என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞஅசாலை துறை மந்திரி நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடை ஒன்றை கட்டமைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். மேலும் டெஸ்லா நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
"எலான் மஸ்க் கார்களை இங்கு உற்பத்தி செய்ய தயாராக இருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது... இந்தியாவுக்கு வந்து, உற்பத்தியை தொடங்குங்கள், இந்தியா மிகப் பெரும் சந்தை இங்கிருந்து அவர்கள் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய நினைத்தால், இந்தியாவுக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்காது," என நிதின் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் இதனை சாத்தியப்படுத்த இறக்குமதி வரிகள் அடிப்படையில் அதிக செலவாகும் என்பதால் டெஸ்லாவின் இந்திய வருகை தாமதமாகிக் கொண்டே வருகிறது.
தற்போது இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான லேண்டிங் கட்டணம் (காரின் விலை மற்றும் டெலிவரி கட்டணங்கள்) சேர்த்து 40 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30.6 லட்சம் வரை செலவாகும்.
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து, ஸ்கூட்டருக்கு தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வந்த நபர் அதனை தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தனது ஓலா இ ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்தி வந்ததை அடுத்து இவ்வாறு செய்ததாக அந்த நபர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ஸ்கூட்டர் தானாக தீப்பிடித்து எரிவது மிகப் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், வாடிக்கையாளரே ஸ்கூட்டருக்கு தீ வைத்த சம்பவம் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர் ஆத்திரத்தில் தனது ஸ்கூட்டர் மீது பெட்ரோலை ஊற்றி, அதற்கு தீ வைத்து எரிக்கும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஓலா ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த டாக்டர் பிரித்விராஜ் அதன் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக இருந்துள்ளதை கண்டு மன வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரிக்கு எடுத்த நிலையில், பல்வேறு சமயங்களில் இந்த ஸ்கூட்டர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. எனினும், ஓலா சப்போர்ட் ஸ்கூட்டரை ஆய்வு செய்து, அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே பதில் அளித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்த பிரித்விராஜ் அதில் வெறும் 44 கிலோமீட்டர் ஓடியதை அடுத்து ஸ்கூட்டரில் சார்ஜ் இன்றி ஆஃப் ஆகி விட்டது. முன்னதாக மற்றொரு வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை கழுதையை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நபர் ஒருவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலம் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய சில நாட்களிலேயே ஷட் டவுன் ஆனதை அடுத்து, அந்நிறுவனம் கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை என கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் வாடிக்கையாளர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் கீட் என்ற நபர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்து சென்றுள்ளார். மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்று கூறும் பதாகைகளையும் வைத்திருந்தார். ஸ்கூட்டரை கழுதை இழுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்கூட்டர் வாங்கிய முதல் ஆறு நாட்களுக்கு மட்டும் அது சீராக வேலை செய்தது என அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஸ்கூட்டர் பற்றி புகார் அளித்ததற்கு ஓலா தரப்பில் யாரும் வந்து அதனை சரி செய்து கொடுக்கவில்லை என இவர் குற்றம்சாட்டி இருக்கிறார். கஸ்டமர் சேவை அதிகாரிக்கு பல முறை தொடர்பு கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதை அடுத்து விரக்தியில் இந்த நபர் இவ்வாறு செய்தி இருக்கிறார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்றும் ஓலா இருசக்கர வாகனங்களை வாங்க வேண்டாம் என கூறும் பதாகைகளை அவர் தனது ஸ்கூட்டர் மற்றும் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு ஊர்வலம் வந்தார்.
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கிரெட்டா எஸ்.யு.வி. மாடலில் விபத்தின் போது ஏர்பேக் வேலை செய்யாததை அடுத்து இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
ஷைலேந்தர் பட்நாகர் என்ற வாடிக்கையாளர் ஆகஸ்ட் 21, 2015 வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்டை வாங்கி இருக்கிறார். 2017 நவம்பர் 16 ஆம் தேதி ஷைலேந்தரின் கிரெட்டா மாடல் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்து டெல்லி மற்றும் பாணிபெட் நெடுஞ்சாலையில் நடைபெற்றது. விபத்தில் கார் முழுக்க பலத்த சேதங்களை எதிர்கொண்டது.

