் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா பன்ச் மாடலுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இதுவரை துவங்கவில்லை. வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

டாடா பன்ச் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இவற்றில் சில அம்சங்கள் இந்த பிரிவு மாடல்களில் இதுவரை வழங்கப்படாதவைகளாக இருக்கும் என தெரிகிறது. புதிய டாடா கார் நவம்பர் 4 ஆம் தேதிக்கு முன் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் நாள் விற்பனை விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை நேற்று துவங்கியது. விற்பனையின் முதல் நாளில் மட்டும் ரூ. 600 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
விற்பனை துவங்கியது முதல் ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். விரைவில் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்து போகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஓலா எஸ்1 மாடலின் விலை ரூ. 1 லட்சம் என்றும் எஸ்1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. மேலும் இவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை துவங்கியது. முன்னதாக இம்மாத துவக்கத்திலேயே விற்பனை துவங்க இருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 15) இதன் விற்பனை துவங்கி இருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை அதிகாலை 5 மணிக்கு துவங்கியது. இம்முறை எவ்வித தொழில்நுட்ப இடையூறும் ஏற்படவில்லை என ஸ்கூட்டரை வாங்கியவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் வாங்கியதும், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுகிறது.

கடன் மற்றும் மாத தவணை முறை திட்டங்களை வழங்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. முன்பதிவு மற்றும் முன்பணம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையில் இருந்து வினியோகம் செய்ய வெளியேற்றப்படும் முன் வரை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம்.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. சிறப்பு சலுகை சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா போன்ற மாடல்களுக்கு பொருந்தும். பண்டிகை காலக்கட்டத்தில் வாகன விற்பனையை அதிகப்படுத்த ஹூண்டாய் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
சிறப்பு சலுகைகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் போனஸ் மற்றும் எக்சேன்ஜ் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும்.
சலுகை விவரங்கள்
ஹூண்டாய் சாண்ட்ரோ ரூ. 40 ஆயிரம்
தள்ளுபடி - ரூ. 25 ஆயிரம்
எக்சேன்ஜ் பலன் - ரூ. 10 ஆயிரம்
கார்ப்பரேட் போனஸ் - ரூ. 5 ஆயிரம்

ஹூண்டாய் ஆரா ரூ. 50 ஆயிரம்
தள்ளுபடி - ரூ. 35 ஆயிரம்
எக்சேன்ஜ் பலன் - ரூ. 10 ஆயிரம்
கார்ப்பரேட் போனஸ் - ரூ. 5 ஆயிரம்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ரூ. 50 ஆயிரம்
தள்ளுபடி - ரூ. 35 ஆயிரம்
எக்சேன்ஜ் பலன் - ரூ. 10 ஆயிரம்
கார்ப்பரேட் போனஸ் - ரூ. 5 ஆயிரம்
இவை கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ வேரியண்டிற்கு மட்டும் பொருந்தும்
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் இந்திய சந்தையில் 2014 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் செடான் மாடலான சியாஸ் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் இதுவரை 3 லட்சம் சியாஸ் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் செடான் மாடல்கள் விற்பனை சரிந்து வரும் நிலையில், அதிவேகமாக இத்தகைய மைல்கல் எட்டிய கார் என்ற பெருமையை சியாஸ் பெற்று இருக்கிறது. பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் சியாஸ் மாடலின் விலை ரூ. 8.60 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.59 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'பிராண்டின் மீது மக்கள் வைத்து இருக்கும் வலுவான நம்பிக்கையை எடுத்துக் காட்டும் வகையில் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை அமைந்துள்ளது,' என மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை முழுமையாக நிறுத்துகிறது.
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இரண்டு போர்டு உற்பத்தி ஆலைகள் மூடப்பட இருக்கின்றன. போர்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.
இந்தியாவில் வாகன உற்பத்திக்காக போர்டு நிறுவனம் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டம் காரணமாக இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், வாகன இயக்கங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என்றும் போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்டு நிறுவனத்துக்கு நஷ்டம் மட்டும் ரூ.200 கோடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தின. அந்த வரிசையில் தற்போது போர்டு நிறுவனமும் இணைந்துள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் விற்பனையை அதிகப்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் இந்தியாவில் சந்தா முறையில் கார் விற்பனையை அறிவித்து இருக்கிறது. புதிய சந்தா முறையை செயல்படுத்த வோக்ஸ்வேகன் நிறுவனம் ஆரிக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.
புதிய சந்தா முறையின் கீழ் வாடிக்கையாளர்கள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ, டி ராக் அல்லது வென்டோ போன்ற மாடல்களை வாங்காமல் சொந்தம் கொண்டாட முடியும். படிப்படியாக இந்தியா முழுக்க சந்தா முறையை கொண்டுவர வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள சுமார் 30 விற்பனை மையங்களில் சந்தா முறையை வோக்ஸ்வேகன் கொண்டு வருகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் மற்றும் லாயல்டி பலன் வடிவில் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் க்விட் 1 லிட்டர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, 0.8 லிட்டர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. ரெனால்ட் டிரைபர் 2021 முந்தைய மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

