search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    டேட்சன் கார்
    X
    டேட்சன் கார்

    இந்திய சந்தையில் இருந்து விடைபெறும் டேட்சன் பிராண்டு

    நிசான் நிறுவனம் தனது டேட்சன் பிராண்டு இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    நிசான் இந்தியா நிறுவனம் தனது டேட்சன் பிராண்டை இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேட்சன் ரெடி-கோ மாடலின் உற்பத்தி சென்னையில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    முன்னதாக ரஷ்யா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் டேட்சன் பிராண்டு ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரு நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் டேட்சன் பிராண்டு ரி எண்ட்ரி கொடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் விடைபெறுவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     டேட்சன் கார்

    இந்திய சந்தையில் பல வாடிக்கையாளர்கள் டேட்சன் பிராண்டின் கோ ஹேச்பேக், கோ பிளஸ் எம்.பி.வி. மற்றும் ரெடி கோ போன்ற மாடல்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே டேட்சன் வாகனங்களை பயன்படுத்துவோருக்கும், எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் சர்வீஸ், உதிரி பாகங்கள் மற்றும் வாரண்டி சப்போர்ட் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என டேட்சன் பிராண்டு அறிவித்து இருக்கிறது. 

    "நிசான் நிறுவனத்தின் சர்வதேச தோற்றத்தை அடியோடு மாற்றும் இலக்கை அடையும் வகையில், நிசான் நிறுவனம் வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் வியாபாரத்திற்கு அதிக பலன்களை ஈட்டித் தரும் வாகனங்கள் மற்றும் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சென்னை ஆலையில் நடைபெற்று வந்த டேட்சன் ரெடி-கோ மாடலின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. எனினும், விற்பனை தொடர்ந்து நடைபெறும்."

    "வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதே எங்களின் மிக முக்கிய குறிக்கோள் என்பதை எதிர்கால டேட்சன் வாடிக்கையாளர்களிடமும் தெரிவித்து கொள்கிறோம். இது எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். சந்தையில் இருந்து மெல்ல விடைபெற்றாலும், வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக சர்வீஸ், உதிரிபாகங்களை தொய்வின்றி வழங்குவது மற்றும் வாரண்டி சேவையை எங்களின் தேசிய அளவிலான டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் நிச்சயம் வழங்குவோம்." என நிசான் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×