search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    நிதின் கட்கரி
    X
    நிதின் கட்கரி

    அங்கிருந்து இறக்குமதி செய்யக் கூடாது - டெஸ்லாவுக்கு புது செக் வைத்த மத்திய அரசு!

    டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.


    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞஅசாலை துறை மந்திரி நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடை ஒன்றை கட்டமைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். மேலும் டெஸ்லா நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

    "எலான் மஸ்க் கார்களை இங்கு உற்பத்தி செய்ய தயாராக இருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது... இந்தியாவுக்கு வந்து, உற்பத்தியை தொடங்குங்கள், இந்தியா மிகப் பெரும் சந்தை இங்கிருந்து அவர்கள் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய நினைத்தால், இந்தியாவுக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்காது," என நிதின் தெரிவித்து இருக்கிறார். 

     டெஸ்லா

    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் இதனை சாத்தியப்படுத்த இறக்குமதி வரிகள் அடிப்படையில் அதிக செலவாகும் என்பதால் டெஸ்லாவின் இந்திய வருகை தாமதமாகிக் கொண்டே வருகிறது. 

    தற்போது இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான லேண்டிங் கட்டணம் (காரின் விலை மற்றும் டெலிவரி கட்டணங்கள்) சேர்த்து 40 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30.6 லட்சம் வரை செலவாகும். 

    Next Story
    ×