2021 டிரைபர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 2021 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 30,585 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடங்கும்.
ஜூலை 2021 மாதத்துடன் ஒப்பிடும் போது மஹிந்திராவின் மொத்த விற்பனை 28.8 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. எனினும், முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது வாகன விற்பனை 17 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

உள்நாட்டில் மஹிந்திரா நிறுவனம் 15,786 யுடிலிட்டி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கார் மற்றும் வேன்கள் பிரிவில் 187 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்கள் மொத்த எண்ணிக்கை 3,180 ஆகும்.
யமஹா நிறுவனத்தின் எப்.இசட். எக்ஸ் கிராஸ் ஓவர் மோட்டார்சைக்கிள் 150 சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 18 ஆம் தேதி யமஹா தனது எப்.இசட். எக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. யமஹாவின் எப்.இசட். சீரிசை தழுவி புதிய எப்.இசட். எக்ஸ் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இது யமஹா நிறுவனத்தின் ரெட்ரோ தோற்றம் கொண்ட ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். புதிய எப்.இசட். எக்ஸ் மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். இந்த மாடல் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கிறது என விரிவாக பார்ப்போம்.

யமஹா எப்.இசட். எக்ஸ் அம்சங்கள்:
பவர் டிரெயின் - 149சிசி, சிங்கில் சிலிண்டர்
திறன் - 7250 ஆர்.பி.எம்.-இல் 12 பி.ஹெச்.பி.
இழுவிசை - 5500 ஆர்.பி.எம்-இல் 13.3 நியூட்டன் மீட்டர்
டிரான்ஸ்மிஷன் - 5 ஸ்பீடு
சேசிஸ் - டைமண்ட்
டையர்கள் முன்புறம் / பின்புறம் - 100/80 R17 / 140/60 R17
வீல்பேஸ் - 1330 மில்லிமீட்டர்
கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 165 மில்லிமீட்டர்
சீட் உயரம் - 810 மில்லிமீட்டர்
எடை - 139 கிலோ
பியூவல் டேன்க் கொள்ளளவு - 10 லிட்டர்
டிசைன்:
தோற்றத்தில் இந்த மோட்டார்சைக்கிள் எப்.இசட். மாடலை விட மிகவும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. முன்புறம் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள். இந்த பைக்கிற்கு ரெட்ரோ தோற்றத்தை கொடுக்கிறது. இதன் பியூவல் டேன்க் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் கீழ்புறம் காஸ்மெடிக் அழகை கூட்ட ரேடியேட்டர் ஷிரவுட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புற பூட்-பெக் சற்றே உயரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இதன் பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப், மிக எளிமையான கிராப் ரெயில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் புதிய எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் செயலியில் மோட்டார்சைக்கிளின் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போனில் யமஹாவின் வை கனெக்ட் செயலி இன்ஸ்டால் செய்து, பார்க்கிங் லொகோட்டர், சர்வீஸ், ஆயில் மாற்றுவதற்கான நினைவூட்டிகள், என்ஜின் ஆர்.பி.எம். போன்ற விவரங்களை பார்க்கலாம். இதன் எல்.சி.டி. டிஸ்ப்ளே பகல் மற்றும் இரவு நேரங்களில் எவ்வித சிரமமும் இன்றி பைக்கின் வேகம், மற்றும் இதர விவரங்களை காண்பிக்கிறது.
இத்துடன் எப்.இசட். எக்ஸ் மாடலில் 12 வோல்ட் திறன் கொண்ட பவர் அவுட்லெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயணங்களின் போது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். யமஹாவின் புதிய எப்.இசட். எக்ஸ் மேட் காப்பர், மெட்டாலிக் புளூ மற்றும் மேட் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