இதில் காரில் பயணம் செய்த ஓட்டுனர் தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் மிக கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார். காரில் வைக்கப்பட்டு இருந்த ஏர்பேக் வேலை செய்யாததை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் மீது பட்நாகர் வழக்கு தொடுத்து இருந்தார். இவர் இந்த பிரச்சினையை டெல்லி மாநில நுகர்வோர் கமிஷனில் தெரிவித்து, தென் கொரிய கார் உற்பத்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
டெல்லி மாநில நுகர்வோர் இழப்பீடு கமிஷன் பட்நாகருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதோடு, இவரின் மருத்துவ செலவீனங்களுக்காக ரூ. 2 லட்சம் இழப்பீடு, வருவாய் இழப்புக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. மேலும் மனுதாரரின் வாகனம் ரி-பிளேஸ் செய்யப்படவில்லை என்பதால், கிரெட்டா மாடல் விபத்தில் சிக்கிய நாளில் இருந்து ஆண்டுக்கு ஏழு சதவீதம் வட்டி வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து ஹூண்டாய் நிறுவனம் தேசிய நுகர்வோர் கமிஷனில் மேல்முறையீடு செய்தது. அங்கும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. எனினும், உச்ச நீதிமன்றத்திலும் ஹூண்டாய் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் தான் விபத்தில் சிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் தான் காரணம் என அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த விவகாரத்தை பல்விந்தர் சிங் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். டுவிட்டர் பதிவுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. விபத்து ஏற்பட சரியாக முப்பது நிமிடங்கள் முன் வரை ஸ்கூட்டரின் செயல்பாடுகளை ஓலா பரிசோதனை செய்து இருக்கிறது.
அதன்படி பயனர் ஓலா S1 ப்ரோ மாடலில் பல முறை அதிவேகமாக சென்று இருக்கிறார். 30 நிமிட இடைவெளியில் மட்டும் இந்த இ ஸ்கூட்டர் சுமார் ஐந்து முறை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. அதன்படி பயனர் அதிவேகமாக சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கைக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன.
இந்த நிலையில், தான் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதோடு பிழை இருக்கும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை உடனடியாக ரி-கால் செய்து அவற்றை சரி செய்யவும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
மத்திய அரசு எச்சரிக்கைக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் பதில் அளித்துள்ளார். அதன்படி, "எலெக்ட்ரிக் அல்லது கசோலின் என எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பிரச்சினை ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயம் தான். பிரச்சினை எதுவும் இல்லை என நான் கூற மாட்டேன், பெரும்பாலான பிரச்சினைகள் மென்பொருள் சார்ந்தது என்பதால் எங்களால் அதனை மிகவும் சிறப்பாக சரி செய்ய முடியும்." என அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1441 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ரி-கால் செய்வதாக அறிவித்து இருந்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த நடவடிக்கையை அதரடியாக எடுத்து உள்ளது. "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களின் மீது முழுமையான ஆய்வு செய்து, உதிரி பாகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். இதன் காரணமாக 1441 வாகனங்களை ரி-கால் செய்கிறோம்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
புது விலை உயர்வின் படி டாடா நிறுவன கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன மாடல்கள் விலை நேற்று (ஏப்ரல் 23) அமலுக்கு வந்தது. மற்ற நிறுவனங்களை போன்றே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கான காரணமாக தெரிவித்து இருக்கிறது. புது விலை உயர்வின் படி டாடா நிறுவன கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலான டாடா டியாகோ விலை ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
காம்பேக்ஸ் எஸ்.யு.வலி. மாடலான டாடா பன்ச் விலை ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
டாடா டிகோர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 44 ஆயிரம் என மாறி இருக்கிறது. டாடா டிகோர் EV மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிரீமியம் ஹேச்பேக் கார் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சம் என மாறி இருக்கிறது. டாடா நெக்சான் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 73 ஆயிரம் என அதிகரித்துள்ளது. டாடா நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் என மாறி இருக்கிறது.
டாடா ஹேரியர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 52 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 81 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 02 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
இந்த விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிரடி திட்டம் தீட்டி இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்தும் நோக்கிலும், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரூ. 200 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
இந்த நிதியாண்டுக்குள், ரூ. 200 கோடி முதலீட்டில் நாடு முழுக்க 100 சார்ஜிங் மையங்களில் சுமார் 2 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2023 ஆண்டிற்குள் நாட்டின் மிக முக்கிய நெடுஞ்சாலைகளில் 2 ஆயிரம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்து பெட்ரோல் பங்க்களில் அமைத்தது. 900 கிலோமீட்டர்கள் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அமைந்து இருக்கும் பெட்ரோல் பங்க்களில் பாரத் பெட்ரோலியம் சார்பில் CCS-2 DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாடு முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளில் சீரான இடைவெளியில் CCS-2 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும்.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஒகினவா, பியூர் EV போன்ற நிறுவன மாடல்களும் வெடித்து சிதறின. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் பட்சத்தில் கடும் அபராதங்களை விதிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இதே சமயம் நிறுவனங்கள், பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்களை விரைந்து ரீ-கால் செய்து அவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார். நாட்டின் ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பும் அரசாங்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார்.

"கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகன விபத்து சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏதேனும் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் அலட்சியம் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக ரீ-கால் செய்யப்பட உத்தரவிடப்படும்," என நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
சமீப காலங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுதியது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஒகினவா, பியூர் EV போன்ற நிறுவன மாடல்களும் வெடித்து சிதறின. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் இ ஸ்கூட்டர் வெடித்து சிதறியதை அடுத்து பியூர் EV நிறுவனம் தனது வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
ஐதராபாத் நகரை சேர்ந்த பியூர் EV நிறுவனம் தனது இ-டிரான்ஸ் பிளஸ் மற்றும் இ-புளூடோ 7ஜி ஸ்கூட்டர் மாடல்களில் 2 ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பியூர் EV நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்து சிதறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் பியூர் EV ஸ்கூட்டர் மாடலை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து சிதறியதை அடுத்து 80 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து பேட்டரி ஆரோக்கியத்தை முழுமையாக ஆய்வு செய்ய இருப்பதாக பியூர் EV நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
"பேட்டரியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து, ஏதேனும் பிர்ச்சினைகள் இருந்தால் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்," என பியூர் EV நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிசான் நிறுவனம் தனது டேட்சன் பிராண்டு இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் தனது டேட்சன் பிராண்டை இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேட்சன் ரெடி-கோ மாடலின் உற்பத்தி சென்னையில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ரஷ்யா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் டேட்சன் பிராண்டு ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரு நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் டேட்சன் பிராண்டு ரி எண்ட்ரி கொடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் விடைபெறுவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் பல வாடிக்கையாளர்கள் டேட்சன் பிராண்டின் கோ ஹேச்பேக், கோ பிளஸ் எம்.பி.வி. மற்றும் ரெடி கோ போன்ற மாடல்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே டேட்சன் வாகனங்களை பயன்படுத்துவோருக்கும், எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் சர்வீஸ், உதிரி பாகங்கள் மற்றும் வாரண்டி சப்போர்ட் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என டேட்சன் பிராண்டு அறிவித்து இருக்கிறது.
"நிசான் நிறுவனத்தின் சர்வதேச தோற்றத்தை அடியோடு மாற்றும் இலக்கை அடையும் வகையில், நிசான் நிறுவனம் வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் வியாபாரத்திற்கு அதிக பலன்களை ஈட்டித் தரும் வாகனங்கள் மற்றும் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சென்னை ஆலையில் நடைபெற்று வந்த டேட்சன் ரெடி-கோ மாடலின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. எனினும், விற்பனை தொடர்ந்து நடைபெறும்."
"வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதே எங்களின் மிக முக்கிய குறிக்கோள் என்பதை எதிர்கால டேட்சன் வாடிக்கையாளர்களிடமும் தெரிவித்து கொள்கிறோம். இது எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். சந்தையில் இருந்து மெல்ல விடைபெற்றாலும், வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக சர்வீஸ், உதிரிபாகங்களை தொய்வின்றி வழங்குவது மற்றும் வாரண்டி சேவையை எங்களின் தேசிய அளவிலான டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் நிச்சயம் வழங்குவோம்." என நிசான் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டூரிங் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2022 கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2022 ஹோண்டா கோல்டு விங் டூர் மாடல் விலை ரூ. 39 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வினியோகம் அடுத்த சில வாரங்களில் துவங்க இருக்கிறது.
2022 ஹோண்டா கோல்டு விங் மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டூயல் எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், இருபுறமும் பாலிஷ்டு ஆப்டிக்கல் லென்ஸ்கள் உள்ளன. மேலும் லோ காண்டிராஸ்ட் நிறங்கள் மற்றும் டார்க் டோன்கள் இந்த பைக்கிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. பிரீமியம் டச் இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரிலும் பிரதிபலிக்கிறது.
புதிய டூரர் மாடலில் 7 இன்ச் ஃபுல் கலர் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கிரீனின் பிரைட்னஸ் தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. இதற்கென எட்டு லெவல் பிரைட்னஸ் செட்டிங் உள்ளது.

இத்துடன் ஸ்மார்ட் கீ, குரூயிஸ் கண்ட்ரோல், 21 லிட்டர் ஃபியூவல் டேன்க் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. புதிய கோல்டு விங் டூர் மாடலில் 1,833சிசி, லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், 24 வால்வு SOHC ஃபிளாட்-6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 126 ஹெச்.பி. திறன், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த என்ஜினுடன் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன், டூர், ஸ்போர்ட், இகோன், ரெயின் என நான்கு வித ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் இன்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.






