என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    டுகாட்டி நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் மல்டிஸ்டிராடா வி4 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.

    டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 விலை ரூ. 18.99 லட்சம், வி4 எஸ் விலை ரூ. 23.10 லட்சம் மற்றும் வி4 எஸ் அவியேட்டர் கிரே விலை ரூ. 23.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாடல்கள் விலையும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4

    புதிய மல்டிஸ்டிராடா வி4 எஸ் ஸ்போர்ட் வேரியண்டாகவும் கிடைக்கிறது. எனினும், இந்த மாடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவில்லை. இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகிறது. மல்டிஸ்டிராடா வி4 டுகாட்டி ரெட் நிறத்திலும், வி4 எஸ் மாடல் டுகாட்டி ரெட் மற்றும் அவியேட்டர் கிரே நிறங்களிலும் கிடைக்கின்றன.

    புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிள் 1158சிசி வி4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 167 பி.ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டுகாட்டி குவிக் ஷிப்ட் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரெனால்ட் டஸ்டர் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டு புதிய தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் டஸ்டர் மாடல் 2012 வாக்கில் களமிறங்கியது.

    அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் புதிய டஸ்டர் மாடல் அமோக வரவேற்பை பெற்றது. பின் பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாவது, புது அப்டேட்களை பெறுவது போன்ற காரணங்களால் டஸ்டர் விற்பனை சரிய துவங்கியது. பி.எஸ். 6 அப்டேட் செய்யப்பட்டதும் டஸ்டர் மாடலில் டீசல் என்ஜின் மற்றும் AWD  வேரியண்ட் விற்பனையை ரெனால்ட் நிறுத்தியது.

     ரெனால்ட் டஸ்டர்

    அந்த வரிசையில், தற்போது விற்பனை செய்யப்படும் டஸ்டர் மாடல் உற்பத்தியை அக்டோபர் 2021 மாதத்தில் நிறுத்த ரெனால்ட் திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

    புதிய தலைமுறை டஸ்டர் மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய டஸ்டர் மாடல் 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 154 பி.ஹெச்.பி. பவர், 105 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன.
    யமஹா நிறுவனத்தின் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


    யமஹா நிறுவனம் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லிமிடெட் எடிஷன் விலை ரூ. 1.36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய யமஹா FZ25 முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த மாடலின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது.

     யமஹா FZ25 மோட்டோ ஜிபி எடிஷன்

    புதிய FZ25 மோட்டோ ஜிபி எடிஷனின் பியூவல் டேன்க், சைடு பேனல்களில் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோடடோ ஜிபி எடிஷன் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும். FZ25 மட்டுமின்றி இதர ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் மோட்டோ ஜிபி எடிஷனை அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

    கிராபிக்ஸ் தவிர யமஹா FZ25 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி யமஹா FZ25 மாடலில் 249சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.5 பி.ஹெச்.பி. பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய XUV700 மாடலுக்கான அம்சங்கள் ஒவ்வொன்றையும் டீசர் வடிவில் மஹிந்திரா வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த காரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    முன்னதாக புதிய தலைமுறை தார் மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்தது. அந்த வகையில் மஹிந்திராவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடலை மஹிந்திரா இந்த தினத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய மஹிந்திரா XUV700 பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     மஹிந்திரா XUV700

    புதிய XUV700 மாடலில் - பிளஷ் கைப்பிடிகள், ஸ்கை-ரூப் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ ஹெட்லேம்ப் இன்டென்சிட்டி பூஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இத்துடன் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், ரேடார் சார்ந்து இயங்கும் குரூயிஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட இருக்கிறது.

    மஹிந்திரா தனது XUV700 மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின்களை வழங்க இருக்கிறது. இவை முறையே 200 பி.ஹெச்.பி. பவர், 185 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய கிளாமர் XTEC மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் XTEC மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிளாமர் XTEC விலை ரூ. 78,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்- டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹீரோ கிளாமர் XTEC மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹீரோ கிளாமர் XTEC டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 83,500, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் கிளாசி பிளாக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மேம்பட்ட கிராபிக்ஸ், எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜர் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

     ஹீரோ கிளாமர் XTEC

    புதிய ஹீரோ கிளாமர் XTEC மோட்டார்சைக்கிளில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 30எம்.எம். டெலிஸ்கோபிக் யூனிட், பின்புறம் 5 ஸ்டெப் ட்வின் அட்ஜஸ்ட் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் i3S, ஆட்டோ செயில் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய கிளாமர் XTEC மாடலின் இருசக்கரங்களிலும் 18 இன்ச் அலாய் மற்றும் 100/80 டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா நெக்சான் இவி மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. ஜூன் 2021 மாதத்தில் நெக்சான் இ.வி. மாடல் 650 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 33.7 சதவீதம் அதிகம் ஆகும். 

    இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இவி மட்டும் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 2021 மே மாதத்தில் எம்.ஜி. இசட்.எஸ். 102 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதைத் தொடர்ந்து எம்.ஜி. இசட்.எஸ். இவி மாடல் 250 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் 27.3 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

     டாடா நெக்சான் இவி

    டாடா டிகோர் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி மாடல்கள் முறையே 8 மற்றும் 7 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமானது முதல் நெக்சான் இ.வி. மாடல் இதுவரை 5500 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. நெக்சான் இவி மாடலில் 30.2kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 127 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்ஷன் வழங்கப்படுகிறது.
    சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
     

    ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான சுசுகி மோட்டார் கார்ப் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2025 வாக்கில் களமிறங்க இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் காம்பேக்ட் மாடலை சுசுகி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

     சுசுகி கார்

    எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் காம்பேக்ட் கார்கள் பிரிவில் கவனம் செலுத்த சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாருதி சுசுகி இருக்கிறது. இந்திய விற்பனையில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
    மஹிந்திரா நிறுவனம் கோளாறு ஏற்பட்டதால் டீசல் கார் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த 600 டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது. பாதிக்கப்பட்ட கார்களின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ரீகால் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மாடல்கள் ஜூன் 21 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

     மஹிந்திரா கார்

    இந்த பாதிப்பு எந்தெந்த மாடல்களில் ஏற்பட்டுள்ளது என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மஹிந்திரா தொடர்பு கொண்டு காரை இலவசமாக சரி செய்து கொடுக்கும். மஹிந்திராவின் நாசிக் ஆலையில் தார், ஸ்கார்பியோ, மராசோ மற்றும் XUV300 போன்ற மாடல்களை உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ மாடலை அறிமுகம் செய்தது. மேலும் XUV700 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் C 400 GT ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் C 400 GT ஸ்கூட்டருக்கான முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட மையயங்களில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சில பி.எம்.டபிள்யூ. விற்பனையாளர்கள் ஸ்கூட்டருக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

     பி.எம்.டபிள்யூ. C 400 GT

    ஏற்கனவே இந்த மேக்சி ஸ்கூட்டர் சர்வதேச ச்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 350சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் 2021 பி.எம்.டபிள்யூ. C 400 GT விலை ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வேறு எந்த ஸ்கூட்டரும் விற்பனை செய்யப்படவில்லை.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQC எலெக்ட்ரிக் மாடல் விலையை ரூ. 4.7 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. அதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் EQC துவக்க விலை ரூ. 1.04 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் EQC

    செப்டம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் EQC இரண்டாம் கட்ட யூனிட்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு மார்ச் மாத வாக்கில் துவங்கியது. இவற்றின் வினியோகம் அடுத்த சில மாதங்களில் துவங்கும் என தெரிகிறது. பென்ஸ் EQC மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 471 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் EQC மாடல் 405 பி.ஹெச்.பி. பவர், 765 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 180 கிலோமீட்டரில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும்.
    டி.வி.எஸ். நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

     
    இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான டி.வி.எஸ். மோட்டார் விரைவில் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பலப்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

     டி.வி.எல். க்ரியான்

    முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் க்ரியான் எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பிரீமியம் பிரிவில் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    டி.வி.எஸ். க்ரியான் மாடல் அந்நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகளில் சுமார் 500 பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. டி.வி.எஸ். க்ரியான் மாடலில் 12 kW லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் எட்டிவிடும்.

    ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அல்காசர் மாடல் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான முதல் மாதத்திலேயே அல்காசர் மாடல் முன்பதிவில் 11,600 யூனிட்களை கடந்துள்ளது. 

    கிரெட்டா மாடலை தழுவி பெரிய வீல்பேஸ் கொண்டு உருவாகி இருக்கும் ஹூண்டாய் அல்காசர் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. தற்போது முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் 11,600 யூனிட்களில் 5 ஆயிரத்து 600 யூனிட்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுவிட்டன. 

     ஹூண்டாய் அல்காசர்

    ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவு ஜூன் 9 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் அல்காசர் மாடல் துவக்க விலை ரூ. 16.3 லட்சம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். 

    புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 157 பிஹெச்பி பவர் வழங்குகிறது. டீசல் மோட்டார் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
    ×