என் மலர்
நீங்கள் தேடியது "Honda Motorcycles"
- ஹோண்டா X-ADV மாடலில் முன்புறம் 17 இன்ச், பின்புறம் 15 இன்ச் ஸ்போக் வீல் பொருத்தப்பட்டுள்ளன.
- இரட்டை LED ஹெட்லைட்கள் மற்றும் DRL கொண்டிருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது இந்தியாவில் X-ADV மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேக்ஸி ஸ்கூட்டர் ஒரு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் கரடுமுரடான உணர்வையும் மேக்ஸி-ஸ்கூட்டரின் நடைமுறைத் தன்மையையும் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப்களில் X-ADV மேக்ஸி ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளையும் ஹோண்டா தொடங்கியுள்ளது. மேலும் ஜூன் மாதம் முதல் இந்த பைக்கிற்கான டெலிவரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹோண்டா X-ADV: எஞ்சின் மற்றும் பவர்டிரெயின்
ஹோண்டா X-ADV மாடலில் 745cc லிக்விட் கூல்டு SOHC 8-வால்வு பேரலல்-ட்வின் எஞ்சினைப் பெறுகிறது. மேலும் இது 6,750 RPM இல் 57 hp பவர் மற்றும் 4,750 RPM இல் 69 Nm டார்க்-ஐ உற்பத்தி செய்கிறது.
ஹோண்டா X-ADV: வடிவமைப்பு மற்றும் வன்பொருள்
அட்வென்ச்சர் மாடலுக்கு ஏற்ற வகையில் புதிய X-ADV இன் ஒட்டுமொத்த வடிவமைப்பில் ஹோண்டா கவனம் செலுத்தியுள்ளது. இது இரட்டை LED ஹெட்லைட்கள் மற்றும் DRL கொண்டிருக்கிறது.
ஹோண்டா X-ADV மாடலில் முன்புறம் 17 இன்ச், பின்புறம் 15 இன்ச் ஸ்போக் வீல் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 41 மிமீ USD ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அசெம்பிளி கொண்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறம் 296 மிமீ டிஸ்க்குகளுடன் கூடிய டூயல் ரேடியல் மவுண்ட் 4-பிஸ்டன் காலிப்பர்களும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க்குடன் கூடிய சிங்கிள்-பிஸ்டன் காலிபரும் அடங்கும்.

ஹோண்டா X-ADV: அம்சங்கள்
ஹோண்டா X-ADV-யில் USB டைப்-சி சார்ஜிங் போர்ட், 5-இன்ச் முழு-வண்ண TFT டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும், ஹோண்டா ரோட்-சின்க் செயலி இணைப்பு, ரைடர்கள் அழைப்புகள் மற்றும் SMS எச்சரிக்கைகளைப் பெறவும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இசை மற்றும் குரல் கட்டளைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இது ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், நான்கு ரைட் மோட்கள் - ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், ரெயின் மற்றும் கிராவல் போன்றவைகளை பெறுகிறது. மாறுபட்ட சாலை நிலைகளில் உகந்த இழுவைக்காக ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்பையும் பெறுகிறது.
ஹோண்டா X-ADV: விலை
ஹோண்டா X-ADV இந்தியாவில் ரூ.11.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.