செயல்திறன்:
யமஹா எப்.இசட். எக்ஸ் மாடலில் 149சிசி, ஏர் கூல்டு, 2 வால்வு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 150சிசி என்ஜின் பிரிவில் இது குறைந்த செயல்திறன் என்ற போதும், மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை எப்.இசட். எக்ஸ் 4 நொடிகளில் எட்டிவிடுகிறது.
துவக்கத்தில் வேகம் சிறப்பாக இருந்தாலும், எப்.இசட். எக்ஸ் திறன், எப்.இசட். மாடலுடன் ஒப்பிடும் போது குறைவு தான். நகர்புற பயன்பாட்டிற்கு எப்.இசட். எக்ஸ் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. வேகத்தை பொறுத்தவரை மணிக்கு 85 முதல் 90 கிலோமீட்டர் வரை சீராக செல்கிறது. இந்த மாடல் திறன், பயணங்களை அனுபவிக்க செய்கிறது.
இதன் எக்சாஸ்ட் சவுண்ட் வழக்கமான எப்.இசட். மாடலில் இருப்பதைவிட வித்தியாசமாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, என்ஜின் இயக்கம் சமமாக இருக்கிறது. மொத்தத்தில் யமஹா எப்.இசட். எக்ஸ் நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு ஏற்றதாக இருக்கிறது.

ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:
யமஹா தனது எப்.இசட். எக்ஸ் மாடலில் சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைத்து இருக்கிறது. எப்.இசட். எக்ஸ் மாடலில் உயரமான ஹேண்டில்பார், முன்புற பூட் பெக், அகலமான இருக்கை பயணத்தின் இனிமையை உணர செய்கிறது. இதன் சீட் உயரம் தரையில் இருந்து 810 மில்லிமீட்டர் அளவில் உள்ளது. இது எப்.இசட். மாடலை விட 4 கிலோ அதிக எடை கொண்டுள்ளது. புதிய எப்.இசட். எக்ஸ் மொத்த எடை 139 கிலோ ஆகும்.
இதில் உள்ள பியூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட்கள், முன்புற மட்-கார்டு, ஹெட்லேம்ப் பிராகெட், மெல்லிய பேஷ் கார்டு உள்ளிட்டவை மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எம்.ஆர்.எப். டூயல்-பர்பஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை சாலைகளில் சிறப்பாகவே செயல்படுகின்றன. எனினும், இவற்றுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
யமஹா எப்.இசட். எக்ஸ் மாடலில் பிரேக்கிங் சிறப்பாகவே இருக்கிறது. பின்புறம் ஸ்டாண்டர்டு டிஸ்க், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிராம்ப்ளர் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் எப்.இசட். எக்ஸ் ஆப்-ரோடு அனுபவம் எப்.இசட். மாடலை போன்றே இருக்கிறது.

புதிய எப்.இசட். எக்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் எப்.இசட். மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் க்ரிப் கொண்ட டையர்கள் சகதி நிறைந்த சாலைகளில் சிறந்த கண்ட்ரோல் கொடுக்கிறது. யமஹா எப்.இசட். எக்ஸ் லிட்டருக்கு 47 முதல் 50 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குவது, இதனை தேர்வு செய்ய மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய யமஹா எப்.இசட். எக்ஸ்- வாடிக்கையாளர்களுக்கு என்ட்ரி லெவல் ரெட்ரோ ஸ்கிராம்ப்ளர் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கிறது. எனினும், இந்த மாடலின் பின்புற தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மையங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே நாளில் 70 புதிய விற்பனை மையங்களை திறந்துள்ளது. புது விற்பனை மையங்கள் நாடு முழுக்க 53 நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலக்கட்டத்திற்கு முன், டாடா மோட்டார்ஸ் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கம் முதலே சபாரி எஸ்.யு.வி. பின் டியாகோ என்.எக்ஸ்.ஜி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது விற்பனை மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புது விற்பனை மையங்கள் மூலம் கர்நாடகா, தமிழ் நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் கூடுதல் கவனம் செலுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.






