என் மலர்

  செய்திகள்

  ஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது
  X

  ஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் X பிளேடு ஏ.பி.எஸ். வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்தது. #Honda #motorcycle  ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது X பிளேடு மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். விலை ரூ.87,776 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏ.பி.எஸ். இல்லாத ஹோன்டா X பிளேடு மாடலை விட ரூ.8000 வரை அதிகம் ஆகும்.

  இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்போர்ட் தோற்றத்தில், அதிரடி அம்சங்களுடன் X பிளேடு மோட்டார்சைக்கிள் அறிமுகமானது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

  புது ஏ.பி.எஸ். பாதுகாப்பு தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹோன்டா X பிளேடு மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், டூயல் அவுட்லெட் போர்ட் சைலென்சர், லின்க்-டைப் கியர் ஷிஃப்டர், ஸ்ப்லிட் கிராப்-ரெயில்கள், அலாய் வீல், .ஹக்கர் ஃபெண்டர் மற்றும் மஸ்குலார் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.  ஹோன்டா X-பிளேடு மோட்டார்சைக்கிளில் 162.71. சிசி HET என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13.93 பி.ஹெச்.பி. @ 8500 ஆர்.பி.எம்., 13.9 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர செயல்திறன் வழங்குமளவு புதிய என்ஜின் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

  இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்- சர்வீஸ் டியூ இன்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 1347 மில்லிமீட்டர் வீல்பேஸ், அகலமான 130 செக்ஷன் டியூப்லெஸ் பின்புற டையர் வழங்கப்பட்டுள்ளது. 

  புதிய ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சுசுகி ஜிக்சர் மற்றும் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. #Honda #motorcycle
  Next Story
  ×