என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    பாரத் பெட்ரோலியம்
    X
    பாரத் பெட்ரோலியம்

    நாட்டில் EV சார்ஜிங்கை மேம்படுத்த ரூ. 200 கோடி முதலீடு - பாரத் பெட்ரோலியம் அதிரடி!

    பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிரடி திட்டம் தீட்டி இருக்கிறது.


    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்தும் நோக்கிலும், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரூ. 200 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த நிதியாண்டுக்குள், ரூ. 200 கோடி முதலீட்டில் நாடு முழுக்க 100 சார்ஜிங் மையங்களில் சுமார் 2 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2023 ஆண்டிற்குள் நாட்டின் மிக முக்கிய நெடுஞ்சாலைகளில் 2 ஆயிரம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

     பாரத் பெட்ரோலியம் EV சார்ஜிங் நெட்வொர்க்

    சமீபத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்து பெட்ரோல்  பங்க்களில் அமைத்தது. 900 கிலோமீட்டர்கள் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அமைந்து இருக்கும் பெட்ரோல் பங்க்களில் பாரத் பெட்ரோலியம் சார்பில் CCS-2 DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

    நாடு முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளில் சீரான இடைவெளியில் CCS-2 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும்.
    Next Story
    ×