என் மலர்
ஆட்டோமொபைல்
- 150cc திறன் கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது
யமஹா நிறுவனம் FZ-S Fi ஹைப்ரிட் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ள 150cc திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ₹1.45 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
யமஹா FZ-S Fi ஹைப்ரிட் பைக் ரேசிங் ப்ளூ மற்றும் சியான் மெட்டாலிக் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் என்ஜின் 7,250 ஆர்.பி.எம். இல் 12.2 குதிரைத்திறனையும் 5,500 ஆர்.பி.எம். இல் 13.3 Nm டார்க் விசையையும் வெளிப்படுத்தும்.
- உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லிமிட்டட் எடிசனாக உருவாகியுள்ள உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன.
- மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபடா' (FADA) தெலுங்கானா தவிர்த்து நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 13 லட்சத்து 53 ஆயிரத்து 280 இருசக்கர வாகனங்கள், 94 ஆயிரத்து 181 ஆட்டோ, 3 லட்சத்து 3 ஆயிரத்து 398 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 65 ஆயிரத்து 574 டிராக்டர்கள், 82 ஆயிரத்து 763 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என மொத்தம் 18 லட்சத்து 99 ஆயிரத்து 196 வாகனங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 17.12 சதவீதம் வாகனங்கள் குறைவாக பதிவாகி உள்ளன. இதேபோல கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் 20 லட்சத்து 46 ஆயிரத்து 328 வாகனங்கள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7.19 சதவீதம் சரிந்திருக்கிறது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், ''நாங்கள் நடத்திய முந்தைய ஆய்வின்படி பிப்ரவரி மாதம் வாகனங்களின் பதிவு குறைவாக இருக்கும் என்று கணித்திருந்தோம். அதன்படியே அனைத்து பிரிவுகளிலும் வாகனங்களின் பதிவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தற்போதைய தேவையை சிறப்பாக சீரமைத்து, இலக்கை அடையும் வகையில் மார்ச் மாதத்தில் வாகனங்களின் பதிவு மேம்படும் என்று கருதுகிறோம்'' என்றார்.
- பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
- கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது.
சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சாதிக்க முடியாது என்று ஜிண்டல் குழும நிர்வாக இயக்குநர் சாஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சாஜ்ஜன் ஜிண்டால், "எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தால் இந்தியாவில் சாதிக்க முடியாது. ஏனெனில் இந்தியர்களான நாங்கள் இருக்கிறோம். இங்கு டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. அவைகளை பின்னுக்குத் தள்ளி டெஸ்லாவால் ஒருபோதும் சாதிக்க முடியாது.
எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். அவர் பல பிரமிக்கத்தக்கச் செயல்களைச் செய்யலாம். ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ராக்கெட் கூட செலுத்தலாம். ஆனால், இங்கு அவரால் சாதிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
- 2025 பனிகளே V4 பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 2025 பனிகளே V4 பைக்கில் 1,103 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2025 பனிகளே V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 பனிகளே V4 பைக்கின் 1,103 சிசி என்ஜின் 216hp பவருடன் 121Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும்.
- 2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.
- புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்களுக்கு பிரபலமானது வோல்வோ நிறுவனம். இந்நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் என (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதன் முன்புற கிரில் மற்றும் இருபுறமும் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்களுக்குள், ரீ-வொர்க் செய்யப்பட்ட T-வடிவ DRLகளுடன் முன்புக்கம் அதிகளவு புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் தற்போது 20-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உள்புறத்தில் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டம் மற்றும் மசாஜ் வசதிகளுடன் கூடிய பவர்-அட்ஜஸ்டபிள் இருக்கைகள், வண்ண ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், நான்கு-மண்டல காலநிலை கட்டுப்பாடு, போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்கள், 360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் அசிஸ்டண்ட் மற்றும் கூடுதலா பாதுகாப்பு வசதிகளை விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்குகிறது.
2025 வோல்வோ XC90 48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. மைல்ட்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் 250 hp மற்றும் 360 Nm டார்க்கை உருவாக்குகிறது, மேலும் AWD அமைப்புடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
- ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
- ஹீரோ எலெக்ட்ரிக் கடந்த நிதியாண்டில் 11,500 மின்சார பைக்குகளை மட்டுமே விற்பனை செய்தது.
இந்தியாவின் முதல் இ- ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், ரூ.301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
கடந்த டிசம்பர் மாதம் திவால் நடவடிக்கை தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஏலத் தொகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 14ம் தேதி நிறைவடைகிறது.
பாங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் மட்டும் ஹீரோ எலெக்ட்ரிக் ரூ.82 கோடி கடன் வாங்கியுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2023 நிதியாண்டில் 1,00,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் வெறும் 11,500 மின்சார இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
- டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது DesertX Discovery பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
108 hp ஆற்றலுடன் 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் RV BlazeX எலெட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இதன் விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
RV BlazeX ஆனது 3.24 kWh லித்தியம்-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இதில் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை ஓட்டலாம். இந்த பைக் அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் செல்லும்.
ஸ்டெர்லிங் சில்வர் பிளாக் மற்றும் எக்லிப்ஸ் ரெட் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.
வேகமான சார்ஜிங் மூலம், இந்த பைக்கின் பேட்டரியை 80 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் சாதாரணமாக வீட்டில் சார்ஜ் செய்யும்போது 80%-த்தை அடைய தோராயமாக 3 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
- டூரிங் வைசர், பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் கிராஷ் கார்டு ஆகிய அம்சங்கள் இந்த மாடலில் உள்ளன.
- என்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
350 பைக்கின் லெகசி எடிஷனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஜாவா 350 லெகசி எடிஷனை ஜாவா மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் அறிமுக விலையாக முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.99 லட்சம் என்று இந்த பைக்கை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ.16 ஆயிரம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
டூரிங் வைசர், பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் கிராஷ் கார்டு ஆகிய அம்சங்கள் இந்த மாடலில் உள்ளன. இதனுடன் லெதர் கீசெயின் மற்றும் ஜாவா 350 மினியேச்சர் மாடல் ஒன்றும் லெகசி எடிஷனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த பைக்கில் 22.5hp பவர் மற்றும் 28.1Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு என்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த என்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
- ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
- வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் தயாரிப்பில் வெளிவந்துள்ள பல மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது i20 N லைன் இணைந்துள்ளது. ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
i20 N லைன் காரின் விலை குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ. 4,000 அதிகரித்துள்ளது. என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ.4,000 அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் i20 N லைனின் விலை இப்போது ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.56 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கொண்ட 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
- 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
- கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.
இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






